புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியை காணச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது 9 வயது மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அங்கு சிறுவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிறுவன் மூளைச்சாவு அடைந்ததாகவும், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளியாகியுள்ளது. இதனிடையே நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஐதராபாத் உயர்நீதிமன்றம் அளித்த இடைக்கால ஜாமினுக்கு எதிராக தெலுங்கானா போலீசார் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறுகின்றன.
தகவல்கள் டிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகி ஒரு வாரத்தில் ரூ.1000 கோடி வசூலை வாரிக்குவித்தது. முன்னதாக கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஐதராபாதில் உள்ள சந்தியா திரையரங்கில் படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது.
அப்போது ரசிகர்களுடன் சேர்ந்து படத்தைக் காண நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா உள்ளிட்ட பிரபலங்கள் வருகை புரிந்தனர். திரையரங்கிற்கு வரும் பிரபலங்களை காண பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடியதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்த சம்பவத்தில் ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். அவரது 9 வயது மகனும், பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். சிறுவனின் மருத்துவ செலவுகளை புஷ்பா 2 படக்குழுவே ஏற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் மீதும், திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்ளிட்டோர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கூட்ட நெரிசலில் பெண் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறிய அல்லு அர்ஜூன், இது தொடர்பாக வருத்தம் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அத்துடன் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்திப்பதாகவும் கூறினார்.
هذه القصة مأخوذة من طبعة December 18, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 18, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மழையால் ஆட்டம் தடைபட்டது: இந்தியா- ஆஸ்திரேலியா 3 ஆவது டெஸ்ட் டிரா!
இந்தியா பந்துவீச்சில் அசத்தல்
விக்னேஷ் சிவனுடனான திருமணம்: குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்!
நயன்தாரா பரபரப்பு பேட்டி!!
1971 போரில் இந்தியா கூட்டாளி மட்டுமே: எங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார் பிரதமர் மோடி!
வங்கதேச தலைவர்கள் கண்டனம்!!
நேரு மீது காட்டமான தாக்கு: அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சிதான்!
அமித்ஷாவுக்கு ஆதரவாக மோடி கருத்து!!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது!
தெற்கு வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.
தொகுதி காலியானதாக அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் கட்சி போட்டியிடுமா?
பரபரப்பு தகவல்கள்!
டாக்டர் அம்பேத்கர் விவகாரம் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ராகுல், கார்கே பதிலடி!
மனுஸ்மிருதி ஆதரவாளர் என சாடல்!!
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு!
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!
மூளைச்சாவு அடைந்ததாக தகவல்: 'புஷ்பா-2' நெரிசலில் சிக்கிய சிறுவனும் கவலைக்கிடம்!
அல்லு அர்ஜூன் ஜாமினுக்கு எதிராக தெலுங்கானா போலீஸ் மேல்முறையீடு!!
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு!
சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்!!