தகவல் பெறும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விசாரணையில் சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்கள் மட்டுமே ஆஜராக வேண்டுமென மாநிலத் தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில தகவல் ஆணையர் எம்.செல்வராஜ், தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறைக்கு அனுப்பிய கடிதம்:
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனுதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம். இந்த மேல்முறையீட்டு விசாரணையின் போது, பொதுத் தகவல் அலுவலர் நேரில் ஆஜராவது கட்டாயம். ஆனால், விசாரணை நடைபெறும் நாளன்று பொதுத் தகவல் அலுவலர் ஆஜராகாமல், விடுப்பு எடுத்து விடுகிறார். அவருக்குப் பதிலாக வேறொரு அலுவலர் மேல்முறையீட்டு விசாரணையில் ஆஜராவதால், அவருக்கு வழக்கு குறித்த விவரம் ஏதும் தெரிவதில்லை.
அவமதிக்கும் செயல்: தகவல் பெறும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விதி 8, உட்பிரிவு 3-ன்படி, வெள்ளம், கொள்ளை நோய்த் தடுப்பு, சட்டம்-ஒழுங்கு கையாள்தல் போன்ற நிகழ்வுகளின்போது பொதுத்தகவல் அலுவலர் ஆஜராகாமல் விலக்குப் பெறலாம். ஆனால், வழக்கமான நாட்களில் கூட விசாரணைக்கு வராமல் கீழ்நிலை அலுவலரை அனுப்பி வைப்பது தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தை அவமதிக்கும் செயல். எனவே, விசாரணைக்கு பொதுத் தகவல் அலுவலர்தான் நேரில் ஆஜராக வேண்டும். இதனை அனைத்து பொது அதிகார அமைப்புகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்.
هذه القصة مأخوذة من طبعة November 13, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 13, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு ஆய்வு
திண்டுக்கல், நவ. 23: திருமலை தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கிய விவகாரத்தில், திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ரயில் உதவி ஓட்டுநர் தேர்வு: திருவனந்தபுரத்துக்கு நவ.28 வரை சிறப்பு ரயில்
சென்னை, நவ.23: ரயில்வே வாரிய தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் ஏஎல்பி (உதவி ஓட்டுநர்) தேர்வை முன்னிட்டு நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
வண்டலூர் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழப்பு: உடற்கூறாய்வு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை, நவ. 23: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த குரங்கு குட்டி உயிரிழந்த விவகாரத்தில், அந்தக் குரங்கின் மருத்துவ சிகிச்சை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்ப் பல்கலை. பேராசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை என்றார் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.
தங்கம் பவுனுக்கு ரூ.600 உயர்வு; ஒரு வாரத்தில் ரூ.2,920 அதிகரிப்பு
சென்னையில் தங்கம் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையானது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,789 கோடி டாலராக சரிவு
மும்பை, நவ. 23: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,789.2 கோடி டாலராக சரிந்தது.
விலை உயரும் பிஎம்டபிள்யு கார்கள்
புது தில்லி, நவ. 23: பிஎம்டபிள்யு இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
ஒரு கோடி வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல், ஜியோ, விஐ
பிஎஸ்என்எல் கூடுதல் வாடிக்கையாளர்கள் சேர்ப்பு
லெபனானில் முன்னறிவிப்பின்றி குண்டுவீச்சு: 15 பேர் உயிரிழப்பு
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள எட்டு அடுக்கு குடியிருப்புக் கட்டடத்தில் இஸ்ரேல் ராணுவம் முன்னறிவிப்பின்றி நடத்திய குண்டுவீச்சில் 15 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க நிதியமைச்சராகிறார் ஸ்காட் பெசன்ட்
தனது புதிய அரசின் நிதியமைச்சராக, பிரபல சர்வதேச முதலீட்டு நிபுணர் ஸ்காட் பெசன்டை (படம்) அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.