
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) கோலாகமாக தொடங்குகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்கும் கண்கவர் நடன நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. நாளை தொடங்கவுள்ள லீக் போட்டிகளில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டிகளைக் காண கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்), உலகின் முதன்மையான 20 ஓவர்கிரிக்கெட் தொடராகும். அந்த வகையில் 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (மார்ச் 22) தொடங்குகிறது. வழக்கம் போல் இம்முறையும் 10 அணிகள் களம் காணுகின்றன.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் தேவையில்லாத வீரர்களை விடுவித்தும், அணிவியூகத்துக்கு ஏற்ப புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருப்பதால், என அணி வீரர்கள், கேப்டன்கள், பயிற்சியாளர்கள் கணிசமான அளவில்மாற்றங்கள் நடந்துள்ளன. முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். இறுதியாக 62 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் 5 அணிகள் புதிய 5 கேப்டன்களுடன் களம் காணுகிறது. டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்'ஐ லக்னோ அணி அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அவரை அந்த அணியின் கேப்டனாக நியமித்தது. இதனால் டெல்லி அணியின் கேப்டனாக கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து கடந்த முறை கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் அய்யரை, பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்து அவரை அந்த அணியின் கேப்டனாக நியமித்துள்ளது.
هذه القصة مأخوذة من طبعة March 21, 2025 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة March 21, 2025 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

இரவு பகல் பாராமல் உழைத்து கஷ்டப்பட்டு வாங்கிய நாடார் முதலீட்டாளர்களுக்கு பங்குகளை தடையின்றி வழங்க முன்வர வேண்டும்!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகத்திற்கு என். ஆர். தனபாலன் வற்புறுத்தல்!!

சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழக தின விழா!
ஆஸ்திரேலிய துணை தூதர் பங்கேற்பு!!
சூதாட்ட மோசடி விவகாரம் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் சி.பி. ஐ. சோதனை!
முக்கிய ஆவணங்கள் சிக்கின!!

சினிமாங்கிற சக்கரம் சுத்தணும்னா ....மோகன்லால் பரபரப்பு பேச்சு!
மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எல்2: எம்புரான்' வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

பாரதிராஜா மகன் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், விஜய் நேரில் அஞ்சலி!
இன்று மாலை இறுதிச்சடங்கு !!
திருச்சி காந்தி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி!
வணிகர் சங்க பேரமைப்பு அறிக்கை!
சென்னையில் 3 வழித்தடங்களில் அதிவேக மெட்ரோ ரெயில்!
டெண்டர் விடப்பட்டது!!

சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும்.
அமித்ஷாவுடன் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்!!

விஜய்யை பார்த்து கதறி அமுத "டிராகன்' இயக்குநர்!
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த திரைப்படம், டிராகன்.

சென்னையை கலக்கிய ப வடமாநில கொள்ளையன் இன்று சுட்டுக் கொலை!
இன்ஸ்பெக்டரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றபோது பதில் நடவடிக்கை!!