CATEGORIES
فئات
ராஜஸ்தான்: எரிவாயு லாரி விபத்தில் உயிரிழப்பு 14–ஆக உயர்வு
ராஜஸ்தானில் ஜெய்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் லாரி மற்றொரு லாரியுடன் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சனிக்கிழமை 14-ஆக உயர்ந்தது.
இந்திய தொழிலதிபர் ரவி பிள்ளைக்கு பஹ்ரைனின் உயரிய விருது
இந்திய தொழிலதிபர் ரவி பிள்ளைக்கு பஹ்ரைன் நாட்டின் உயரிய விருதான 'மெடல் ஆஃப் எஃபிஷியன்ஷி' வழங்கப்பட்டது.
ஐ.நா.வில் முதலாவது உலக தியான தினம்
முதலாவது உலக தியான தினம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் சனிக்கிழமை (டிச. 21) கடைப்பிடிக்கப்பட்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை சேர்க்க ரஷியா ஆதரவு
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா சேர வதற்கு ஆதரவளிப்பதாக ரஷியா உறுதிபட தெரிவித்துள்ளது.
மும்பை படகு விபத்து
7 வயது சிறுவன் உடல் மீட்பு; உயிரிழப்பு 15-ஆக அதிகரிப்பு
காவல்துறை அனுமதி மறுத்தும் அத்துமீறி திரையரங்கம் சென்ற அல்லு அர்ஜுன்
புஷ்பா-2 திரைப்படத்தின் முதல்நாள் வெளியீட்டின்போது காவல்துறை அனுமதி மறுத்தும் நடிகர் அல்லு அர்ஜுன், திரையரங்குக்கு அத்துமீறி சென்றதாக தெலங்கானா சட்டப்பேரவையில் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டினார்.
உள்நாட்டில் 40 கோடி பேர் புலம்பெயர்வு: 12% சரிவு
உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 40.2 கோடியாக சுமார் 12 சதவீதம் சரிந்துள்ளது.
பஞ்சாப்: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து
5 பேரை மீட்கும் பணி தீவிரம்
மாநிலங்களவையில் 30% நேரம் பேசிய தன்கர்
திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
பரஸ்பர நம்பிக்கையே திருமண உறவின் அடித்தளம்
விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
மின் விபத்தில் உயிரிழப்பு நிவாரணம் ரூ. 10 லட்சமாக உயர்வு
பொது இடங்களில் மின் விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக மின்வாரியம் உயர்த்தியுள்ளது.
தமிழகத்தின் உரிமைகள்: மத்திய அரசுக்கு மக்கள் மீண்டும் பதிலடி கொடுப்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு தராவிட்டால், தமிழக மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பர் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான மறு ஆய்வு மனு தள்ளுபடி
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தியாவின் திறன்மிகு பணியாளர்களுக்கு உலகெங்கிலும் வாய்ப்பு
இந்தியாவின் திறன்மிகு பணியாளர்களுக்கு உலகின் பல்வேறு நாடுகள் வாயில் கதவைத் திறந்துள்ளன. அந்த நாடுகளில் இந்தியப் பணியாளர்களின் நலனை உறுதி செய்யும் ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2-ஆம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம்: ரூ. 7,955 கோடியில் விரைவில் தொடங்கப்படும்
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ. 7,955.37 கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் 2-ஆம் கட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கிவைப்பார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 26,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்
சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ. 26,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்ச் சமூகத்திற்கே விருது!
ரதியியல், வ.உ.சி. இயல், புது இயல் ஆகிய களங்களில் தனித்தன்மை கொண்ட வகையிலும் முன்னோடி நிலையிலும் அரும்பணிகளை ஆற்றிய ஆளுமைகளுள் தனித்துக் குறிப்பிடத்தக்கவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
சூலையின் திருக்கு!
கம்பனின் தமிழமுதம் - 24
திமுகவின் ஒரு பிரிவாக காவல் துறை செயல்படுகிறது
திமுகவின் ஒரு பிரிவாக காவல் துறை செயல்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
விவசாயிகளை திரட்டி சென்னையில் விரைவில் முற்றுகைப் போராட்டம்
ராமதாஸ் அறிவிப்பு
நெல்லை நீதிமன்றம் அருகில் கொலை கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க நெல்லை காவல் துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடியக்கரை அருகே 3 மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அருகே கடலில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த 3 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செந்தூர் எக்ஸ்பிரஸ் பேரழிவை தடுத்த ரயில்வே அதிகாரி, 8 பேருக்கு ரயில் சேவைக்கான மிக உயரிய விருது
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக் கிய செந்தூர் எக்ஸ்பிரஸை பேரழிவிலிருந்து தடுத்த ரயில்வே அதிகாரி உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 9 பேருக்கு ரயில் சேவைக்கான மிக உயரிய விருதான அதி விஷிஷ்ட ரயில் சேவை விருதை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை வழங்கினார்.
பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரம்: ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேடுதல் குழு விவகாரத்தில் சட்டவிதிகளின் படி நடக்கலாமே தவிர ஆளுநர் விருப்பப்படி எல்லாம் செய்ய முடியாது என்று மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
ஜாபர் சாதிக் வழக்கில் நீதிபதி விலகல்
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
புகழ்பாடும் மன்றமாக பேரவை மாறிவிட்டது: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவை புகழ்பாடும் மன்றமாக மாறிவிட்டது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் கொள்கையில் உறுதியாக இருப்போம்: இபிஎஸ்
சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்போம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வெள்ள பாதிப்புக்கு திமுக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம்
விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.
மணல் கடத்தலை தடுத்த கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மணல் கடத்தலை தடுத்த கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து, லாரியை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
ஒன்றரை வயது குழந்தை கழுத்தறுத்துக் கொலை
தாய் தற்கொலை முயற்சி