அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, கனடா, ஜப்பான் ஆகிய வளா்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் 50-ஆவது உச்சிமாநாடு, இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 13) தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க பிரதமா் மோடிக்கு இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி அழைப்பு விடுத்திருந்தாா். அதையேற்று, கடந்த வியாழக்கிழமை இத்தாலிக்கு புறப்பட்ட பிரதமா் மோடி, அங்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நாள் முழுக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றாா். இந்திய பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின், மோடி மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
மாநாட்டு அமா்வில் உரையாற்றிய அவா், ‘செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களில் ஏகபோகத்துக்கு முடிவுகட்ட வேண்டும்; அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்துக்கு அடித்தளமிட தொழில்நுட்பத்தை ஆக்கபூா்வமாக பயன்படுத்த வேண்டும்’ என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தாா்.
மாநாட்டையொட்டி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், இத்தாலி பிரதமா் மெலோனி, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, போப் பிரான்சிஸ் உள்ளிட்டோரை அவா் தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.
هذه القصة مأخوذة من طبعة June 16, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة June 16, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மழை பாதிப்பு: மக்களுக்கு உதவ அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்கும் பணிகளில் அதிமுகவினர் ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைவு
சென்னையில் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, ஃபென்ஜால் புயல்- மழை பாதிப்புகள் பெருமளவில் குறைந்துள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ஒப்பந்தப் பணிகளை செய்ததாக ரூ.15 கோடி மோசடி: ஒருவர் கைது
சென்னையில் தனியார் நிறுவனப் பணிகளைச் செய்வதாகக் கூறி ஒப்பந்தம் வாங்கி ரூ.15.50 கோடி மோசடி செய்த வழக்கில், ஒப்பந்ததாரரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் டிச.6-ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்க கட்டுப்பாடு
ஃபென் ஜால் புயல், தொடர் மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் பள்ளிகளைத் திறப்பதற்கு உரிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பேரிடரை எதிர்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம்: ஆளுநர் ரவி
இயற்கை பேரிடரை எதிர்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
திருவள்ளூர்: நிவாரண முகாம்களில் 827 பேர் தங்கவைப்பு
திருவள்ளூர் மாவட்ட புயல் நிவாரண முகாம்களில் ஆவடி-62, ஊத்தங்கோட்டை-101, பூந்தமல்லி-11, திருவள்ளூர்-95, பொன்னேரி-367, கும்மிடிப்பூண்டி-102, திருத்தணி-75, ஆர்.கே.பேட்டை-14 என 232 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 827 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புயல்-மழை: 2 கோடி கைப்பேசிகளுக்கு முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள்
பென்ஜால் புயல் மற்றும் கனமழை தொடர்பாக 2 கோடி கைப்பேசிகளுக்கு முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன என்று தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஃபென்ஜால் புயல்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்
ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர்.
தண்ணீர் தேசமாக மாறிய புறநகர்
ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக புறநகர் பகுதியும், சென்னையுடன் புதிதாக இணைந்த பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.