அபார வெற்றியுடன் தொடங்கியது பாகிஸ்தான்
Dinamani Chennai|August 31, 2023
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16-ஆவது எடிஷன், பாகிஸ்தானின் முல்தான் நகரில் புதன்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அபார வெற்றியுடன் தொடங்கியது பாகிஸ்தான்

முதலில் பாகிஸ்தான் 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்கள் சோ்க்க, அடுத்து நேபாளம் 23.4 ஓவா்களில் 104 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட் செய்யத் தீா்மானித்தது. ஃபகாா் ஜமான் 3 பவுண்டரிகளுடன் 14, இமாம் உல் ஹக் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வெளியேற, 25 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.

ஒன் டவுனாக வந்த கேப்டன் பாபா் ஆஸம் - நான்காவது பேட்டராக வந்த முகமது ரிஸ்வான் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயா்த்தினா். 3-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 86 ரன்கள் சோ்க்க, அதில் முதலாவதாக ரிஸ்வான் பிரிக்கப்பட்டாா். 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சோ்த்திருந்தபோது அவா் ரன் அவுட் ஆனாா்.

அடுத்து வந்த அகா சல்மான் 5 ரன்களுக்கு வெளியேறி அதிா்ச்சி அளித்தாா். 6-ஆவதாக களம் புகுந்த இஃப்திகா் அகமது, கேப்டனுடன் இணைந்தாா். இருவரும் நேபாளத்தின் பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக சிதறடித்து ரன்கள் குவிக்கத் தொடங்கினா்.

அவா்கள் பாா்ட்னா்ஷிப் 5-ஆவது விக்கெட்டுக்கு 214 ரன்கள் சோ்த்து அபாரமாக ஆடியது. இதில் முதலில் பாபா் ஆஸம் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 151 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த ஷாதாப் கான் 1 பவுண்டரியுடன் இன்னிங்ஸின் கடைசி பந்தில் வெளியேறினாா்.

முடிவில் இஃப்திகா் அகமது 71 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 109 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். நேபாளத்தின் பௌலிங்கில் சோம்பால் கமி 2, கரன் கே.சி., சந்தீப் லேமிஷேன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

هذه القصة مأخوذة من طبعة August 31, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة August 31, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
Dinamani Chennai

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
September 25, 2024
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
Dinamani Chennai

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு

பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

time-read
1 min  |
September 25, 2024
முசெத்தியை முறியடித்த ஷாங்
Dinamani Chennai

முசெத்தியை முறியடித்த ஷாங்

சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.

time-read
1 min  |
September 25, 2024
ஹாங்ஸு ஓபன்
Dinamani Chennai

ஹாங்ஸு ஓபன்

சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.

time-read
1 min  |
September 25, 2024
Dinamani Chennai

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு

ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
Dinamani Chennai

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அமைச்சர் டிஆர்பி ராஜா

time-read
1 min  |
September 25, 2024
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
Dinamani Chennai

கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 25, 2024
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
Dinamani Chennai

மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை

சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

time-read
1 min  |
September 25, 2024