
இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
பெட்ரோலை ஏற்றிக் கொண்டு கானோ மாகாணத்திலிருந்து ஜிகாவா மாகாணத்தின் மாஜியா நகர நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்த லாரி விபத்துக்குள்ளாகி நின்றது. சுமார் 110 கி.மீ. தொலைவுக்கு மேல் அந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் அதன் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து லாரியிலிருந்து கசிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அப்போது அந்த பெட்ரோல் லாரி திடீரென வெடித்துச் சிதறி, மிகப் பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது.
இதில் 97 பேர் உடனடியாக எரிந்து சாம்பலாகினனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களில் மேலும் 50 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பெட்ரோல் லாரி வெடித்து தீ அதிவேகமாக பரவியதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தப்பிச் செல்ல முடியவில்லை. எனவே, இந்த விபத்தில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் கூறினர்.
ஆப்பிரிக்காவிலேயே மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நைஜீரியாவில், சாலை விதிகள் சரியாக பின்பற்றப்படாததால் சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
அதிலும், இதுபோன்ற விபத்துகளுக்குப் பிறகு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாளிகளில் எரிபொருளைச் சேகரிக்கும் வழக்கமும் அதிகமாகிவருகிறது. பெட்ரோல், டீசலுக்கு அளித்து வந்த மானியத்தை அரசு விலக்கிக் கொண்டதால் அவற்றில் விலைகள் கடந்த ஓராண்டில் மட்டும் மும்மடங்காகியுள்ளன. இதன் காரணமாக, லாரி விபத்துகளைப் பயன்படுத்தி எரிபொருளை சேகரிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
هذه القصة مأخوذة من طبعة October 17, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 17, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

மெத்வதெவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்
மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரர்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவர் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருணைப் பணி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு மருத்துவர்கள் கோரிக்கை
கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி
இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக மோரீஷஸ் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்
செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.
வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த 'ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024' மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு: பாஜக குற்றச்சாட்டு
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்குர் பச்சால் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது
நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு
மும்பையில் மீண்டும் தரையிறக்கம்