விழுப்புரம், புதுச்சேரியில் வரலாறு காணாத மழை
Dinamani Chennai|December 02, 2024
வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்
விழுப்புரம், புதுச்சேரியில் வரலாறு காணாத மழை

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை கன மழை பெய்தது.

அதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் பெய்தது. இதனால், மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடர் மழையால் குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் குடியிருப்புகள் மழைநீரால் சூழப்பட்டன. திண்டிவனத்தில் கிடங்கல்- 2 ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இத்துடன் தொடர் மழையால் நாகலாபுரம் குளத் தெருவில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடானது. இந்திராநகர், வகாப்புநகர் பகுதிகளில் 500 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதேபோன்று, செஞ்சி நகரிலும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

هذه القصة مأخوذة من طبعة December 02, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 02, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.