மொத்தம் 29 மக்களவை தொகுதிகளுடன் ஆறாவது பெரிய மாநிலமான இங்கு ஏப்ரல் 19, 26, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
பாஜகவின் வியூகம்: நரேந்திர மோடி என்ற தலைமைத்துவத்தை மட்டுமே துணையாகக் கொண்டு இங்கு தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நிலையான அரசு, வளர்ச்சியடைந்த பாரதம், தொலைநோக்குத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் மாநிலத்தில் ஆளும் பாஜக பிரசாரம் செய்து வருகிறது.
2014-இல் நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமர் வேட்பாளராக மக்களவை தேர்தலை எதிர்கொண்ட நேரத்தில், மத்திய பிரதேசத்தில் உள்ள 29 இடங்களில் 27 இடங்களை பாஜக வென்றது.
அப்போது வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அடுத்து 2019 தேர்தலில் 28 தொகுதிகளில் வென்று தனது நிலையை ஒரு படி மேம்படுத்திக் கொண்டது பாஜக.
2019 தேர்தலில் பாஜக அலைக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் மகன் நகுல் நாத் சிந்த்வாரா தொகுதியில் மட்டுமே வென்றார்.
இதைத்தொடர்ந்து 2023-இல் நடந்த மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 இடங்களில் 163 இடங்களை பாஜக கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
காங்கிரஸ் 66 இடங்களில் மட்டுமே வென்றது.
இங்குள்ள 29 மக்களவை தொகுதிகளில் 10 பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. "இந்தியா' கூட்டணியின் அங்கமாக காங்கிரஸ் அதன் 28 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. கூட்டணியில் உள்ள சமாஜவாதி கட்சிக்கு ஓரிடத்தை காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது.
ஓபிசி வாக்குகள்: இந்த மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மோகன் யாதவை முதல்வராக்கியுள்ளது பாஜக மேலிடம். இதன் மூலம் அவர் சார்ந்த பெரும்பான்மை சமூக வாக்குகளை மக்களவைத் தேர்தலில் கவரலாம் என்று அக்கட்சி மேலிடம் நம்புகிறது.
هذه القصة مأخوذة من طبعة April 11, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة April 11, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து
சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.