
நாட்டில் 18-ஆவது மக்களவையைத் தேர்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகார், ஒடிஸாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு 5-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ள அமேதி, ரேபரேலி உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மக்களவைத் தொகுதிகள் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 54.29 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்க மாநிலத்தில் அதிகபட்சமாக 74.65 சதவீத வாக்குகள் பதிவாகின.
பிகாரில் 54.85 சதவீதம், ஜம்மு-காஷ்மீரில் 56.73 சதவீதம், ஜார்க்கண்டில் 63.07 சதவீதம், ஒடிஸாவில் 67.59 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 57.79 சதவீதம், லடாக்கில் 69.62 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாத அச்சுறுத்துல் அதிகம் இருந்துவந்த ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் இதுவரை இல்லாத வகையில் 59 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 1984-இல் 58.84 சதவீத வாக்குகள் பதிவானதே இந்தத் தொகுதியின் அதிகபட்ச வாக்குப் பதிவாக இதுவரை இருந்துவந்தது.
هذه القصة مأخوذة من طبعة May 21, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 21, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய்: இந்தியா இறக்குமதி
ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்
உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்
தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரான் பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடர்பு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக இந்தியாவைச் சோ்ந்த 4 நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
47 பல் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.

‘போப் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்’
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேளாண் நிதிநிலை அறிக்கை: தமிழக அரசு ஆலோசனை
வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.

உலகிலேயே திறமையான இந்திய கடலோரக் காவல்படை
‘இந்திய கடலோரக் காவல்படை வலிமையான, நம்பகமான மற்றும் உலகின் மிகவும் திறமையான கடல்சாா் பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக வளா்ந்துள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினாா்.