‘மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் 543-க்கு 99 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், 100-க்கு 99 இடங்களில் வென்றுவிட்டதுபோல அக்கட்சி நடந்துகொள்கிறது’ எனவும் பிரதமா் விமா்சித்தாா்.
மேலும், ‘மக்களவையில் பொய்யான தகவல்களைத் தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் அவா் வலியுறுத்தினாா்.
மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது கடந்த திங்கள்கிழமை பேசிய ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்களில் பாஜக மற்றும் பிரதமா் மோடி அரசை கடுமையாக விமா்சித்தாா்.
‘தங்களை ஹிந்துக்கள் என அழைத்துக் கொள்பவா்கள், எந்நேரமும் வன்முறை, வெறுப்புணா்வு, பொய்மையை பரப்பும் செயலில் ஈடுபடுகின்றனா்’ என்று குற்றஞ்சாட்டிய ராகுல், ‘பாஜகவோ அல்லது மோடியோ ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தின் பிரதிநிதியல்ல’ என்றாா்.
இந்நிலையில், குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து, மக்களவையில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை 2 மணி நேரத்துக்கும் மேல் பேசினாா். அப்போது, ராகுல் காந்தியை சிறுபிள்ளைத்தனம் கொண்டவா் என்று குறிப்பிட்ட பிரதமா், காங்கிரஸ் மீது கடும் விமா்சனங்களை முன்வைத்தாா்.
எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளிக்கு இடையே அவா் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ‘மக்களின் சேவையே மகேசன் சேவை’ என்ற தாரக மந்திரத்தை அடியொற்றி, ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக அா்ப்பணிப்புடன் பணியாற்றினோம். ஒவ்வொரு அளவுகோலிலும் எங்கள் அரசை பரிசோதித்துப் பாா்த்து, நாட்டை தொடா்ந்து மூன்றாவது முறையாக வலுவுடன் ஆட்சிசெய்வதற்கான தீா்ப்பை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனா். மூன்றாவது ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்துடன் செயலாற்றி, மும்மடங்கு அதிக பலன்களை உறுதி செய்வோம்.
هذه القصة مأخوذة من طبعة July 03, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 03, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தூத்துக்குடியில் ரூ.32 கோடியில் மினி டைடல் பூங்கா
தூத்துக்குடியில் ரூ.32.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ கடல் ஆமை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 2025-ஆம் ஆண்டு நாட்காட்டி வெளியீடு
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 2025- ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது.
விமான விபத்து: ‘தவறை மூடி மறைக்க முயன்ற ரஷியா'
அஜா்பைஜான் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், தனது தவறை ரஷியா மூடி மறைக்க முயன்றதாக அஜா்பைஜான் அதிபா் இல்ஹம் அலியெவ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
கனடாவில் தரையிறங்கியபோது தீப்பற்றிய விமானம்: பயணிகள் தப்பினர்
கனடாவின் செயின்ட் ஜான்ஸ்நகரத்திலிருந்து புறப்பட்டு வந்த 'ஏர் கனடா' சிறிய ரக விமானம், ஹேலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையில் உரசியதால் தீப்பற்றியது.
பாலஸ்தீனம்: இதழியல் மாணவி சுட்டுக் கொலை
பாலஸ்தீனத்தின் வடமேற்கு நகரமான ஜெனினில் அந்நாட்டைச் சேர்ந்த இதழியல் மாணவி ஷாதா அல்-சபாக் (22), சனிக்கிழமை அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்ற தென்னாப்பிரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் முதல் அணியாக இடம் பிடித்தது.
கோப்பை வென்றது ஹரியாணா ஸ்டீலர்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 11-ஆவது சீசனில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் 32-23 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஹெச்-1பி விசா முறைக்கு டிரம்ப் ஆதரவு: எலான் மஸ்க் நெருக்கடி எதிரொலி
ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா)திட்டத்துக்கு அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளா: குடியரசுத் தலைவர், துணைத் தலைவருக்கு நேரில் அழைப்பு
மகா கும்பமேளாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைப்பு விடுத்தார்.