இக்கூட்டத்தில் நிதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும். பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய் மற்றும் குளக் கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜேசிபி, மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. பழுதான நிலையில் உள்ள அபாயகரமான கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 15 தினங்களுக்கு ஒருமுறை ஊராட்சி, பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகியவற்றில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை குளோரினேசன் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலோரப்பகுதிகள் மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் பாதிக்கப்படும் நபர்களை மீட்க தேவையான மீட்பு உபகரணங்களை தயார்நிலையில் வைக்க மீன்வளத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மேலும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவும் பொது சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
هذه القصة مأخوذة من طبعة October 15, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 15, 2024 من Maalai Express.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கல்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்
அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் தொடர்பாக திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்தி கேயன் வழங்கினார்கள்.
திருச்செந்தூர் கடற்கரையில் 2வது நாளாக 10 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
புதுச்சேரி கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
விஜய் ஆளுநரிடம் வழங்கிய கடித நகலை தவெக மகளிர் அணியினர் மாணவிகளிடம் வழங்கினர்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் வழங்கிய கடிதத்தை தொடர்ந்து செஞ்சி சட்ட மன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணியினர் பொதுமக்கள், பள்ளி மாணவிகள், பெண்களிடம் கடிதத்தை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மாவட்ட அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது.
திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கடந்த 2020ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு: நாளை முதல் வீடுவீடாக டோக்கன் வழங்க ஏற்பாடு
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.
தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.