CATEGORIES
Kategorien
கஸல் என்றொரு இறையின் இசை
"கடவுள் மறந்த கடவுச் சொல்" என்ற தலைப்பே கஸலாக இசையை வழியவிடுகிறது.
கே.பாரதியின் ரங்கநாயகி
படித்து ஒரு மாதம் ஓடிவிட்டது. "ஸ்ரீராஜபுரம் குடும்ப விருட்ச" அதிர்வுகள் நிற்கவில்லை. இரண்டு வகை பிரமிப்பு.
அறமற்ற நீட்சி
சட்டத்தை ஏமாற்றி கேஸ் ஆவதற்கு இடம் கொடுக்காமல் அக்கம் பக்கத்தார் அறிவதற்கு முன்னால் தன் வீட்டு உழவனை கையில் வைத்துக்கொண்டு இரவோடு இரவாக இடுகாட்டிலும் இல்லாமல் சுடுகாட்டிலும் இல்லாமல் வயக்காட்டில் போய் புதைத்து விட்டு ஒன்றும் நடக்காததைப் போல் தூங்கி விழித்தனர்.
வாழ்க...வாழ்க..." (வாசிப்பனுபவம்)
இந்தக் குறுநாவலை எழுதிய எழுத்தாளர் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். இன்னொரு அரசியல் கட்சியைப் பற்றியும், அதன் தலைவி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, குறிப்பிட்ட ஊருக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்க, அந்தப் பிரச்சார மைதானத்திற்கு பொது மக்களை, குறிப்பாகப் பெண்களைப் பணம் கொடுத்து அழைத்துச் சென்று, பிரியாணிப் பொட்டலம், தண்ணீர், கட்சிச் சின்னம் போட்ட தொப்பி, பதாகை என்று கொடுத்து உட்கார வைத்து, அடிக்கும் கோடை வெயிலில் நெடுநேரம் காக்க வைத்து, கூடியிருக்கும் சனம் இருக்கவும் முடியாமல், போகவும் முடியாமல் தவித்து, செத்துச் சுண்ணாம்பாகி நிற்கக் கடைசியில் கட்சித் தலைவி வந்து தன் பிரச்சாரத்தைத் துவக்குவதோடு முடிகிறது கதை. தலைவியின் வருகையில் தங்கள் துன்பங்களையெல்லாம் மறந்து வாழ்க கோஷமிடும் மக்கள்.
பூதம் - சிறுகதை
'எல்லாம் என் அம்மாவ சொல்லணும். மாமா பொண்ணலாம் கட்டிவக்காதிங்கன்னு சொன்ன கேட்டா தானா. இப்படி ஒரு குழந்தைய வச்சிட்டு கொரோனால் என்ன பண்ண போரனோ'
ஸ்டாலின்: களமும், வரலாறும்!
அதிகாரம் என்பதை ஒரு அமைப்பின் இயக்க ஆற்றலாகக் கருதும் புரிதலே, 'நிறுவன அதிகாரம்' (Institutional Power) என்பது வெவ்வேறு சிறுசிறு கூறுகளின் கூட்டுச் செயல்பாடு என்ற புரிதலின் அடிப்படை.
ஓர் இரவு வீட்டை நோக்கித் திரும்பும் காமிரா
சோ. ஷைன்சன்
அறிஞர் சோமலெவின் எழுத்தாளுமை
ஒரு மனிதனின் செயல்பாடுகள் தனிமனித ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. இதுபோன் று படைப்பிற்கு ம் படைப்பாளனுக்கும் தனித்துவத்தைக் கொடுக்கின்ற எழுத்தாளுமை நூல்களில் வெளிப்பட்டு நிற்கின்றன. அந்த வகையில் பல்வேறு துறைகளில் தம் திறன் மிக்க எழுத்துகள் மூலம் தனக்கென உரித்தான தனித்துவங்களோடு தமிழுக்கு வளம் சேர்த்தவர் அறிஞர் சோமலெ. அவருடைய எழுத்துகளை உற்றுநோக்குகையில் அதில் பொதிந்திருக்கக்கூடிய அவர்தம் எழுத்தாளுமையினை அடையாளம் காணமுடிகிறது.
அன்னா கரீனினா
குடுவையில் சொட்டுச்சொட்டாய் நிரம்பும் துயரங்களின் வடிவம் தான் 'அன்னா'.
வெந்து தணிந்தது காடு
அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப் பணி புரிகின்றான். வழக்கமாக காலை ஆறுமணிக்கெல்லாம் கிளம்பிவிடுவான்.
மாறா
கதை கதையாம் காரணமாம்...காரணத்திலொரு தோரணமாம்!
பாலசரஸ்வதியின் நடனம்
(ஒரு பாமரனின் நினைவுகள்)
கடைத்தெரு நாயகன்
திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு .
அதிகாரத்துவ பிம்பங்களும் பரிமாணங்களும்
தமிழவனின் ஷம்பாலா
உவகை
இந்த அகமகிழ்ச்சி எதனால் என்பது தெரியவில்லை. பரிதி ஒளிக்க முந்தைய விழிப்பே சிறந்தது. தித்திக்க வந்த ஏதேனும் ஓர் செய்தியா..? விலை போகாமல் மதிப்பற்றுக் கிடந்தவைகள் உயர் மதிப்பு பெற்றதினாலா? அங்கீகாரத் தேடல் அலங்கரிக்கப்பட்டதினாலா? அது என்னவென்று அறியத்தான் எத்தனை ஆவல்! ஏன் என்று கேட்பாரற்று கிடந்த என்னை இயற்கையே ஆசிர்வதித்தது.
சாம்பல் வரிகள்
வெண்புறாக்களின் மீது அழுக்கேறாமல் அமர்ந்திருந்தன மெல்லிய சாம்பல் வரிகள். மணிப்புறாக்களும் சாம்பல் புறாக்களுமாய் அந்த மைதானம் நிறைந்து இருந்தது. அது மைதானமாக இருக்க முடியாது. யாரோ ஒருவரின் நிலமாகவும் இருக்கலாம். கண்ணுக்கெட்டிய வரை செம்மண் காடு. ஆங்காங்கே வானத்தைத் தொட்டுவிடுவேன் என்று பயமுறுத்தும் எறும்பு புற்றுகள். வீடுகள் அதிகமில்லாத மலையடிவாரம்.
தொ.ப. என்கிற ஒரு கருஞ் சட்டை அறிஞர்!
பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்பதாக, எல்லார் மனங்களிலும் அந்த நாட்களில் நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே கருத்தமைக்கப்பட்டிருந்த ஓரூர்!
இந்திய விவசாயிகள் நிலை 2020
டெல்லியில் பெய்யும் கடுமையானப் பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் போக்குவரத்துச் சாலையை ஒட்டி அமர்ந்து போராட்டம் தொடர்கிறது. இந்தச் சூழலைப் பார்ப்பதற்கே நம்பிக்கையாய் இருக்கிறது. இது விவசாயத்திற்கு முக்கியமான தீர்வு பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் விழிமேல் விழி வைத்துக் காத்து நிற்கிறது இந்திய விவசாயக் குடும்பங்கள்.
உடலுணர்தலும், உடலழித்தலும் மற்றுமொரு இருத்தலும்
அசாதாரணமானதே இயல்பாகிப் போனது தற்கால நவீன வாழ்வு. இவ்வாழ்வின் இயல்பு மீறலை உணரக்கூடிய தன்னிலைகள், எப்படி அதற்கு எதிரிடையான வினையாற்றலைச் செய்கிறது என்பது சுவாரசியமானது.
'சூரரைப் போற்று'வோம்! -பெரியாரியப் பார்வையில்!
சென்ற இதழ் தொடர்ச்சி....
நூறாண்டு கண்ட ஐக்கூ கவிதைச் சிந்தனைகள்
மு.முருகேஷின் "மலர்க ஐக்கூ" மும்மொழி நூலை முன்வைத்து
யாத்திரை
சாமியானா பந்தலின் மேற்புறம் காற்றில் அமுங்கியதில் ஒரு பக்கம் குடை சாய்ந்தது போல பள்ளம் ஒன்று உருவாகி மீண்டும் உப்பி புடைத்துக் கொண்டது.
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் (1937-2020)
டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெய பயர்த்த பல நூல்களில் இங்கு பேசுவதற்கு நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட நூல் :
ஆர்.கே.இன் மறுபக்கம்!
தங்கதுரைக்குச் சொந்த ஊர் விருதுநகர். பெரிய தொழிலதிபர். அவருடைய ஆப்செட், லித்தோபிரஸ்கள்தான் தமிழ்நாட்டிலேயே பெரிய அச்சகங்கள். தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளை பரம்பரை, பரம்பரையாய் நடத்தி வரும் குடும்பம். தங்கதுரை பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும், மிகச்சிறந்த இலக்கிய ஆர்வலராகவும், நல்ல எழுத்தாளர்களுக்கு உதவி செய்து அவர்களை ஊக்குவிக்கிற புரவலராகவும் இருந்தது அவருடைய தனிச்சிறப்பு.
க்ரியா ராமகிருஷ்ணன்
டாக்டர் கே.எஸ். மறைந்த செய்தியைச் சொன்ன போது வழக்கத்திற்கு மாறாகப் பதறிப் போனார் ராமகிருஷ்ணன். அடுத்த சில நாட்களில் அவரது மறைவும் பதற வைத்துவிட்டது.
பேராசிரியர் அலெக்சாந்தர் மிகைலோவ் துபியான்ஸ்கி - Professor Alexander Mikhailovich Dubiansky
தமிழுடனான ரஷியத் தொடர்பு கி.பி. 15-ஆம் நூற்றாண்டிலேயே அரும்பிவிட்டது. அபனசி நிகிதினின் (Afanasy Nikitin) முக்கடல்களுக்கு அப்பாலான பயணம் (1466-1472) வாயிலாகப் பணம், இஞ்சி முதலிய சொற்கள் ரஷியர்களுக்கு அறிமுகமாயின.
கரசேவை
புனைக்கதைகள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு நிகழ்வையே தனது பிரதியாக்க உந்து சக்தியாக உபயோகித்துக் கொள்வது வழக்கமான ஒன்று. இருப்பினும் நவீனத்துவம், மற்றும் நவீனத்துவத்திற்கு பிந்தைய நிலையில், பிரதியாக்கப்படும் சிறுகதைப் பிரதிகள் மரபானவைபோல எழுதப்படுவதும் இல்லை, வாசிக்கப்படுவதும் இல்லை.
'சூரரைப் போற்று'வோம்!
பெரியாரியப் பார்வையில்!
வாழ்வின் தாபம்
கோபன்ஹேகன் துறைமுகத்தின் இறக்கத்தில் ஒரு பெரிய வீதி உள்ளது அதனை வெஸ்டர் ஹோல்ட் என்பர். புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. ஆனாலும் கூட்டம் அதிகம் இல்லை. சில வீடுகளே தென்பட்டன. ஆங்காங்கே எரிவாயு விளக்குகள் எரிந்தன. ஆனால் தெரு மனித சஞ்சாரமின்றி காணப்பட்டது. அந்த வெயில் காலத்திலும் மக்கள் நடமாட்டம் இல்லை.
சைகை
"இந்த மரங்களுக்கெல்லாம் யாரு தண்ணீ ஊத்துவாங்க? யாரு ஊத்தினா என்ன ஊத்தலன்னா என்னன்னு எவ்ளோ அழகா, பூப்பூவாப் பூத்து நிக்குதுல?" இப்படித் தன்னைக்குள்ளேயே உரையாடல்கள் நடத்திக் கொண்டு, காரின் ஜன்னல் வழி நெடுஞ்சாலையின் இருபுறமும் நிற்கும் மரங்களைத் தன் பரவசம் பொங்கும் கண்களால் அளந்து கொண்டே வந்தாள் மணிமேகலை.