CATEGORIES
Kategorien
ஒரு கட்டிலின் கதை
அவ்வளவு பெரிய கட்டிலைத் தான் ஒருவன் மட்டும் தூக்கி வர முடியாது என்பதால் பக்கத்து வீட்டுக் கலியனையும் அழைத்துக்கொண்டு போனான் சின்னான். கட்டிலைப் பார்த்ததும் கலியன் அசந்து போய்விட்டான் . "நீ பெரிய அதிர்ஷ்டக்காரன்தான்டா" என்று சின்னானைப் பார்த்துச் சொன்னான். சின்னானுக்கும் ரொம்ப சந்தோஷமாகத்தான் இருந்தது.
பச்சாதாபம்
நடந்து வந்த நடேசன் "வாசலில் வழுக்கி " விழுந்தார். கையில் ஊன்றுகோலும் இல்லை. வயதும் எழுபத்தெட்டைத் தாண்டி 44 விட்டது. மாலை நேரம் ஆனால் அவருக்கு "கண்பார்வை சரியாக தெரியாது'' என்பதால் சூரியன் இறங்குவதற்குள் ஒரு காக்கா குளியலை முடித்துவிடலாம் என்று நினைத்து குளித்துவிட்டு வந்தவர்.
இதயம் தொட்ட இலக்கியவாதிகள்
கோவை விஜயா பதிப்பகம் அதிபர் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்களை முதன் முதலாக மதுரை காலேஜ் ஹவுஸ் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வின்போதுதான் எனக்குப் பழக்கம்.எழுத்தாளர் திரு.கர்ணன் அவர்களோடு சேர்ந்து இவரிடம் அளவளாவியதாக நினைவு.
கல் தேர் ஓடி... அல்லது ஜே.கே. சிலாகித்த ஆழித்தேர்...
அடுத்த வாரம் குடும்ப நண்பர் சண்முகம் வீட்டுத் திருமணத்திற்கு சென்னை போகும் சமயம் அந்த இரண்டு கோட்டங்களையும் கண்டிப்பாக எப்படியும் பார்த்து விட்டுத்தான் ஊருக்கு திரும்ப வண்டி ஏற வேண்டும் என்பதில் உறுதியாக என் மனைவி இருந்தாள். அவள் பார்க்க விழைந்ததில் ஒன்று ; ரயில் நிலையத்தின் அருகாமையில் இருந்த கந்தகோட்டம்.
அம்பலப்படுத்துதல் எனும் கலை
தேர்தல் அலுவலராக ஒரு கிராமத்தில் பணியமர்த்தப்படுகையில், குறிப்பிட்ட நேரத்திற்கு அவ்வூருக்குச் சென்று, வாக்குச்சாவடியில் தங்கியிருந்து, ஊரார் யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல், தேர்தலை நடத்திக் கொடுத்துவிட்டு, வாக்குப் பெட்டியை எடுத்ததும் பத்திரமாக வீடு திரும்புவதே வழக்கம்.
உம்
எனக்கு ஏன் அப்படி நடந்தது? என்று தெரியவில்லை. இதற்கு நானா காரணம்? இல்லை, என் அலட்சியமா?
ஓரங்க நாடகம்
எங்க ஸ்கூல்ல நாடகம் போடறாங்கப்பா. என்னையவே கதையவும் ஆளுங்களையும் செலக்ட் பண்ணிக்க சொன்னாங்க'' சமையலறையிலிருந்து அக்காவின் நமுட்டுச் சிரிப்பு எதிரொலித்தது.
இந்தியா Vs இத்தாலி
அடிக்கிற வெயிலின் கடுமை தெரியாமல் பூவரச மரநிழலும் வேப்பமரக் காத்தும் இதமாக இருக்கிறது. கேர்லின்டா, அங்குமிங்கும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் பொம்மியை ஆர்வமாய் பார்த்துக்கொண்டு மரத்தடியில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாள்.
ஒருக்கப்பட்டோர் உரிமைக்கான கவச குண்டலம் மாரி செல்வராஜின் 'கர்ணன்'
கதை யாரைப் பற்றியது, அவர், இன்னார் இனியார் என்கிற பராக்கிரமப் பூர்வகோத்திரங்களை எடுத்தியம்பி, 'எதுத்துச் சண்டைபோட எவனுமில்லாத அவனைக் கண்டா வரச் சொல்லுங்க' என, தாங்கள் கண்டு, கேட்டறிந்த 'சூரியனும் பெக்காத கவசகுண்டலமும் கண்டிராத' பொடியன்குளத்தான் கர்ணனின் கதையைக் கட்டியங்கூறி, இழிபிறப்பாய் 'மனு' வின் புத்தியில் குறித்துக் கிடந்து, பொதுப்புத்தியிலும் அந்தப்படியே கரைந்து கிடக்கிற ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்று, ஆதிக்க இடை நிலைச் சாதியினரின் ஒரு சூதகச் சம்பவத்தினூடாக அதற்கெதிராக, அடங்க மறுத்து, அத்து மீறிய, ஓர் எழுச்சியைப் பருண்மையாய்ச் சொல்ல முயன்றிருப்பதுதான், 09-04-2021-இல் திரையில் வெளியாகி, 14-05-2021 இல் ஓ.டி.டி.யில் வெளிவந்திருக்கிற 'கர்ணன்' திரைப்படம்!
ஒரு யோகியின் முக்தி
நான் நான்காவது மாடியில் வசிக்கிறேன். என் வீட்டிற்கு லிப்ட் வசதி கிடையாது. நல்ல காற்றோட்டமாக இருக்கும். ஹெச்.பாலசுப்ரமணியம் அவர்கள் டெல்லியிலிருந்து சென்னை வரும்போது பொதுவாக அண்ணா நகரிலுள்ள புதல்வி உமா வீட்டிலோ அல்லது அம்பத்தூரிலுள்ள அவரது சகோதரி அலமேலு கிருஷ்ணன் வீட்டிலோ தங்குவார்.
கல்விக்காவலர்
கல்விக் காவலர்', 'கல்வி வள்ளல்' மற்றும் 'டெல்டா வேந்தர்' ஆகிய பட்டங்களுக்குத் தகுதியுடையவராக வாழ்ந்து நிரூபித்து மறைந்திருக்கிறார் திரு. பூண்டி கி. துளசிய்யா வாண்டையார்.
கி.ரா
1. சின்ன மாசம் உள்ளே அம்மா நோய்வாய்ப் படுக்கை. அம்மாவைக் காட்டி, "அவங்க ஒன்னு சொல்லுவாங்க, அது ஒங்களுக்குச் சொல்லீருக்கனா, இதுக்கு முன்னால்?" என்று கேட்டார் கி.ரா.
நாடகத் தமிழின் முன்னோடி அகப் பாடல்கள்
'முத்தமிழ்' என்றால் இயல், இசை, நாடகம்' என்று சொல்லப்படுவது வழக்கம். 'முத்தமிழ் விரவிய பாட்டுடைச் செய்யுள்' என்று சிலப்பதிகாரப்பதிகத்தில் வருகின்றது.
பெரியாரின் அறிவாயுதப் பெரும்சொத்து - தோழர் வே. ஆனைமுத்து! (21.06.1925 - 06.04.2021)
என் நினைவு சரியாயிருக்குமென்றால், நான், மானமிகு தோழர் வே.ஆனைமுத்து அவர்களைச் சந்தித்தது, 1983 மே மாதமாய்த்தான் இருக்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் என்னுடன் பணியாற்றிய, வேலூரைச் சேர்ந்த தோழர் து. மூர்த்திதான், அன்றைய வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள (இன்றைய இராணிப்பேட்டை மாவட்டம்) 'சோளிங்க' ரில், பெரியார் சம உரிமைக் கழகத்தின் சார்பில் நிகழயிருந்த 'பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், நாடகம் பற்றி வகுப்பெடுக்க என்னை அழைத்திருந்தார்.
பொய்களில் வழியும் தேன்
கவிதை
பழமையைத் தேடும் இம்மக்கள் எதைத் தேடுகிறார்கள்?
சமீபத்தில் கீழடி கண்டு பிடிக்கப்பட்டபோது தமிழர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள்.
சர்வைவல்
சென்ற இதழின் தொடர்ச்சி.... நல்ல தூக்கம். நேரங்கழித்து மதிய உணவு சாப்பிட்டது. அப்பா வாங்கிக்கொண்டு வந்திருந்த பஜ்ஜிகளில் மீதம் ஒன்று குதறிக்கிடந்தது.
பெரிய வீடு
கவிதை
சின்னச் செருப்பு
செருப்புனா வெளியே போகும் போது போட்டுக்கிட்டுப் போயி வீட்டுக்குள்ளே வரும் போது வாசல்லயே கழட்டி விடுறதுனு நீங்க நினச்சிக்கிட்டு இருந்தீங்கன்னா உங்க நெனப்புல தீய வச்சித்தான் கொளுத்தணும்.
சத்தியஜித் ரேவின் படங்களில் மேற்கத்திய பாதிப்புகள்
Parabaas இணையதளத்தில் 2010-இல் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.
கழிவு என்பது குறுங்கதையா? மர்மத் தொடரா?
தினமும் அவன் காலை ஆறு, ஆறரை மணிக்கு வந்துவிடுவான்.
உப்பு
"அந்த கோழியால எம்புட்டு கஷ்டம்" என்று தெருவின் கடைசியில் இரைத்தேடும் வேறு ஒர் கோழியைப் பார்த்து குறைபட்டுக் கொண்டாள் வாசலில் நின்ற கோமதி.
பேரா. இராம.சுந்தரம் அவர்களின் நினைவேந்தல்
"பல்வேறு சோதனைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், பயன்படுத்தலுக்கும் ஆளான முதலாளித்துவ அறிவியலுக்கு , சோதனைக்கு ஆளாகாத அனுபவத்தாலும் கூர்ந்து நோக்காலும் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலவுடைமை அறிவியல் ஈடுகொடுக்க முடியாது.'' (சுந்தரம், 2004: 1.)
படைப்பாளர்கள் பார்வையில் தேர்தல்
எந்த அணி வெற்றிபெற வேண்டும்? ஏன்?
விதை
வீட்டின் கொல்லைப்புறத்தே ஒரு பழங்கிணறு. கொல்லைப் புறத்தையொட்டி ஒரு அறை. அந்த அறையில் ஒரு கட்டிலும் சாய்வு நாற்காலியும் இருந்தன. அந்த அறையின் கட்டிலில் எப்போதும் படுத்துக் கிடப்பார் விமலின் எண்பது வயது அப்பா ஞானப்பிரகாசம்.
பருவத் துணிக்கை
நீண்ட நேரம் அழுத்தில் அழுகையின் களைப்பு அழுகுரலுக்குப் பிந்தைய மூச்சுத் தெறிப்பில் தெரிந்தது. அலறலோ, பெரிய சிணுங்கலோ இல்லாத அழுகை அது. நான் பேருந்தில் ஏறுவதற்கு முன்பிருந்தே அந்தக் குழந்தையின் அழுகை இருந்தது.
தன்னிலையை எழுதி அவிழ்த்தல்
ஜமாலனின் “உடலரசியல”
செண்பகம் ராமசாமியின் நினைவினூடே நூல்கள் வெளியீட்டேந்தல்
ரல் மார்க்ஸ் தன் சிந்தனையை நிறுத்திக்கொண்ட மார்ச் 14 ஆம் நாளிலே 1998-ஆம் ஆண்டு பேராசிரியர் செண்பகம் அவர்கள் இவ்வுலகை விட்டு விடை பெற்றார்.
சர்வைவல்
தூக்கம் வரலை. நெஞ்சுச் சளி பிடிச்சிருக்கு. படுத்தால் மூச்சுவிட முடியாமல் ஒரு வினோத விசில் சத்தம் சுவாசப்பாதையில்.
கொள்ளிடம்
வாச கூட்டி, சாணி கரச்சி தெளிச்சி, கோலம் போட்டு சாண உருண்டையில பூசணிப்பூ இருக்குற அந்த ஓலை வீட்ட தூரத்திலிருந்து பாக்குறப்ப... ஜோரா இருந்தது.