நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
Thangamangai|Thanga Mangai July 2024
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.
காசு.நாகராசு
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?

கல்விக் கண் திறந்த காமராசர் பிறந்த நாள் என்று அந்த நாளுக்குப் பெயர். அரசின் சார்பிலேயே நாடு முழுவதும் நடத்தப்படுகிறது இவ்விழா.

அது என்ன கல்விக் கண் திறந்த காமராசர்? அப்படியானால் காமராசர் திறந்து வைப்பதற்கு முன் நமக்கு கல்விக் கண் இல்லையா நமது முன்னோர்கள் எல்லாம் கல்வி பெறாத அறிவுக் குருடர்களாகவா இருந்தனர்?

அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாது. மெட்ரி குலேசன், சிபிஎஸ்சி கேந்திர வித்யாலயா, வோர்ல்டு ஸ்கூல், ப்ளேஸ்கூல் என்று பல்கிப் பெருகியிருக்கிற இன்றைய கல்விக் கூடங்களுக்குள் சென்று திரும்புகிற நமது பிள்ளைகளிடம் மேற்கண்டவாறு கேள்விகள் எழுவது இயல்புதான்.

இது 2024; காமராசருக்கு 121 வயது ஆகிறது. அவர் மறைந்தே 40 ஆண்டுகள் உருண்டோடிப் போய்விட்டன. ஆக இன்றைய இளம் தலைமுறையிடம் கேள்விகள் எதிர்மறையாய் எழ வாய்ப்புள்ளது. அதனாலேயே அந்தக் கேள்விகளுக்கு விடை கூறுவதற்காகவே 2006-2011 காலகட்டத்தில் பொறுப்பிலிருந்த அன்றைய அரசு, பள்ளிகளில் இந்த விழாவைக் கொண்டாடச் செய்திருக்கிறது. வழக்கம்போல் தலைவர்களின் பிறந்த நாட்களுக்கு வழங்கப்படுவது போல் விடுப்பை அறிவித்திருந்தால் அது பிள்ளைகளுக்கு வெறும் மகிழ்ச்சியான நாள் அவ்வளவுதான். மாறாக, ஜூலை 15 ஆம் நாளை விழா எடுக்கவைப்பதன் மூலமாகத்தான் காமராசரின் உழைப்பை, சிந்தனையை, அதன் விளைவை வளரும் தலைமுறைப் பிள்ளைகளிடம் விதைக்க முடியும் என்று கருதியிருக்கிறது அன்றைய அரசு.

ஆனால், எதார்த்தத்தில் சுதந்திரம் என்பது மிட்டாய் தின்கிற நாள் என்பதைப் போல காமராசர் பிறந்த நாளும் பெரிதாக கருத்துப் பரப்பலோ, புரிதலோ இல்லாமல்தான் போகிறது. இந்த இடைவெளியை சரி செய்ய வேண்டும் என்கிற முயற்சியாகவே இந்த கட்டுரையை வழங்குகிறது தங்க மங்கை. மேலும் தமிழ்நாட்டிலிருக்கிற அனைத்துக் கல்வி நிலையங்களிலும் காமராசர் படம் கட்டாயம் இருக்க வேண்டும். அதுவும் பெரிதாக இருக்க வேண்டும். கல்வி நிலைய நூலகங்களில் காமராசர் பற்றிய நூல்கள் மாணவர்களின் வாசிப்பிற்கு வைக்கப்பட வேண்டும். கல்வி வளர்ச்சி நாளில் காமராசரின் அரும் பெரும் பணிகளை மாணவர்களுக்கு விளக்கிடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை எல்லாம் முன்வைப்பதும் நமது நோக்கமாக இருக்கிறது.

கல்வி கல்லாதவரின் முகத்திலிருப்பவை கண்கள் அல்ல, அவை புண்கள் என்றார் திருவள்ளுவர்.

هذه القصة مأخوذة من طبعة Thanga Mangai July 2024 من Thangamangai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة Thanga Mangai July 2024 من Thangamangai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من THANGAMANGAI مشاهدة الكل
பட்டை குறியீடு (பார்கோடு)
Thangamangai

பட்டை குறியீடு (பார்கோடு)

பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
தவறுகளும், மாற்றங்களும்..
Thangamangai

தவறுகளும், மாற்றங்களும்..

லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
Thangamangai

எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!

முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
Thangamangai

பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
Thangamangai

மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!

வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
Thangamangai

தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!

ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.

time-read
4 mins  |
Thanga Mangai January 2025
எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
Thangamangai

எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!

வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
Thangamangai

கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!

மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.

time-read
2 mins  |
Thanga Mangai January 2025
திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
Thangamangai

திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!

எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.

time-read
4 mins  |
Thanga Mangai January 2025
உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
Thangamangai

உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

time-read
3 mins  |
Thanga Mangai January 2025