ஏனென்றால், இவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடையாது. படப்பிடிப்பு இல்லாத நாள்களில் பகல் முழுவதும் வெளியில் அலைந்துவிட்டு, இரவில் வசதியான இயக்குநரிடம் பணியாற்றும் உதவி இயக்குநர் அறைகளில் சத்தமில்லாமல் பதுங்குவார்கள்.
இன்னும் சில உதவி இயக்குநர்களோ, கல்யாண வீடுகளில் சமையல் வேலைக்குச் செல்வார்கள். காலை, மதியம் இரவு என மூன்று வேளை உணவுடன் சம்பளமும் கிடைப்பதால் அந்த வேலைக்குச் செல்வார்கள்.
பாரதிராஜா உதவி இயக்குநராகவும் இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் சகோதரர்கள் வாய்ப்பு தேடும்போதும் உணவுக்காக இவர்கள் பல நேரம் தவித்ததுண்டு.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அப்போது பாடகராகிவிட்டார். தன்னை யாரேனும் திருமண நிகழ்ச்சிக்கு பாட அழைத்தால், ‘எங்க வீட்லருந்து நாலு பேர் வருவாங்க’ எனச் சொல்லிவிடுவாராம். நான்கு பேரும் வயிறார கல்யாண விருந்து சாப்பிட்டு வருவார்கள்.
இப்படியெல்லாம் உணவுக்கும் உறைவிடத்திற்கும் உதவி இயக்குநர்கள் அல்லாடிய காலம்... காலப்போக்கில் மாறியது.
கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குநராக இருந்து, யதார்த்த சினிமாவைக் கற்றுக்கொண்டவர் பாரதிராஜா. அதனால்தான் பாரதிராஜாவின் படங்களை இன்று பார்த்தாலும் உயிர்ப்போடும் ரத்தமும் சதையுமாய் பார்வையாளனுக்குள் பாதிப்பை உண்டாக்கும்.
சிவாஜிக்கும் மு.கருணாநிதிக்கும் பெயர் வாங்கித் தந்த, உணர்ச்சிகரமான படைப்புகளில் ஒன்று ‘மனோகரா’. பம்மல் கே.சம்பந்த முதலியார் எழுதிய கதை. இதைச் சிறப்பாக இயக்கியிருந்தார் எல்.வி.பிரசாத்.
தமிழ், தெலுங்கு, மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரசாத், இந்தியாவின் பிரபல சென்னை பிரசாத் ஸ்டூடியோவின் உரிமையாளர்.
பாரதிராஜா தனது பட வேலையாக பிரசாத் ஸ்டூடியோவில் இருந்தபோது, அவரைச் சந்தித்த பிரசாத், “பாரதி! நான் கொஞ்ச நாள் உங்ககிட்ட உதவி இயக்குநராக வேலை செய்ய விருப்பப்படுகிறேன்,” என்றார்.
هذه القصة مأخوذة من طبعة November 10, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 10, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்' படத்திற்கு புதிய சிக்கல்
அண்மையில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படத்தின் சிறப்புக் காட்சி ஹைதராபாதில் நடந்த போது ஏற்பட்ட நெரிசுக்கூட்டலில் சிக்கி பெண் ஒருவர் அகால மரணம் அடைந்தார்.
'விடுதலை 2' ப(பா)டம்
“வழிநடத்தத் தலைவன் முக்கியமல்ல, தத்துவம் தான் முக்கியம்”
ஸ்பர்சை வீழ்த்திய லிவர்பூல்
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 6-3 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்தது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தெரிவு
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாட இடம்
தென்கொரியாவில் தொடரும் அரசியல் நெருக்கடி - இடைக்கால அதிபர்மீது குற்றம் சுமத்த மிரட்டல்
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்று தோல்வி அடைந்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்: ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் இளையர்களுக்கு வேலை
புதுடெல்லி: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளையர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்துள்ளார்.
திமுகதான் எனக்கு எதிரி; நடிகர் விஜய் அல்ல: சீமான்
திமுகதான் எனக்கு எதிரி; நடிகர் விஜய் அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
‘தேர்தல் விதிகள் திருத்தம் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்’
தேர்தல் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புளூம்பெர்க் நிறுவனத்துக்கு பொஃப்மா திருத்த உத்தரவு
சிங்கப்பூர் உயர்தர பங்களாக்களுக்கான பரிவர்த்தனைகள் குறித்து டிசம்பர் 12ஆம் தேதி கட் டுரை ஒன்றை வெளியிட்டிருந்த புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு, பொய்யுரைக்கும் செய்தி சட்டத்தின் கீழ் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிரியா ஆட்சிமுறை மாற்றத்தால் மற்ற பகுதிகளிலும் விளைவுகள் ஏற்படும்
சிரியாவில் ஏற்பட்டுள்ள தலைகீழான ஆட்சி மாற்றம் உலகின் மற்ற பகுதிகளிலும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ஐஎஸ்டி) எச்சரித்துள்ளது.