CATEGORIES
فئات
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்வு: தமிழக அரசு
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக உள்துறை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு
தமிழகத்தில் 41 சிலைகள் கடத்தல் தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரத்தில் வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலை என்ன என்பது குறித்த விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்து மாநில உள்துறை செயலாளர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஜன. 6-இல் சட்டப்பேரவை கூடுகிறது
ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்
இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேரன்மகாதேவியில் சட்டக் கல்லூரி மாணவர் கொலை
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வெள்ளிக்கிழமை சட்டக் கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை நீதிமன்றம் முன் இளைஞர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது
பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு பழிக்குப் பழி யாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக கூட்டணி வசமாகும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
குரூப் 2, 2-ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2 மற்றும் 2-ஏ முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் உள்பட சில முக்கிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
கோவையில் தடையை மீறி பேரணி: அண்ணாமலை உள்பட 900 பேர் கைது
கோவையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உள்பட 900-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தடயவியல் செவிலியர்களின் தேவை அதிகரிப்பு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம், வன்முறை வழக்கு நடவடிக்கைகளுக்கு தடயவியல் செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளதாக மாநில சிறப்பு புலனாய்வு காவல் துறை உதவி இயக்குநர் எம்.பி.மேரி ஜெயந்தி கூறினார்.
அம்பேத்கர் விவகாரம்: காங்கிரஸ் - விசிக போராட்டம்
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலம் விற்பனை: பெண் கைது
ஆவடி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில் பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
மெட்ரோ ரயில் பணி: அடையாறில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணி காரணமாக அடையாறில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
முதியவரின் சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி: நுண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
முதியவரின் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் உருவான புற்றுநோய்க் கட்டிகளை நுண் துளை அறுவை சிகிச்சை மூலம் சென்னை, வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
காய்ச்சல் பாதிப்புகள்: அரசுக்கு ஒத்துழைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகள், அரசுக்கு பங்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பில் கலைஞர்களுக்கு 'கலா சிகாமணி' விருது
இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு 'கலா சிகாமணி' விருதுகள் வழங்கப்பட்டன.
எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு
எண்ணூரில் சுமார் 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்தை அமைப்பது குறித்து பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் சென்னை எர்ணாவூரில் நடைபெற்றது.
முதல்வர் மருந்தகங்கள் அமைக்க 850 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு
தமிழகத்தில் மூலப்பெயர் (ஜெனரிக்) கொண்ட மருந்து களை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்காக 850-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மஞ்சப் பை விழிப்புணர்வு முகாம்; மேயர் தொடங்கி வைத்தார்
நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, துணிப் பைகளைப் பயன்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப் பை விழிப்புணர்வு முகாமை அம்பத்தூரில் மேயர் ஆர். பிரியா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
மெரீனா உணவுத் திருவிழா மூலம் ரூ. 2 கோடி வருவாய் எதிர்பார்ப்பு
மெரீனா உணவுத் திருவிழா மூலம் ரூ. 2 கோடி வரை வருவாய் எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சிறப்பு இட ஒதுக்கீடுகள், சிறந்த தரவரிசை: சென்னை ஐஐடி-யின் ஓராண்டு செயல்பாடுகள் வெளியீடு
சென்னை ஐஐடி கடந்த ஓராண்டில் மேற்கொண்ட செயல்பாடுகள், படைத்த சாதனைகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் கல்லூரி மாணவர்களை தன்னார்வ ஆசிரியர்களாக பங்கேற்க உயர் கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலையப் பணிகள் விரைவில் தொடங்கும்
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: கூட்டுக் குழுவுக்கு பரிந்துரை
மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறையை அமல்படுத்துவதற்கான இரு மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்யப்பட்டது.
துனிசியா: அகதிகள் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு
துனிசியாவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உச்சம் தொட்ட தங்க இறக்குமதி: தரவுகளை மறு ஆய்வு செய்யும் அரசு
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் தங்க இறக்குமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெடரல் ரிசர்வ் அறிவிப்பின் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
வட்டி விகிதங்கள் மீதான அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் அறிவிப்பைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 8% உயர்வு
இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிளின் மொத்த விற்பனை கடந்த நவம்பரில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் சமரசத்துக்குத் தயார்: புதின்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப்புடன் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.