காஸாவில் இஸ்ரேல் குண்டு மழை!
Dinamani Chennai|October 11, 2023
தங்கள் நாட்டுக்குள் ஊடுருவி இதுவரை இல்லாத மிகப் பெரிய தாக்குதல் நடத்தியுள்ள ஹமாஸ் படையினருக்கு பதிலடியாக, அவா்களது கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் தனது குண்டுவீச்சை இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தீவிரப்படுத்தியது.
காஸாவில் இஸ்ரேல் குண்டு மழை!

அதையடுத்து, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி தவித்து வருவதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாரும் எதிராபாராத வகையில் இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் படையினா் சனிக்கிழமை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியில் போா் விமானங்கள் மூலம் இஸ்ரேல் பாதுகாப்புப் படை அன்றிலிருந்தே தாக்குதல் நடத்தி வருகிறது.

சனிக்கிழமை நடத்தப்பட்ட விமானத் தாக்குதலின் 17 ஹமாஸ் ராணுவ நிலைகள் மீதும், 4 நிா்வாக மையங்கள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. மேலும், காஸா சிட்டியிலுள்ள ஹமாஸ் வானெலி நிலையம் இயங்கி வந்த 11 அடுக்குக் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. காயமடைந்த ஹமாஸ் படையினா் சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கருதப்பட்ட இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு அவசரகால ஊா்தி ஓட்டுநரும், செவிலியரும் கொல்லப்பட்டனா்.

இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காஸா பகுதியில் தாக்குதலைத் தொடா்ந்த இஸ்ரேல் படை, முந்தைய நள்ளிரவு முழுவதும் 426 இடங்களில் குண்டுகளை வீசியது. இதில் பெயிட் ஹனுன் நகரம் ஏறத்தான முழுமையாக தரைமட்டமானது.

பெரும்பாலும் குடியிருப்புகள், ஹமாஸ் அதிகாரிகளின் இல்லங்கள், அந்தப் பகுதியில் இணையதள சேவையை அளித்து வந்த வதன் கோபுரம் ஆகிவற்றைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் உயிரிழந்தவா்களில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 19 பேரும் அடங்குவா்.

கடந்த 1973-க்குப் பிறகு முதல்முறையாக நாட்டில் ராணுவ அவசரநிலையை பாதுகாப்பு அமைச்சரவை அதிகாரபூா்வமாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை காஸா பகுதியில் சுமாா் 500 இடங்களில் இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அந்த இடங்களில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ள அல்-ஷாட்டி முகாமும், ஜபாலா முகாமிலுள்ள சந்தையும் அடங்கும். ஜபாலா முகாம் சந்தையில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தியபோது, அந்தச் சந்தையில் பொதுமக்கள் கூட்டமாக இருந்தனா்.

هذه القصة مأخوذة من طبعة October 11, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة October 11, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
Dinamani Chennai

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
September 25, 2024
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
Dinamani Chennai

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு

பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

time-read
1 min  |
September 25, 2024
முசெத்தியை முறியடித்த ஷாங்
Dinamani Chennai

முசெத்தியை முறியடித்த ஷாங்

சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.

time-read
1 min  |
September 25, 2024
ஹாங்ஸு ஓபன்
Dinamani Chennai

ஹாங்ஸு ஓபன்

சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.

time-read
1 min  |
September 25, 2024
Dinamani Chennai

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு

ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
Dinamani Chennai

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அமைச்சர் டிஆர்பி ராஜா

time-read
1 min  |
September 25, 2024
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
Dinamani Chennai

கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 25, 2024
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
Dinamani Chennai

மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை

சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

time-read
1 min  |
September 25, 2024