
இறந்தவரின் நினைவுகளை வாழ்நாளெல்லாம் சுமக்கவிருக்கும் குடும்பத்தினருக்கு உறுதியான கடப்பாட்டுடன் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தித் தருகிறார், நியூ இந்தியன் காஸ்கெட் சர்விசஸ் நிறுவனத்தின் இறுதிச்சடங்கு நடத்துநர் ரா.துர்கா தேவி.
தமது தந்தை க.ராஜேந்திரன் தொடங்கிய இந்நிறுவனத்தில் 17 வயது முதல் பணியாற்றி வருகிறார் திருமதி துர்கா.
“உயிருடன் இருப்பவர்களை மகிழ்வுறச் செய்வதற்கு பல வழிகள் உண்டு. பிறந்தநாள் உள்ளிட்ட வேறு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அவரவருக்குப் பிடித்தமான செயல்களைச் செய்துகொடுக்க இயலும்.
“ஆனால், இறந்தவர்களை நினைத்து இருப்பவர்கள் துயருறும்போது அவர்களை ஆறுதல் அடையச் செய்வது கடினமான காரியம்.
“அந்தத் தருணத்தில் இறந்தவர்களைக் கண்ணியமாக வழியனுப்பும் வாய்ப்பு மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதால் அதனைக் கடமையாக முடிப்பது இறுதிச்சடங்கு நடத்துநர்களைச் சேர்ந்தது.
“இத்தகைய பொறுப்பை வேறு எந்தத் துறையும் வழங்காது என்பதால் இத்துறையில் நீடிக்கிறேன்,” என்றார் துர்கா.
உணர்வுபூர்வமான சவால்கள்
பெண்கள் பரவலாகக் காணப்படாத துறையாக இது கருதப்பட்டாலும், இத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருவதற்கான காரணங்களுடன் தாம் எதிர்கொள்ளும் சவால்களை துர்கா விவரித்தார்.
“தொடக்கத்தில் இவ்வேலையைச் செய்தபோது பயம் ஏற்பட்டதுண்டு. குறிப்பாக, இறந்தவர்களைக் குளிப்பாட்டுவது, திருப்புவது, உடுத்துவது என்று பலமுறை கலக்கமடைந்திருக்கிறேன்,” என்று கூறிய திருமதி துர்கா, ஒருவர் உயிர் நீத்த அடுத்த நொடியிலிருந்து பணிகள் துவங்குவதால் தாம் சந்திக்கும் முக்கிய சவாலே உணர்வுகள் சார்ந்தது தான் என்றார்.
“இறுதிச் சடங்குகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்காகத் துக்க வீட்டிற்குச் செல்லும்போது, அங்கு துயரத்தில் இருக்கும் பெண்கள், சில நேரம் நானும் பெண்ணாக இருப்பதால் என்னைப் பிடித்துக்கொண்டு அழுவார்கள்.
هذه القصة مأخوذة من طبعة March 22, 2025 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة March 22, 2025 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

வசதி குறைந்த மக்களுக்கு நோன்பு அன்பளிப்புப் பைகள்
நோன்புக் காலத்தை முன்னிட்டு, 106 வசதி குறைந்த குடும்பங்களுக்கு, நியூ காலேஜ் முன்னாள் மாணவர் சங்கத்தினர் அன்பளிப்புப் பைகளை வழங்கியுள்ளனர்.
மெக்சிகோ: காட்டுத் தீயை ஏற்படுத்திய வேன் விபத்து
மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் நிகழ்ந்த வேன் விபத்தில் 12 பேர் மாண்டனர்; நான்கு பேர் காயமடைந்தனர்.

தமிழ்நாட்டில் வெப்பநிலை மூன்று டிகிரிவரை உயரலாம்
வரும் நாள்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

ஐபிஎல் போட்டியை செல்போனில் பார்த்தபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணிநீக்கம்
ஐபிஎல் 2025 பருவம் கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

விஜய்யுடன் இணைந்து நடிக்க விரும்பும் கயாது லோகர்
விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே தமது நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார் 'டிராகன்' பட நாயகி கயாது லோகர்.

2026ல் தமிழகத்தை ஆளப்போறோம்..தவெக சுவரொட்டியால் பரபரப்பு
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கிறது.

தொற்றுநோய்கள் அமைப்புத் தலைவராகும் கென்னத் மாக்
சிங்கப்பூரின் தலைமை மருத்துவ ஆலோசகரான பேராசிரியர் கென்னத் மாக், 'தொற்றுநோய்கள் அமைப்பு (CDA)' எனும் புதிய அரசாங்க அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்காலத்தை ஒளிமயமாக்க விளக்குகள் அணைப்பு
இயற்கைச் சமநிலை சீர்குலைந்ததன் விளைவுகளை உலகம் நேரடியாக உணரத் தொடங்கியுள்ளதாக, உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF Singapore) சிங்கப்பூர் பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி விவேக் குமார் கூறியுள்ளார்.

உலக வணிகத்தில் அடுத்த திருப்பம்: மூத்த அமைச்சர் லீ
அதிகரித்துவரும் உத்திபூர்வ பதற்றத்துக்கும் நிச்சயமற்ற கொள்கைக்கும் இடையே அனைத்துலக வணிகம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஈடுகொடுத்து வளரும் என்று நினைத்துவிட முடியாது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் மேலும் சரிவு
இவ்வாண்டு பிப்ரவரியில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் குறைந்தது.