يحاول ذهب - حر
தீயால் லண்டன் விமான நிலையம் மூடல்
March 22, 2025
|Tamil Murasu
லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 8 மணிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிங்கப்பூர் - லண்டன் இடையிலான குறைந்தது 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது திருப்பிவிடப்பட்டன.
-

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீயால் அந்த விமான நிலையம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) நள்ளிரவு நேரம் வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீயால் விமான நிலையத்துக்கு மின்விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“எங்கள் பயணிகளின், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, ஹீத்ரோ விமான நிலையம் மார்ச் 21 நள்ளிரவு வரை மூடப்பட்டிருக்கும்,” என்று விமான நிலையம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அத்துடன், பயணிகள் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டாம் என்றும் அது அறிவுறுத்தியது. தீயணைப்புக் குழுக்கள் செயலில் இறங்கியுள்ளதாக தெரிவித்த விமான நிலையப் பேச்சாளர் ஒருவர், எப்பொழுது மின்விநியோகம் மீண்டும் தொடங்கும் என்பதில் தெளிவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில் தெரிவித்தார். அதனால், எதிர்வரும் நாள்களில் பயணத் திட்டங்களில் கணிசமான அளவு தடை ஏற்படுவதை எதிர்பார்க்கலாம் என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
هذه القصة من طبعة March 22, 2025 من Tamil Murasu.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Murasu
Tamil Murasu
கோடம்பாக்கத்து வம்புகள், வழக்குகள்
வம்பு, தும்பு, வழக்கு, பிணக்குகளால் பரபரத்தபடி இருக்கிறது கோடம்பாக்கம்.
2 mins
July 27, 2025
Tamil Murasu
டுரியான் மோகம்
ஒவ்வோர் ஆண்டும் தென்கிழக்காசியாவில் வெப்பமண்டலக் காலநிலை தொடங்கும்போது டுரியான் பழத்தின் வாசனை வீசத் தொடங்கும். அதனையடுத்து, சிங்கப்பூரிலும் டுரியான் பழங்களை விற்கும் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும்.
1 min
July 27, 2025
Tamil Murasu
பிள்ளைகள் ஆபாசப் படம் பார்க்காமல் இருக்க பிரிட்டன் நடவடிக்கை
இணையத்தில் ஆபத்தான தகவல்களைப் பிள்ளைகள் பார்க்காமல் இருக்க பிரிட்டன் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
1 min
July 27, 2025
Tamil Murasu
மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.362 கோடி
இந்தியப் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காக ரூ.362 கோடி செலவிடப்பட்டுள்ளது.
1 min
July 27, 2025

Tamil Murasu
தொண்டூழியர்களை அங்கீகரித்த விருதுகள்
இவ்வாண்டின் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் தொண்டூழியர், பங்காளி விருது வழங்கும் விழாவில் தங்கள் சமூகப் பங்களிப்புகளுக்காக ஏறத்தாழ 140 தொண்டூழியர்களும் பங்காளிகளும் விருது பெற்றனர்.
1 min
July 27, 2025

Tamil Murasu
தெங்காவில் ஆண்டு இறுதிக்குள் 15,000 வீடுகள்: சீ ஹொங் டாட்
தெங்கா வட்டாரத்தில் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்ட 30,000 வீடுகளில் கிட்டத்தட்ட 12,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
1 min
July 27, 2025
Tamil Murasu
வெளிநாட்டு ஊழியர் விசா நடைமுறையை மாற்ற அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் வெளிநாட்டு ஊழியர் விசா நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
1 min
July 27, 2025
Tamil Murasu
கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்வோருக்கு வேலையிடத்தில் பல சவால்கள்: ஆய்வு
கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்வோருக்கு வேலையிடத்தில் சில சவால்கள் எழுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. லாப நோக்கமற்ற அமைப்பான ஃபெர்டிலிட்டி சப்போர்ட் சிங்கப்பூர் (Fertility Support Singapore), 504 பேரிடம் தரவுகளைச் சேகரித்தது. 504 பேரில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் பெண்கள், 20 விழுக்காட்டினர் ஆண்கள்.
1 min
July 27, 2025
Tamil Murasu
தங்கத்தைப் பறிக்க முயற்சி; மோசடித் திட்டம் முறியடிப்பு
கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி மாலை வங்கிக் கணக்கிலிருந்த மொத்தப் பணத்தையும் எடுத்தார் 65 வயது நபர். அதை இரு அடகுக் கடைகளுக்கு எடுத் துச் சென்று $52,700 மதிப்புள்ள தங்க வில்லைகளை வாங்கினார்.
2 mins
July 27, 2025

Tamil Murasu
பிறந்த குழந்தைகளிடம் பரம்பரை நோய் பரிசோதனை
கேகே மகளிர், சிறார் மருத்துவ மனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளிடமும் வளர்சிதை மாற்றத்தையும் பரம்பரை நோய் களையும் முன்கூட்டியே கண்டறி வதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1 min
July 27, 2025