ஏற்ப குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றிநிற்கும் என்பதற்கு பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் வெறும் காகிதம் அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் நியாயமாக ஒருவர் கூறுவதை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை தொடங்கி, அரசின் சேவைகள் விரைவாக மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.
அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளை பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வது தான் இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டமானது முதல் கட்டமாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முப்பதே நாட்களில் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறையில் 42,962 பட்டா மாறுதல்களும்,18,236 நபர்களுக்கு பல்வேறு வகையான சான்றிதழ் களும், மின்சார வாரியத்தில் 26,383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள் பெயர் மாற்றங்களும், நகராட்சி நிர்வாகத்துறையில் 37,705 நபர்களுக்கு வரிவிதிப்பு.
குடிநீர், கழிவுநீர் இணைப்பு. கட்டட அனுமதி. பிறப்பு, இறப்பு பதிவுகளும், குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை மூலம் 1,190 நபர்களுக்கு ரூ.60.75 கோடி மதிப்பில் தொழில் கடனுதவிகளும், மாற்றுத்திறானிகள் நலத்துறையின் சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் 3,659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம் கடன் உதவிகள். கருவிகள்.
அடையாள அட்டைகளும், கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூ.6.66 கோடி மதிப்பில் 766 நபர்களுக்கு கடனுதவிகளும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة February 26, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 26, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
விளையாட்டு உபகரணங்களை பெற்றுள்ள இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
முதல்வர் வருகையையொட்டி வழுதரெட்டியில் விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை யொட்டி வழுதரெட்டியில் அரசு நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி மற்றும் எல்லீஸ் அணைக்கட்டு மறுகட்டுமானம் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொங்கலன்று அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்
இந்தியா முழுவதும் சி.ஏ. (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்த தேர்வை நடத்தும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸ் ஆப் இந்தியா (அய்.சி.ஏ.அய்.) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என். நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவில் 29ம் தேதி டி.ஜி.பி.க்கள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு வருகிற 29ந்தேதி தொடங்குகிறது.
கேரளா: சாலையோரம் தாங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து-5 தமிழர்கள் பலி
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
அதி கனமழை எச்சரிக்கை டெல்டா மாவட்டங்களை நோக்கி நகளும் காற்றழுத்த தாழ்வு பண்டலம்
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை
காரைக்காலுக்கு இன்று முதல் கனமழை தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப் பட்டுள்ளதால், முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கவர்னர் எந்த கோப்புக்கும் தடையாக இல்லை
அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
‘ட்ரெக் தமிழ்நாடு’ என்பதை பிரபலப்படுத்த குற்றாலம் செண்பகாதேவி அருவி பகுதியில் ஆட்சியர், எஸ்பி மலையேற்றம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட செண்பகா தேவி அருவியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் 'ட்ரெக் தமிழ்நாடு' என்பதனை பிரபலப் படுத்தும் முயற்சியாக மலையேற்றம் மேற்கொண்டனர்.