يحاول ذهب - حر

Newspaper

Maalai Express

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடைகொடுத்து வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சமாகும். அதாவது, வடகிழக்கு பருவமழை சிறப்பாகவே தொடங்கியது எனலாம். ஆனால் நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் மாத சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், இது மிகவும் குறைவு என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

1 min  |

November 18, 2025

Maalai Express

அடுத்த 3 ஆண்டுகளில் விண்கலம் தயாரிப்பை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டம்: இஸ்ரோ தகவல்

விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்கு சவால் அளிக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் குறித்து அதன் தலைவர் நாராயணன் விவரித்து உள்ளார்.

1 min  |

November 17, 2025
Maalai Express

Maalai Express

முதல்மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

20ந்தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு

1 min  |

November 17, 2025

Maalai Express

சவுதி அரேபியாவில் பஸ் விபத்து: 42 இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொள்வோர் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ்சில் 43 பேர் பயணித்தனர். அப்போது அந்த பஸ் இன்று அதிகாலை 1.30 மணியளவில் முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.

1 min  |

November 17, 2025

Maalai Express

டெல்லி கார் வெடிப்பு: 3 மருத்துவர்கள் உட்பட 4 பேரை விடுவித்தது என்.ஐ.ஏ.

டெல்லியில் கடந்த 10ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பலியான டாக்டர் உமர் கடந்த 10ந் தேதி அரியானாவில் இருந்து டெல்லி செங்கோட்டை வந்த பாதைகளில் போலீசார் இடைவிடாமல் விசாரித்து வருகிறார்கள். குறிப்பாக அவர் எங்கெல்லாம் நின்றாரோ? அங்கு விசாரணை நடத்தப்படுகிறது.

1 min  |

November 17, 2025
Maalai Express

Maalai Express

திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

November 17, 2025

Maalai Express

முதலமைச்சர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன.

1 min  |

November 17, 2025

Maalai Express

தேசிய பத்திரிகை தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஜனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Pillar of Democracy) என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள்.

1 min  |

November 16, 2025

Maalai Express

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இதன்படி 31 ஆயிரத்து 373 தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

1 min  |

November 16, 2025
Maalai Express

Maalai Express

அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரி ரத்து செய்தார் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வருகிறார். இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 min  |

November 16, 2025
Maalai Express

Maalai Express

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தவெகவினர் ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 16ம் தேதி (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக தவெக மாவட்ட செயலாளர்கள் முறையாக போலீஸ் அனுமதி பெற்றுள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டனர்.

1 min  |

November 16, 2025

Maalai Express

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மறுப்பு

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

1 min  |

November 16, 2025
Maalai Express

Maalai Express

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நவ. 15சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் டிச.6 முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 15, 2025

Maalai Express

SIR-க்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளை தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் என். ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

1 min  |

November 15, 2025

Maalai Express

பீகார் சட்டசபை தேர்தல் 190 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை

முதல்மந்திரி நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

1 min  |

November 14, 2025
Maalai Express

Maalai Express

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது: மதுரை ஐகோர்ட்

நித்தியானந்த தியான பீடத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

1 min  |

November 14, 2025

Maalai Express

ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா? - தமிழக அரசு விளக்கம்

ஆணாக இருந்தால் மட்டும் போதும். தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசு வழங்குகிறது என்று குறிப்பிட்டு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

1 min  |

November 13, 2025

Maalai Express

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை

தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 22ந்தேதியில் இருந்து சரிவை சந்தித்து வந்தது. கடந்த 27ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த 4ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது. விலை ஏற்றஇறக்கம் என்ற நிலையிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்து இருந்தது.

1 min  |

November 13, 2025

Maalai Express

தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது

அரசின் நலத்திட்ட உதவிகள், பொது மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும்.

1 min  |

November 10, 2025

Maalai Express

தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.30ம், பவுனுக்கு ரூ.240ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 300க்கும், ஒரு பவுன் ரூ. 90 ஆயிரத்து 400 க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.165க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

1 min  |

November 10, 2025

Maalai Express

திமுகவை யாராலும் ஒருபோதும் அழிக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி இல்லத் திருமண விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

1 min  |

November 10, 2025
Maalai Express

Maalai Express

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

1 min  |

November 10, 2025

Maalai Express

16-ந் தேதி முதல் மீண்டும் தீவிரம் அடையும் வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை முதல் 2 சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து பருவமழை குறைந்து காணப்படுகிறது. இடையிடையே வெப்பச்சலன மழை சற்று கைகொடுத்தாலும், இம்மாதத்துக்கான வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்யாத நிலையே இருந்து வந்தது.

1 min  |

November 10, 2025
Maalai Express

Maalai Express

பீகாரில் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவு

ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 6ந் தேதி நடந்தது. 121 தொகுதிகளில் நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் இறுதி நிலவரத்தை நேற்று தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது பீகார் வரலாற்றிலேயே முதல் முறையாகும்.

1 min  |

November 09, 2025
Maalai Express

Maalai Express

தவெக தலைமை அலுவலக ஊழியர் குரு சரணிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ந்தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த வழக்கு தொடர்பாக தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பிரசாரத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் சி.பி.ஐ. முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் கடந்த 6 மற்றும் 7ந்தேதிகளில் 17 தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 8 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்கனவே விசாரணைக்கு ஆஜரான ஒருசிலர் நேற்றைய விசாரணைக்கும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

1 min  |

November 09, 2025

Maalai Express

புதுக்கோட்டை, திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று கள ஆய்வு மேற்கொண்டும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார். அந்த வகையில் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து, அவர் கார் மூலம் சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.

1 min  |

November 09, 2025
Maalai Express

Maalai Express

‘பீகாரில் ஆர்.ஜே.டி. ஆட்சிக்கு வந்தால் மக்கள் தலையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார்கள்': பிரதமர் மோடி

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேவேளை, 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வரும் 11ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

1 min  |

November 08, 2025
Maalai Express

Maalai Express

ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுக

திமுக 75வது ஆண்டு நிறைவு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

1 min  |

November 08, 2025

Maalai Express

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் தங்குவதற்கு போலீசார் தடை விதிப்பு

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகன் சூரபத்மனை வதம் செய்த இடம், தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம், அறுபடை வீடுகளில் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் கடற்கரை சார்ந்த தலம் என பல சிறப்புகளை திருச்செந்தூர் பெற்றுள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு தினசரி உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தங்கி சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

1 min  |

November 08, 2025

Maalai Express

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் கடும் நடவடிக்கை: சென்னை கலெக்டர்

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

November 08, 2025

الصفحة 1 من 300