அவர்களில் 33 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 6 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
கடந்த நவம்பரில் 288 தொகுதிகளுக்கான மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய 'மகா யுதி' கூட்டணி 230 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது.
பாஜக 132 தொகுதிகளிலும், ஷிண்டே சிவசேனை 57 தொகுதிகளிலும், அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இதைத்தொடர்ந்து கடந்த டிச.5-ஆம் தேதி மும்பையில் பிரதமர் மோடி முன்னிலையில், மாநில முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்றார்.
அவருக்கு மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதேபோல மாநில துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் ஆகியோர் பதவியேற்றனர். இதில், மூன்றாவது முறையாக ஃபட்னவீஸ் முதல்வராகவும், அஜீத் பவார் 6-ஆவது முறையாக துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டு, நாகபுரியில் 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் 33 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 6 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அவர்களுக்கு மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
هذه القصة مأخوذة من طبعة December 16, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 16, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் 1-ஆம் தேதி திங்கள்கிழமை (டிச.16) மட்டும் 87,967 பேர் தரிசனம் செய்தனர்.
நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !
மேட்டூர் அணை நீர்மட்டம் 118.53 அடியாக உயர்ந்ததால் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய கனரா வங்கி
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி உயர்த்தியுள்ளது.
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு
குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகார் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
3,784 கோடி டாலராக அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 3,784 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான வனுவாட்டு அருகே, கடலில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிடோ புயல்: 64 பேர் உயிரிழப்பு
தென் கிழக்கு ஆப்பிரிக்க பிராந் தியத்தைத் தாக்கிய சிடோ புயலில் இதுவரை 64 பேர் உயிரிழந்தனர்.
ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை: அதிகாரிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு
வங்கதேசத்தில் போராட்ட வன்முறை தொடர்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விசாரணையை முடிப்பதற்கான காலக் கெடுவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்!
துபையில் வேலை வாங்கித் தருவதாக முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானில் இறக்கிவிடப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பியுள்ளார்.