கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. பின்னா், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ‘ஜம்மு-காஷ்மீரில் தோ்தலை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகம் இல்லாததை காலவரையின்றி அனுமதிக்க முடியாது. இது முடிவுக்கு வரவேண்டும். எனவே, தோ்தல் எப்போது நடத்தப்படும் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.
இதற்கு மத்திய அரசுத் தரப்பில் பதிலளித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமானதல்ல. அதேவேளையில், யூனியன் பிரதேசமாக லடாக் சிறிது காலம் நீடிக்கும்.
ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்குக்கு வழங்கப்பட்டுள்ள யூனியன் பிரதேச அந்தஸ்தின் வருங்கால நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்தாா்.
தோ்தல் நடத்த தயாா்: இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துஷாா் மேத்தா மத்திய அரசின் பதிலை வாதமாக முன்வைத்தாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு தோ்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. முதலில் ஊராட்சி அமைப்புகளுக்கும், அடுத்து நகராட்சி அமைப்புகளுக்கும், மூன்றாவதாக சட்டப்பேரவைக்கும் என மூன்று கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்படும்.
هذه القصة مأخوذة من طبعة September 01, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 01, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சாட்: 96 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
புதினுடன் டிரம்ப் பேச்சு?: ரஷியா மறுப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் வலியுறுத்தியதாக வாஷிங்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
கரூர் வைஸ்யா வங்கியின் 850-ஆவது கிளை திறப்பு
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.
ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷிகெரு இஷிபா
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி
பேஜர் தாக்குதல்: நெதன்யாகு ஒப்புதல்
லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சேலஞ்சர்ஸில் வாகை சூடினார் பிரணவ்
நிகழாண்டில் 18 வீரர்கள், 36 பேர் உயிரிழப்பு
ஜம்முவின் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் நிகழாண்டில் பிராந்தியத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாகியுள்ளது.
சின்னர் வெற்றி: அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.