2026 பேரவைத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக ஆகியவற்றின் கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழர் கட்சி (நாதக), புதிதாக தொடங்கப்பட்ட நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகியவை தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை திமுக, அதிமுக ஆகியவை தலா இரு முறை என நான்கு முறை மட்டுமே 200 தொகுதிகளைத் தாண்டி ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றன.
கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி 1971-இல் 205 தொகுதிகள், 1996-இல் 221 தொகுதிகள், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி 1991-இல் 225 தொகுதிகள் மற்றும் 2011-இல் 203 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இந்நிலையில், இந்த முறை 200 தொகுதிகள் இலக்கு என திமுகவும், அதிமுகவும் அறைகூவல் விடுத்துள்ளன. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 2019, 2021, 2024 என மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. கருணாநிதி தலைமையிலான கூட்டணி இதுபோல மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்று அல்லாமல் மூன்று பொதுத் தேர்தல்களில் ஒரே கூட்டணியை உடையாமல் அரவணைத்துச் செல்லும் பெருமையை ஸ்டாலின் பெற்றுள்ளார் என்பது திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பலம்.
கூட்டணி பலம், சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள், மகளிர் உரிமைத் தொகை போன்ற பாமர மக்களைக் கவரும் அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் நம்பிக்கையில் இந்த முறை 200 இலக்கு சாத்தியம் என்பது முதல்வர் ஸ்டாலினின் கணக்கு.
هذه القصة مأخوذة من طبعة December 23, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 23, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
திருச்செந்தூர் கோயிலில் திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
மார்கழி மாதத்தையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமையாக்கி அரசாணை வெளியீடு
முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்கப்பட்ட அரசாணை அவரது துணைவியாரான ராஜாத்தி அம்மாளிடம் வழங்கப்பட்டது.
நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்: திரும்ப எடுத்துச்சென்ற கேரள அரசு
திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, 18 லாரிகளில் கேரள மாநிலம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை திரும்ப எடுத்துச்செல்லப்பட்டது.
குமரியில் டிச. 30, 31இல் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
கன்னியாகுமரியில் இம்மாதம் 30, 31 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சொந்த போர் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்
விமானி காயம்
தைவானுக்கு ராணுவ உதவி: அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
தைவானுக்கு ராணுவ உதவியை அறிவித்த அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, அமெரிக்கா நெருப்பு விளையாடுவதாக எச்சரித்துள்ளது.
நைஜீரியா: கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்.
போர்கள் நிறுத்தப்பட வேண்டும்; போப் ஃபிரான்சிஸ்
உலகில் நடைபெறும் போர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஃபிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார்.
தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல் போட்டி: அண்ணா பல்கலை. மாணவருக்கு தங்கம்
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் ஐஎஸ்டியில் நடைபெறும் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர், மகளிர் நீச்சல் போட்டியில் முடிவுகளை விளையாட்டுத் துறை இயக்குநர் ஆர். மோகன கிருஷ்ணன் வெளியிட்டார்.
இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்
இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் டி.20 கிரிக்கெட் தொடர்களுக்கான இங்கிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.