CATEGORIES
Kategorien
தொடரும் Fitness Mistakes...Correct செய்யும் நேரமிது!
பிறந்திருக்கும் இந்த 2023 புத்தாண்டை மேலும் சிறப்பு மிக்கதாக செய்ய நாம் இந்த வருடம் பல திட்டங்களை வைத்திருப்போம். அதில் எப்போதும் இடம்பெறும் ஒன்று ஆரோக்கியமும், அது சார்ந்த திட்டங்களும். அதற்காக வருடத் தொடக்கத்தில் பலரும் நினைப்பது உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்லவேண்டும் என்பதுதான்.
உள்ளங்கை உலகத்தை சரியாக பயன்படுத்துங்கள்! - டிஜிட்டல் தொழில்நுட்ப இயக்குனர் கார்த்திகா
அரசுப் பள்ளியில் மாணவி. இப் போது மென்பொருள் நிறுவ னத்தின் இயக்குனர். மேலும் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுடன் டிஜிட்டல் உலகம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி தருகிறார் சென்னையை சேர்ந்த கார்த்திகா.
சட்டங்கள் அறிவாய் பெண்ணே! வழக்கறிஞர் அதா
Queer (பால் புதுமையர்), intersex (இடைப்பால்), gender nonQ conforming person (பாலின ஒத்துப் அடையாளங்களுடன் போகாதவர்), transgender person (மருவிய பாலினம்), gender non-binary person (பாலின இரு நிலைக்கு அப்பாற்பட்டவர்), gender dysphoria (பாலின மனவு ளைச்சல்), gender incongruence (பாலின முரண்பாடு), gender fluidity (நிலையற்ற பாலின அடையாளம்), cisgender (மிகை பாலினம்) and pansexuality (அனைத்து பாலீர்ப்பு), 'coming out' (வெளிப்படுத்துதல்), and gender affirmation surgery (பாலின உறுதிப்பாட்டு அறுவைசிகிச்சை), என்று தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினத்தவர்களின் சொல்லாடல்களை மாற்றி அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சினிமா முதல் காதுகுத்து வரை...வந்தாச்சு கஸ்டமைஸ்ட் உடைகள்!
சினிமா துறையில் மட்டு மல்லாது கல்யாணம், நிச்சயதார்த்தம், வளை காப்பு, காதுகுத்து என அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்னிலை வகிக்கிறது உடை அலங்காரம்.
ஒரே நீடில்...அத்தனை நோய்களும் குளோஸ்!
ஒருவரின் நாடித் துடிப்பை கணித்தே அவர் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் அக்குபங்சர் ஸ்பெஷலிஸ்டான டாக்டர் உமா வெங்கடேஷ்.
நலம் காக்கும் நவதானியங்கள்!
கொண்டைக்கடலை பருப்பு வகையாகும். அவை கார்பன்சோ பீன்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.
குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிப்போம்!
கற்றல் என்றதும் கல்வியை மட்டுமே முதன் மைப்படுத்தாமல் வாழ்வில் அத்தியாவ சியமான ஒவ்வொன்றையும் குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்கள் கற்கும் அறிவை நாம் கொடுக்க வேண்டும். பல்வேறு வகையான கற்றல் முறைகளையும் அதனை ஊக்குவிக்கும் வாய்ப்பு களையும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
அங்காடித் தெரு (எம்.சி.ரோடு)
வண்ணாரப் பேட்டை எம்.சி.ரோடு பார்க்க பிரமிப்பாய்தான் இருக்கிறது. முன்பு தி.நகரில் பாண்டி பஜார் எப்படி இருந்ததோ அதே தோற்றத்தில் அதே களேபரத்தோடு இயங்குகிறது.
ஓவியங்கள்தான் என்னுடைய அடையாளம்!
ஓவியர், கதை சொல்லி, நாடக கலைஞர், விளையாட்டு வீராங்கனை என பலவற்றிலும் தனது கால் தடங்களை பதித்து வருகிறார் ஹாரிதா.
சூரியனை வழிபடுவோம் வளம் பெறுவோம்!
இந்திய கலாசாரத்தில் சூரிய வழிபாடு என்பது மிகவும் முக்கிய நிகழ்வாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று சூரியனிலுள்ள திவ்ய சக்தியை அறிவியல் ஆராய்ச்சியினர் ஆராய்ந்து வருகிறார்கள். ஆனால் இதனை நம் வேத கலாசாரம் பல யுகங்களுக்கு முன்பாகவே கண்டுபிடித்துவிட்டது.
இதயத்தின் கேடயமாக மாறும் மசாலாக்கள்!
நம்முடைய உணவில் மிகவும் பிரதானமானது மசாலாப் பொருட்கள். மிளகு, சீரகம் இல்லாமல் ரசம் வைக்க முடியாது. அதேபோல் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை இருந்தால்தான் அது பிரியாணி. சொல்லப் போனால் ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தியதும் இந்த மசாலாக்களுக்காகத்தான்.
2022ல் பெண்கள்
2022 ஆண்டின் சாதனை பெண்கள்
தேங்காய் ஓட்டில் டாலர், கீ செயின்!
நமது சுற்றுப்புற சூழலில் கிடைக்கிற பொருட்களிலிருந்தே அழகான கைவினைப் பொருட்களை தயாரிக்கலாம். அப்படியான ஒன்றுதான் தேங்காய் ஓடுகளிலிருந்து தயாரிக்கப்படும் அணிகலன்கள்.
பெண்களுக்கு ஊன்றுகோலாக நிறுவனங்கள் இருக்க வேண்டும்!
பெண்கள் பல துறையில் தங்க ளின் அடையாளத்தினை பதித்து வருகிறார்கள் என் பது மறுக்கப்படாத உண்மை.
உலகில் எங்கிருந்தாலும் துப்பறியலாம்!
ஒரு விஷயத்தை துப்பறிந்து அதில் உள்ள உண்மையை கண்டறிவது என்பது ஒரு தனிப்பட்ட கலை.
அர்ஜுனா விருதை வென்ற பாராலிம்பிக் பேட்மின்டன் வீராங்கனை
2022-ம்கான மத்திய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, நவம்பர் 30 அன்று விருதுகளை வழங்கி விளை யாட்டு வீரர்களைக் கௌரவப்படுத்தினார்.
மாற்றுத் திறனாளிகளை அரசியல்படுத்தவே
டிசம்பர்-3 இயக்கம்
ஆட்டக்காரி
கரகாட்டக் கலைஞர் துர்கா
மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை
கார்த்திகை ஐயப்பனுக்கு உகந்த மாதம். இம்மாதம் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.
இறுதி அத்தியாயம்!
படித்துக் கொண்டிருக்கும் போது இடையில் ஃபோன் கால் வர ரகசியமாய், இதோ வருகிறேன். ஒரு நிமிஷம் \" என்று போனில் சொல்லிக் கொண்டே மித்ரா எழுந்து போனதிலிருந்து பவித்ராவிற்கு தொடர்ந்து படிப்பது தடைப்பட்டது.
வெளி உலகம் எனக்கு தயக்கமாய் இருந்தது!
எனக்கிருந்த மிகப்பெரிய தடை பயம். பயத்தின் காரணமாக வெளியே வரவும், பிறரிடம் பேசவும் தயங்கி நிற்பேன் என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் ' கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியில் இருக்கும் ஸ்ரீதேவி. தனது தயக்கத்தையும், பயத்தையும் நடிப்பு பயிற்சியின் மூலமாக உடைத்து வெளியில் வந்த கதையை நம்மிடத்தில் விவரிக்க ஆரம்பித்தார்.
தீபத்தின் மகிமைகள்!
வீட்டில் நடைபெறும் விசேஷம் முதல் கடவுளை வழிபடுவது வரை எல்லா வற்றுக்கும் விளக்கேற்றுவது மிகச் சிறந்த பலனைத் தரும் என்று வேத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஸ்சில் ஏறுங்க....ஷாப்பிங் செய்யுங்க!
உடைகளை கைகளால் தொட்டுப் பார்த்து வாங்கினால் தான் ஒரு சிலருக்கு திருப்தியாக இருக்கும்.
காஞ்சிபுரம் பனாரஸ் பட்டில் குழந்தைகளுக்கான பாரம்பரிய ஃபேஷன் உடைகள்!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி யைச் சேர்ந்தவர் மோனிஷா பழனிச்சாமி.
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!-வழக்கறிஞர் அதா
ஒரு குற்றவாளி ஒரு 'கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படலாம், ஆனால் பெண்ணுக்கு அனுமதியில்லை என்றால் என்ன சமூகம் இது? என்கிற கேள்வி இங்கு பலருக்கு இருக்கலாம். மதம், கடவுள், நம்பிக்கை என்று வரும்போது, மேற்கூறியவற்றை உயர்த்தி பிடித்து, சக மனித உணர்வுகளைச் சாகடிக்கும் வலதுசாரிகளாகவும் இருக்கலாம். ஆனால் அந்த விவாதத்திற்குள் போகா மல், மத விவகாரங்களில் பல சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி விவாதித்த வழக்குகளில் சுவா ரஸ்யமானது சபரிமலை வழக்கும் ஒன்று.
குழந்தைகளே...சிறகடித்து பறக்க வாங்க!
சிறகை விரித்து துள்ளிக்குதித்து பறக்கும் பட்டாம்பூச்சிகள் போல்தான் குழந்தை களும். ஆனால் ஒரு சில குழந்தைகளால் மற்ற குழந்தைகள் போல் இயல்பாக இருக்க முடிவ தில்லை.
மார்கழி கச்சேரி டிக்கெட்டுகள் இப்போது இணையத்தில்!
தொழில்நுட்பம் வளர வளர தொ இன்றைய நாகரிகமும் வளர்ந்து வருகிறது.
விலங்குகளோடு இணைந்து வாழ கற்றுக் கொள்வோம்!
உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளால் காட்டில் வாழ முடியாது. காட்டின் அமைப்பு, அங்கு எப்படி தனக்கான உணவினை தேடிக் கொள்ள வேண்டும் என்ற அனைத்து குணாதிசயங்களை இழந்துதான் இவை பூங்காவில் வாழ்ந்து வருகிறது. இங்கு தன்னுடைய அன்றாட உணவிற்கும் மற்றவரை எதிர்பார்க்கும் நிலைக்குதான் காட்டில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த விலங்குகளை கொண்டு வந்துவிட்டோம். இதே மாதிரி மத்த விலங்குகளும் கூண்டிற்குள் அடைப்பட்டு இருக்கக் கூடாதுன்னுதான் நான் இந்த வேலையை செய்கிறேன்\" என்கிறார் யாமினி. ராஜபாளையத்தை சேர்ந்த இவர் விலங்குகளை மீட்கும் பணியினை தன் முழு நேர வேலை யாக செய்து வருகிறார். எந்த நேரத்தில் அழைத்தாலும், உடன டியாக அங்கு செல்லும் யாமினி, சேவை மனப்பான்மையை தாண்டி அந்த ஜீவராசிகள் மேல் இருக்கும் அன்புதான் அவரை இந்த வேலையில் ஈடுபட செய்துள்ளது.
பத்து பேர் தேவையில்லை...ஒரு தோழி உண்மையா இருந்தா போதும்!
தாலாட்டு நாயகி ஸ்ருதி ராஜ்
உலகளவில் என் ஓவியங்கள் புகழ் பெற வேண்டும்!
கோயம்புத்தூர், உள்ளிப்பாளையத்தை சேர்ந்த வர் மோனிஷா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர் தற்போது ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.