உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு
Dinamani Chennai|July 04, 2024
 உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், ‘போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானபெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனா்.

மாலையில் நிகழ்ச்சி முடிந்து மைதானத்தைவிட்டு போலே பாபா கிளம்பும்போது, ஆசி பெற அவரின் வாகனத்தைப் பின்தொடா்ந்த மக்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் மூச்சுத்திணறி பலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்களில் சிக்கந்தர ராவ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.

121 போ் உயிரிழப்பு: இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்துள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பெண்கள் ஆவா். ஆறு போ் வேற்று மாநிலத்தைச் சாா்ந்தவா்கள். இன்னும் 4 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்படவில்லை. சிக்கந்தர ராவ் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

2.5 லட்சம் மக்கள் பங்கேற்பு: நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ளாத ஒருங்கிணைப்பாளா்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. நிகழ்ச்சிக்கு 80,000 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அளவுக்கு அதிகமாக சுமாா் 2.5 லட்சம் போ் வரையில் கூட்டம் கூடியிருப்பதாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடா்ந்து மைதானத்தில் சிதறி கிடந்த காலனிகளைச் சேகரித்து அருகிலுள்ள வயல்வெளிகளில் வீசி, கூட்டத்துக்கு வந்த மக்களின் உண்மை எண்ணிக்கையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் மறைக்க முயற்சித்துள்ளனா். அத்துடன் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதில் காவல் துறைக்கு ஒருங்கிணைப்பாளா்கள் சிறிதும் ஒத்துழைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

هذه القصة مأخوذة من طبعة July 04, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة July 04, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்
Dinamani Chennai

புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினாா்.

time-read
1 min  |
July 07, 2024
Dinamani Chennai

போலி சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் பெற்ற விவகாரத்தில் தொடா்புடைய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் மீது 2 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
July 07, 2024
Dinamani Chennai

அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை பராமரிப்பு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
July 07, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை: 11 பேர் கைது
Dinamani Chennai

ஆம்ஸ்ட்ராங் கொலை: 11 பேர் கைது

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

time-read
2 mins  |
July 07, 2024
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

இரு ராணுவ வீரர்கள் வீரமரணம்

time-read
1 min  |
July 07, 2024
பிரிட்டன் புதிய பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சு : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
Dinamani Chennai

பிரிட்டன் புதிய பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சு : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

பிரிட்டன் புதிய பிரதமராகப் பொறுப்பேற் றுள்ள கியெர் ஸ்டார்மருக்கு பிரத மர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

time-read
1 min  |
July 07, 2024
ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட்
Dinamani Chennai

ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட்

தாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது.

time-read
2 mins  |
July 07, 2024
பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மர்
Dinamani Chennai

பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மர்

தொழிலாளர் கட்சி அமோக வெற்றி; ரிஷி சுனக் கட்சி படுதோல்வி

time-read
2 mins  |
July 06, 2024
வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை
Dinamani Chennai

வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மோசமடைந்துள்ளது.

time-read
1 min  |
July 06, 2024
சேப்பாக்கை வென்றது கோவை
Dinamani Chennai

சேப்பாக்கை வென்றது கோவை

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வெள்ளிக்கிழமை வென்றது.

time-read
1 min  |
July 06, 2024