கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் காயமுற்ற அந்த 57 வயது பாதிரியாருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாகவும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் சனிக்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், தாக்குதல் நடத்தியவர் 37 வயது சிங்கப்பூர் சிங்களர் எனத் தெரிவித்தார். தாம் ஒரு கிறிஸ்தவர் என அந்த ஆடவர் முன்னதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்திடம் அறிவித்திருந்ததாகவும் அமைச்சர் சண்முகம் கூறினார்.
“தாக்குதல்காரரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. விசாரணை தொடர்கிறது,” என்ற அமைச்சர் சண்முகம், பாதிரியாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறினார்.
காவல்துறை வாகனம் ஒன்று செயின்ட் ஜோசஃப் தேவாலய வளாகத்திற்குள் நுழைகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
هذه القصة مأخوذة من طبعة November 10, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 10, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மூத்தோரைக் குதூகலப்படுத்திய கொண்டாட்டம்
சிங்கப்பூர் பண்டிகைக் காலங்களில் பல் லினக் கலாசாரங்கள் ஒன்றுபட்டு செயல்படுவது போன்ற நாட்டிற்கு மிக முக்கியமானது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு வரி விதிப்பதைத் தவிர்க்க விரும்பும் டிரம்ப்
அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளியல் போட்டியாளரை கூடுதலான இறக்குமதி வரிகளுடன் தாக்குவது குறித்து தமது தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் மீண்டும் உறுதிமொழிகளைக் கூறிய, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மீது வரியைத் தவிர்ப்பதே தமது தேர்வு என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூர் நாணயக் கொள்கை தளர்வு
சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS), அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டைத் தளர்த்தியுள்ளது.
2024ல் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 9.7% அதிகரிப்பு
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடு களின் விலை சென்ற ஆண்டு (2024) 9.7 விழுக்காடு உயர்ந்த நிலையில் இந்த ஆண்டும் இதே நிலைமை தொடருமென ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மலேசியக் கும்பலிடம் சிங்கப்பூர் போலி ஆவணம்
மலேசியாவில் பிடிபட்ட போதைப்பொருள் கும்பலிடமிருந்து போலி ஆவணங்களும் கள்ளநோட்டுகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
திட்டமிடப்பட்டதற்கு முன்பாகவே திறக்கப்படுகிறது ஹியூம் எம்ஆர்டி நிலையம் பிப்ரவரி 28ஆம் தேதி திறப்பு
புக்கிட் தீமா வட்டாரத்தில் அமைந்துள்ள டௌன்டவுன் பாதையின் ஹியூம் ரயில் நிலையம், திட்டமிடப்பட்டதற்கு முன்பாக பிப்ரவரி 28ஆம் தேதி திறக்கப்படவிருக்கிறது.
சிங்கப்பூர் அதிகாரிகள் போல ஏமாற்றி மோசடிகளில் ஈடுபட்ட 16 மலேசியர்கள் கைது
மலேசிய காவல்துறையின் அதிரடிச் சோதனையில், எல்லை கடந்த மோசடி கும்பலுடன் தொடர்புடைய 16 மலேசியர்கள் ஜனவரி 13ஆம் தேதி கோலாலம்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் $1.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்தனர். சிங்கப்பூர் மக்களை இலக்காகக்கொண்டு அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடிகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் அந்த நடவடிக்கையை மலேசியக் காவல்துறையுடன் இணைந்து சிங்கப்பூர் காவல்துறை முறியடித்தது. 24 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட அந்த மோசடிக்காரர்களை மலேசிய காவல்துறை கைது செய்ததாக ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது. அவர்கள் பொதுவாக டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி அல்லது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பாதிக்கப்பட்டவர்களை அழைப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களில் கடன்பற்று அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும், அல்லது அவர்களின் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்குரிய அல்லது மோசடி பரிவர்த்தனைகள் நடந்திருப்பதை வங்கி கண்டறிந்திருப்பதாகவும் கூறுவார்கள். அந்த அழைப்புகள் பின்னர் மற்றொரு மோசடிக்காரருக்கு மாற்றப்படும். அந்த அழைப்பில் சிங்கப்பூர் காவல்துறை அல்லது சிங்கப்பூர் நாணய ஆணையம் அரசாங்க அதிகாரிகளாக நடித்து ஏமாற்றுவார்கள். சில சந்தர்ப்பங்களில், மோசடிக்காரர்கள் காவல்துறை அல்லது நாணய ஆணையம் அதிகாரிகள் போல உடையணிந்து, அந்த முகவையின் சின்னத்தைக் காட்டும் பின்னிணியில் காணொளியில் அழைப்புகள் நடைபெறும். வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் பயன்பாடுகளில் தொடர்பு நடைபெறும். மோசடிக்காரர்கள் சில நேரங்களில் போலி அடையாள அட்டை (warrant card) அல்லது ஆவணங்களையும் காட்டுவார்கள். பின்னர், சட்டவிரோத பண பரிமாற்றம் போன்ற குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டுவார்கள். மேலும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றக் கூறுவார்கள். 2024 ஜனவரிக்கும் அக்டோபருக்கும் இடையில், அத்தகைய சம்பவங்களில் குறைந்தது 1,100 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மொத்த இழப்புகள் குறைந்தது $120 மில்லியன் ஆகும். இவற்றில் 50க்கும் மேற்பட்ட சம்பவங்களுடன் மலேசிய கும்பல் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட 16 பேர் மீது மலேசிய நீதிமன்றத்தில் மோசடி சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் மோசடிகளில் இழந்த தொகையின் அளவு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. 26,587 சம்பவங்களில் $385.6 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது. ஆண்டின் இரண்டாம் பாதிக்கான புள்ளிவிவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
'கஜினி' படம் ஏற்படுத்திய தாக்கம்: சுனைனா
‘கஜினி’ திரைப்படம் தமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுடுத்தியதாகச் சொல்கிறார் நடிகை சுனைனா.
உன்னத நோக்கத்துடன் சேவையாற்றிவரும் தனபாலனுக்கு விருது
பாதுகாப்பு, செழிப்பு, வர்த்தகங்களை எளிதாக்குவதற்கான கடப்பாட்டினை மறுவுறுதிப்படுத்தும் இலக்குடன் சிங்கப்பூர் சுங்கத்துறை 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக சுங்கத் தினத்தைக் கொண்டாடியது.
இந்தியாவின் ‘ஏஐ’ தொழில்நுட்ப மையமாக மாறுகிறதா தமிழ்நாடு - ஓர் அலசல்
உலகின் இன்றைய அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக, செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.