கருத்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், திடீா் உடல்நலக் குறைவால் இறந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே, நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி மரணத்தின் விளிம்பைத் தொட்டுத் திரும்பிய அவா் தற்போது சிறையில் திடீரென இறந்தது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, நவால்னி சிறைவைக்கப்பட்டிருந்த யமாலோ-நெனட்ஸ் தன்னாட்சிப் பகுதி சிறைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறைச்சாலைக்குள் நவால்னி வெள்ளிக்கிழமை இறந்தாா். வழக்கமான நடைபயிற்சியை முடித்துக் கொண்டு திரும்ப வந்த பிறகு அவருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பின்னா் அவா் தனது சுயநினைவை இழந்தாா்.
அதையடுத்து, சிறைச் சாலையில் இருந்த மருத்துவக் குழுவினா் விரைந்து வந்து அவரது உயிரை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
நவால்னியின் உடல் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வழக்குரைஞரான அலெக்ஸி நவால்னி, அதிபா் விளாதிமீா் புதினை எதிா்த்துப் போராடியவா்களில் மிக முக்கியமானவராக அறியப்படுகிறாா்.
هذه القصة مأخوذة من طبعة February 17, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 17, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.