8,500 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டம்
Tamil Murasu|November 24, 2024
அடுத்த கல்வியாண்டுக்குத் தயாராகும் 8,500 குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிக்‌க சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) தனது ‘பேக் டு ஸ்கூல் ஃபெஸ்டிவல்’ (Back To School Festival) நிகழ்ச்சியை சனிக்கிழமை (நவம்பர் 23) ரிசோட்ஸ் வோர்ல்ட் மாநாட்டு மையத்தில் நடத்தியது.
யோகிதா அன்புச்செழியன்
8,500 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டம்

தொடர்ந்து 17 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த நிதியுதவித் திட்டத்தின்கீழ் இவ்வாண்டு பாலர் பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரை கல்வி பயிலும் 5,337 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பள்ளித் தேவைகளைப் பூர்த்திசெய்ய மொத்தம் $1.7 மில்லியன் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

சிண்டா அதன் தனிநபர் குடும்ப வருமானத் தகுதியை $1,000லிருந்து $1,600 வரை உயர்த்தி அதன் வரம்பை விரிவுபடுத்தியதன் விளைவாக இவ்வாண்டு உதவிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 18 விழுக்காடு அதிகம்.

“ஒவ்வொரு மாணவரின் திறனையும் சிண்டா அங்கீகரிக்கிறது. ஒவ்வொரு மாணவரும் வெற்றிபெறத் தேவைப்படும் ஆதரவைப் பெறும்படி உறுதிசெய்து கொள்வது நம் அனைவரின் பொறுப்பு,” என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சரும் சிண்டாவின் நிர்வாகக் குழுத் தலைவருமான இந்திராணி ராஜா நிகழ்ச்சியில் கூறினார்.

இதுபோன்ற முயற்சிகள் நம் பரந்த தேசிய இலக்குகளின் ஓர் அங்கம் என்றும் இவை ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெறுவதை உறுதிசெய்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.

هذه القصة مأخوذة من طبعة November 24, 2024 من Tamil Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 24, 2024 من Tamil Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MURASU مشاهدة الكل
$9.5 பி. சில்லுத் தொகுப்பு வளாகம்: 3,000 வேலைகள்
Tamil Murasu

$9.5 பி. சில்லுத் தொகுப்பு வளாகம்: 3,000 வேலைகள்

பகுதி மின்கடத்தி நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜிஸ், சிங்கப்பூரில் ஏறத்தாழ 9.5 பில்லியன் வெள்ளி முதலீட்டில் புதிய சில்லுத் தொகுப்பு வளாகத்தை அமைக்கவிருக்கிறது.

time-read
1 min  |
January 09, 2025
Tamil Murasu

$4,000 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவி நிரப்புத்தொகையை 25,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர்

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவி நிரப் புத்தொகையாக வழங்கப்பட்ட $4,000ஐ, 2024ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி 25,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் பயன்படுத்தியுள்ளதாக கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 09, 2025
Tamil Murasu

குறைந்தபட்சப் புள்ளிகள் குறைக்கப்பட்டதற்கான விளக்கம்

தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெறும் மாணவர்கள், அதையடுத்து ஒரே உயர்நிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் போது குறைந்தபட்சப் புள்ளிகள் மேலும் 'கடுமையாக்கப்படும்' நிலையை எதிர்நோக்கலாம் என்று ஜனவரி 8ஆம் தேதி கல்வி மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹவாங் கூறினார்.

time-read
1 min  |
January 09, 2025
Tamil Murasu

இன்டர்போல் தேடும் பட்டியலில் 40 சிங்கப்பூரர்கள்

சிங்கப்பூருடன் தொடர்புடைய ஏறக்குறைய எண்பது பேர் அனைத்துலக காவல்துறையான இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஏறக்குறைய 40 பேர் சிங்கப்பூரர்கள்.

time-read
1 min  |
January 09, 2025
Tamil Murasu

பள்ளிக் காலத்திற்குப் பிறகும் வாசிப்பு முக்கியம்: அமைச்சர் சான்

மக்களின் வேலை சார்ந்த திறன்களை மேம்படுத்தும் முயற்சிகளை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

time-read
1 min  |
January 09, 2025
Tamil Murasu

அடையாள அட்டை எண் பயன்பாடு குறித்து விளக்கம்

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ

time-read
1 min  |
January 09, 2025
சிங்கப்பூரின் போயிங் 737-800 ரக விமானங்களில் கோளாறுகள் கண்டறியப்படவில்லை
Tamil Murasu

சிங்கப்பூரின் போயிங் 737-800 ரக விமானங்களில் கோளாறுகள் கண்டறியப்படவில்லை

சிங்கப்பூரிலுள்ள போயிங் 737-800 ரக விமானங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவற்றில் கோளாறோ நம்பகத்தன்மையற்ற நிலையோ காணப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 09, 2025
பொதுமக்களுக்கு பிப்ரவரியில் முடிவுகள் வெளியிடப்படும்
Tamil Murasu

பொதுமக்களுக்கு பிப்ரவரியில் முடிவுகள் வெளியிடப்படும்

அடையாள அட்டை எண்கள் வெளியான சம்பவத்தை ஆராயும் குழு

time-read
2 mins  |
January 09, 2025
வேலையிடப் பாகுபாட்டைச் சமாளிக்க முக்கிய மசோதா நிறைவேற்றம்
Tamil Murasu

வேலையிடப் பாகுபாட்டைச் சமாளிக்க முக்கிய மசோதா நிறைவேற்றம்

வேலையிடப் பாகுபாட்டைக் கையாளும் முக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 09, 2025
ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம்: வரிச் சலுகைகள் அறிமுகம்
Tamil Murasu

ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம்: வரிச் சலுகைகள் அறிமுகம்

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வரிச் சலுகைகளை மலேசியா அறிமுகப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
January 09, 2025