CATEGORIES
فئات
தக்காளி கிலோ ரூ.10க்கு விற்பனை
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.
காலிபிளவர் சாகுபடியில் விளைச்சலை எதிர்பார்க்கும் விவசாயிகள்
தகுந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், நடப்பு சீசனில், காலிபிளவர் சாகுபடியில், நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், உடுமலை பகுதி விவசாயிகள் உள்ளனர்.
பலத்த மழையால் நெல் மூட்டைகள் சேதம்
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுக்குப்பம், தேத்தாம்பட்டு, பேரூர், மதகளிர் மாணிக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.
திண்டுக்கல்லில் வாழை இலை விலை கடும் உயர்வு
திண்டுக்கல் மாவட்டம், குடகனாறு சுற்று வட்டார கிராமங்களான சித்தையன்கோட்டை, ஆத்தூர், அகரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பரவலாக மழை குற்றாலத்தில் வெள்ளம்
தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. சென்னை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மேகமூட்டம் ஏற்பட்டுள்ளது.
வெற்றிலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்தி வேலூர் வெற்றிலை சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தர நிர்ணய அமைப்பின் செயல்பாடுகள் அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு
இந்திய தரநிர்ணய அமைப்பின் செயல்பாடுகளை மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.
மிளகாய் விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு
மிளகாய் விளைச்சல் அதிகரிப்பால் விலை தொடர் சரிவை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் கலையில் உள்ளனர்.
சின்ன வெங்காயம் விலை கடும் உயர்வு
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், சின்ன வெங்காயம் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், வேர் அழுகல் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வேளாண் சூழலியியல் பகுப்பாய்வு மற்றும் நெற்பயிரில் சூழலியியல் கட்டமைப்பு குறித்த பண்ணைப்பள்ளி
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டார வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேளாண் சூழலியியல் பகுப்பாய்வு மற்றும் நெற்பயிரில் சூழலியியல் கட்டமைப்பு குறித்த பண்ணைப்பள்ளியானது குன்னத்தூர் கிராமத்தில் 19.02.2020 அன்று நடைபெற்றது. இப்பண்ணைப்பள்ளியானது நெற்பயிரில் விதை முதல் அறுவடை வரையிலான ஆறு வகுப்புகளைக் கொண்டுள்ள பண்ணைப் பள்ளியாகும்.
கொப்பரை விலை கிலோ ரூ.136.50 ஆக உயர்வு
தேங்காய் சீசன் துவங்கிய நிலையில், நேற்று முன்தினம் கொப்பரை கிலோ, 136.50 ரூபாயாக உயர்ந்தது.
ஏற்றுமதியால் வெங்காயம் விலை உயர்வா?
வெங்காய ஏற்றுமதிக்கும், விலை உயர்வுக்கும் சம்மந்தமில்லை என, அதன் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகம் ஏரியை புதுப்பிக்க தமிழக அரசு ஒப்புதல்
மதுராந்தகம் ஏரியை புதுப்பிக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முள்ளங்கி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
முள்ளங்கி வரத்து அதிகரிப்பால், அதன் விலை கிலோ ரூ.5க்கு விற்பனையானது.
மணிமுக்தா அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மணிமுக்தா அணையில் முழு கொள்ளவு தண்ணீர் நிரம்பியுள்ளதால் அணையின் ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பருவம் தவறிய மழையால் காய்கறி விலை உயர்வு
பருவம் தவறிய மழையால், காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, விலை அதிகரித்துள்ளது.
வரும் 21ல் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவுத் திட்டம் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டமாகும். இந்த திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 2ம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 109.695 கி.மீ., 3ம் கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 34.045 கி.மீ. செயல்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கி.மீ. தூரம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.
பானாங்குளம் கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
கடந்த 30 ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் வரத்தால், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பானாங்குளம் கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடப்பு காரீப் பருவத்தில் நெல் கொள்முதல் 16% அதிகம்
நடப்பு காரீப் பருவத்தில் கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தை விட 15.64% அதிக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேன் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகள் தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில், நிகழாண்டு தேன் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகளில் தேனீவளர்ப்போர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல்லில் பருத்தி ரூ.55 லட்சத்துக்கு ஏலம்
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் ஏலம் நடந்தது.
சொட்டு நீர் பாசனத்தில் வாழை விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு
வாழை சாகுபடியில் சொட்டுநீர் பாசனம் பயன்படுத்துவதால், தண்ணீர் சேமிக்கப்பட்டு, விளைச்சலும் அதிகரிப்பதாக தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.
கொள்முதல் மையத்தில் தேங்கிய நெல் விவசாயிகள் அதிருப்தி
அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நெல் கொள்முதல் மையம் துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், விற்பனையாகாமல், அறுவடையான நெல் தேங்கியதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
கருணைக்கிழங்கு விளைச்சலும், விலையும் சரிவு
சிங்கம்புணரியில் கருணைக்கிழங்குகளின் விளைச்சல் குறைந்த நிலையில் விலையும் குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
உணவு பதப்படுத்துதல் தொழிலில் ரூ.363 கோடிக்கு புதிய திட்டங்கள்-மத்திய அரசு ஒப்புதல்
ரூ.363.4 கோடி மதிப்பிலான புதிய உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேக்கம்
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 711 எக்டேர் சம்பா, 38 ஆயிரத்து 765 எக்டேர் தாளடி என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழைக்காலம் முடிந்ததால் மழையின்றி அணைக்கு நீர்வரத்து சரிவடைந்துள்ளது.
தேங்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்னை மரங்களில் காணப்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்
வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
தக்காளி விலை கடும் உயர்வு
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தக்காளி விலை, ஒரே நாளில், ரூ.100 உயர்ந்துள்ளது.