பேரவைக்கு நெருக்கடி: ஆளுநருக்கு பேரவைத் தலைவர் கண்டனம்
Dinamani Chennai|January 09, 2025
சட்டப்பேரவைக்கு ஆளுநர் நெருக்கடி கொடுத்ததாகக் கூறி, அவருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு கண்டனம் தெரிவித்தார்.
பேரவைக்கு நெருக்கடி: ஆளுநருக்கு பேரவைத் தலைவர் கண்டனம்

சென்னை, ஜன. 8:

சட்டப்பேரவையில் புதன்கிழமை பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதாவது: சட்டப்பேரவைக்கு ஜன. 6-இல் ஆளுநர் வந்து சென்ற பிறகு, 'எக்ஸ்' தளத்தில் நாடாளுமன்றத்தில் பின்பற்றப்படுகிற நடைமுறையைக் குறிப்பிட்டு, ஒரு கருத்தை வெளியிட்டு, பின்னர் அதை நீக்கியுள்ளார். பின்னர், அனைத்து சட்டப்பேரவைகளிலும் பின்பற்றப்படும் நடைமுறை என சிலவற்றைக் குறிப்பிட்டு, அதையும் நீக்கி வேறு ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசனின் கருத்தை, அப்படியே தன்னுடைய கருத்தாகவும் வெளியிட்டுள்ளார். அவர்களுடைய கருத்திலேயே தடுமாற்றம் இருந்துள்ளது. அதையும் நீக்கிவிடுவார்கள் என்று அனைவரும் பேசிக் கொள்கின்றனர்.

நேரலை பிரசார் பாரதி குழப்பம்: இந்த விவகாரம் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். தூர்தர்ஷன் என முன்பு இருந்தது தற்போது பிரசார் பாரதி என மாற்றப்பட்டுள்ளது. 1999-ஆம் ஆண்டுமுதல், அரசமைப்புச் சட்டத்தின்கீழ், ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்றிய நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறது.

பொதுவாக, சென்னை தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து முறையான அனுமதி கோரும் விண்ணப்பம் வரும், அதை பேரவைத் தலைவர் பரிசீலித்து ஒவ்வோராண்டும் சில நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்குவார். அந்த நிபந்தனைகளில் ஒன்று, ஆளுநர் உரையை மட்டுமே ஒளிபரப்பு செய்தல் வேண்டும் என்பதாகும்.

நான் பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், பிரசார் பாரதி நிறுவனத்துக்கு ஏற்கெனவே பல ஆண்டுகளாக கூறப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2022 ஜனவரி 5 முதல் 2022 மே 10 வரை நடைபெற்ற பேரவை நடவடிக்கைகளில் வினாக்கள் -விடைகள், கவன ஈர்ப்பு, விதி 110-இன்கீழ் அறிக்கைகள், முக்கிய சட்டமுன்வடிவுகளின் மீதான விவாதம், தனித் தீர்மானங்கள் மற்றும் அமைச்சர்களின் பதிலுரைகள் ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதற்காக ரூ.44.65 லட்சம் பிரசார் பாரதி நிறுவனத்துக்கு பேரவைச் செயலகத்தால் வழங்கப்பட்டது.

هذه القصة مأخوذة من طبعة January 09, 2025 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة January 09, 2025 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
யெஸ் வங்கி கடனளிப்பு 13% உயர்வு
Dinamani Chennai

யெஸ் வங்கி கடனளிப்பு 13% உயர்வு

தனியாருக்குச் சொந்தமான யெஸ் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 12.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்
Dinamani Chennai

பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யு குழுமத்தின் பிஎம்டபிள்யு மற்றும் மினி கார் களின் இந்திய விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ
Dinamani Chennai

லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறி உள்ளனர்.

time-read
1 min  |
January 09, 2025
வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி
Dinamani Chennai

வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி

கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை முந்தைய 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்
Dinamani Chennai

ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்

ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சி யமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளி யுறவுத் துறை அமைச்சர் அலெக் ஸாண்டர் ஷலன்பர்க்(படம்) நிய மிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
January 09, 2025
குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம்
Dinamani Chennai

குறைவான பொருளாதார வளர்ச்சி கணிப்பு: பங்குச்சந்தையில் தள்ளாட்டம்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.

time-read
1 min  |
January 09, 2025
டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு
Dinamani Chennai

டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு

கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு?

time-read
1 min  |
January 09, 2025
‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’
Dinamani Chennai

‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே கார் குண்டு வெடிப்பு நடத்திய ராணுவ வீரர் மாத்யூ லிவல்பர்கர், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
January 09, 2025
வதந்தியும் உண்மையும்!
Dinamani Chennai

வதந்தியும் உண்மையும்!

எச்எம்பி தீநுண்மி: சாதாரண சளித் தொற்று

time-read
1 min  |
January 09, 2025
காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா
Dinamani Chennai

காலிறுதியில் டாமி பால், ஜெஸிகா பெகுலா

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான முன்னோட்டமாக நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க போட்டியாளர்களான டாமி பால், ஜெஸிகா பெகுலா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

time-read
1 min  |
January 09, 2025