தமிழக ஆளுநர் தலைமையில் சென்னை தூர்தர்ஷனில் நடைபெற்ற ஹிந்தி வார விழாவில் பாடப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்துப்’ பாடலில் ‘திராவிட நல் திருநாடு’ என்ற சொற்கள் நீக்கப்பட்டதற்குக் கடுமையான கண்டனத்தைத் தமிழக அரசு தெரிவித்தது. இதில் உள்நோக்கம் இல்லை என்றும், தற்செயலாக நடந்த நிகழ்வு என்றும் தூர்தர்ஷன் மன்னிப்புக் கேட்டு விளக்கமும் அளித்தது. ஆனால், சர்ச்சை இன்னும் நின்றபாடில்லை.
1901 மே 24 அன்று பாலவனத்தம் பொ. பாண்டித்துரைத் தேவரால் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தஞ்சை தமிழ்ச்சங்கம் சாமிநாதனார் தலைமையிலும், 1911 மே 14 அன்று கரந்தைத் தமிழ்ச்சங்கம் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் முன்னிலையிலும் தொடங்கப்பட்டன. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் உமா மகேஸ்வரனார்.
கரந்தைத் தமிழ்ச்சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டு முதல், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ என்னும் பாடல் சங்கத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கத் தொடங்கியது. இந்தப் பாடலை முதன்முதலில் மேடையில் பாடியவர் கூடலூர் வே.இராமசாமி. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு.
1967-இல் முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாதுரை, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாக்கள், கல்லூரி, பள்ளி விழாக்கள் அனைத்திலும் பாடக் கூடிய ‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்’ ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தமிழறிஞர்களைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
புலவர் குழு விவாதத்தின்போது தாயுமானவர் இயற்றிய ‘அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்’ என்ற பாடல் அல்லது திருக்குறளின் முதல் அதிகாரத்தை முழுவதுமாகப் பாடலாம் என விவாதிக்கப்பட்டது. தாயுமானவர் பாடல் ஹிந்து மதத்தைச் சார்ந்தது என்பதால், மற்ற மதத்தினர் அதை எதிர்த்தனர். திருக்குறளின் கடவுள் வாழ்த்திலும் ‘தாள்’, ‘அடி’ என்பது போன்ற சொற்கள் உருவ வழிபாட்டைக் குறிப்பதால் அதற்கும் எதிர்ப்பு எழுந்தது என்று புலவர் குழுத் தலைவர் அப்பாதுரையாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறைவாக, சிறந்த இரு பாடல்களாக மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ பாடலும், கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளை இயற்றிய ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே’ என்ற பாடலும் பரிந்துரைக்கப்பட்டன.
هذه القصة مأخوذة من طبعة November 04, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 04, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஆட்டோ, ஃபார்மா பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
இரட்டை இலக்க வளர்ச்சி கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து
இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த நவம்பர் மாதத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சூரியனை மிக நெருக்கத்தில் கடந்து நாசா விண்கலம் சாதனை
சூரியனை இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடந்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பார்க்கர் விண்கலம் சாதனை படைத்துள்ளது.
ரஷியாவுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்திவைப்பு
ரஷியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த தங்கள் விமானம் விழுந்து நொறுங்கியதன் எதிரொலியாக, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தை அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுத்தி வைத்துள்ளது.
தென் கொரிய இடைக்கால அதிபருக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீர்மானம்
தென் கொரிய இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ஹன் டக்-சூவையும் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேல் விமான நிலையத்தில் தாக்குதல்: ஹூதி கிளர்ச்சியாளர்கள்
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர விமான நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
தீப்தி சர்மா அசத்தலில் இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி
ஒருநாள் தொடரில் மே.தீவுகள் 'ஒயிட்வாஷ்'
ஸ்மித் சதம்; ஆஸ்திரேலியா பலம்; இந்தியா தடுமாற்றம்
இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
நானறிந்த மன்மோகன் சிங்
மன்மோகன் சிங் என்னை பொருளாதார விவகாரத் துறை இயக்குநராக நியமிக்கச் செய்தார்.
சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச பெண் நாடு கடத்தல்
நமது நிருபர்