அகத்தில் காதல், புறத் தில் மோதல்' என்பதுவே அக்கால வாழ் வாக அமைந்தது. இவை இரண்டும் அறத் தின்வழி இயங்கின என்பதே சிறப்பு. பொன்முடியார் என்னும் பெண்பாற் புலவர் தாய், கொல்லன், அரசன், மகன் அகியோரின் கடமை களைத் தெரிவிக்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். அது மிகப் பெரும்பாலோர்க்கு நன்கு அறிமுகமான பாடல் அகும். அப்பாடல் மறக்குடி மக ளொருத்தியின் கூற்றாக அமைந்துள்ளது. அது, ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (312) என்பதாகும். இதற்கு, "மகனைப் பெற்று வளர்த்துவிடுதல் எனது கடமையாகும்; அவனை நற்பண்புகளால் நிறைந்தவன் அக்குவது தந்தையினது கடமையாகும்; அவனுக்குத் தேவைப்படும் வேலை உருவாக் கித் தருவது கொல்லனது கடமையாகும்; நல்லொ முக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனது கடமையாகும்; விளங்குகின்ற வாளைக் கையில் ஏந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் செய்து பகைவர் களிற்றியானைகளைக் கொன்று வெற்றி யொடு மீளுவது காளையாகிய மகனது கடமை யாகும்" என்றே பலரும் பொருள்கொண்டுள்ளனர். இப்பாடலின் நான்காம் அடியில் உள்ள 'நன்னடை" என்பதற்கு மாற்றாகத் தண்ணடை' என் னும் பாடம் உள்ளது. இப்பாட வேறுபாடு புறத் திரட்டில் இருப்பதாகப் புலியூர்க் கேசிகன் தமது உரையில் காட்டியுள்ளார். எனினும் அவர் நன்னடை' என்னும் பாடத்தையே போற்றிக் கொண் டுள்ளார். அனால் மர்ரே பதிப்பு 'தண்ணடை' என்பதனையே பாடமாக அமைத்துள்ளது. இப்பாட வேறுபாடு சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
அக்காலத்தில் ஆடவரைப் போலவே பெண் களும் வீரம் நிறைந்தவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். அவர்களது வீரம் குறித்த பாடல்களைப் படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது.
"என் மகன் எங்கே என்று வினவுகிறாய். அவன் இருக்கும் இடம் அறியேன். அனால், இஃது என் மகனை௱ன்றவயிறு; புலிதங்கிப் புறப்பட்ட குகை. அவன் இதுபோது போர்க்களத்தில் இருப்பான்" (86) என்கிறார் காவற்பெண்டு என்னும் தாய்.
هذه القصة مأخوذة من طبعة November 10, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 10, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
விண்வெளியில் முளைத்த காராமணி விதைகள்: இஸ்ரோ
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமை தெரிவித்தது.
தில்லி பேரவைத் தேர்தல்: பாஜக முதல் பட்டியல் வெளியீடு
தில்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 29 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் உயிரிழப்பு
விருதுநகர் அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பொங்கல் பண்டிகை: ஜன. 17–ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜன. 17-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதி படைப்புகளில் ஆய்வுகள் தொடர வேண்டும்
மகாகவி பாரதியின் படைப்புகளில் தலைமுறைதோறும் ஆய்வுகள் தொடர வேண்டும். அத்தகைய பணியை பேராசிரியர் ய.மணிகண்டன் மேற்கொண்டு வருகிறார் என பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தெரிவித்தார்.
தேடிச் சுவைத்த தேன்!
கோதை ஜோதிலட்சுமி கட்டுரையாளர்
'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் !
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
உதகையில் நீர்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்ப் பனியின் தாக்கம் வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துக் காணப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
அமைச்சர் சேகர்பாபு
விஜயா வாசகர் வட்ட அ.முத்துலிங்கம் விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் கல்யாண் ராமன் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான அ.முத்துலிங்கம் விருதுக்கு கல்யாண் ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.