ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் உறுதிமொழியை பாஜக நிறைவேற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேலும், மத்திய பாஜக ஆட்சியில் ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டு வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மூன்று கட்ட பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப். 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஸ்ரீநகரில் வியாழக்கிழமை நடந்த பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, காஷ்மீரி மொழியில் ‘எனது சகோதர-சகோதரிகளே’ என்று தனது உரையைத் தொடங்கினாா். அவா் பேசியதாவது:
காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய மூன்று ‘குடும்பங்களும்’ தங்களின் சுயநலனுக்காக ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்தன. ஜம்மு-காஷ்மீா் அரசியலை தங்களின் நிலபிரபுத்துவம்போல கருதினா். தங்களின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் முன்னேறினால் அவா்களுக்குப் பிடிக்காது.
குடும்ப ஆட்சிக்கு சவால் ஏற்படும் என்பதால் உள்ளாட்சித் தோ்தலை நடத்தவிடாமல் தடுத்தனா். அவா்களின் சுயநலத்தால், ஜனநாயகம் மீது இளைஞா்கள் நம்பிக்கையிழக்க நேரிட்டது. வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் இந்த மூன்றில் ஒரு குடும்பம்தான் ஆட்சிக்கு வரும் என இளைஞா்கள் விரக்தியடைந்தனா்.
நம்பிக்கை மீட்டெடுப்பு: கடந்த 5 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் நிலைமை பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது. ஜனநாயக நடைமுறை மீதான இளைஞா்களின் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிக்கப்பட்டுவிடும். வீடு வீடாக பிரசாரம் செய்வதெல்லாம் சாத்தியமே கிடையாது. இந்த நிலைதான், காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிக்கு விருப்பமாக இருந்தது.
هذه القصة مأخوذة من طبعة September 20, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 20, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இணைய குற்றப் புலனாய்வில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா புரிந்துணர்வு
இணைய (சைபர்) குற்றப் புலனாய்வு விசாரணையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு கையொப்பமாகியிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமித் ஷாவுடன் மணிப்பூர் ஆளுநர் சந்திப்பு
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
54-ஆவது நாளாக உண்ணாவிரதம்: தல்லேவால் உடல்நிலை கவலைக்கிடம்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாய அமைப்பின் தலைவர் ஜக்ஜீத் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் சனிக்கிழமை 54-ஆவது நாளாக நீடித்தது.
அருந்ததியர் உள்ஒதுக்கீடு சமத்துவத்தை நோக்கி வழிநடத்தும்: தமிழக அரசு
அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டம், சமத்துவத்தை நோக்கி தமிழ்நாட்டை வழிநடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கனடா பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளி எம்.பி. போட்டி
கனடா பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
எடுத்த இடத்தில் வைக்கவும்!
'இந்த வீட்ல வச்ச இடத்தில் எதுவும் ஒரு இருக்காது’ கேட்காத வீடே இல்லை என்று சொல்லி விடலாம். குறிப்பாக தாய்மார்கள் இப்படி த்தான் அங்கலாய்த்துக் கொள்வார்கள்.
சென்னையைத் தொடர்ந்து 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள்: தமிழக அரசு
சென்னையைத் தொடர்ந்து, 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஐடிஎஃப் 50: அங்கிதா-பெயின்ஸ் சாம்பியன்
புது தில்லியில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டபிள்யு 50 டென்னிஸ் போட்டி மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-பிரிட்டனின் பெயின்ஸ் பட்டம் வென்றனர்.
சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணமா?
சென்னை கடற்கரைகளில் 100-க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி எனப்படும் பச்சை நிற ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.
செய்யக் கூடாதன செய்யோம்!
கிட்டமிடாமல் எந்தப் பணியையும் செய்யலாகாது. அப்படிச் செய்யின் அது நன்முறையில் அமையாது என்பது வல்லோர் வகுத்த விதி.