"மூன்று வருஷத்துக்கு மேலாச்சு, எந்தக் குற்றச் சாட்டும் என் மீது இல்லை. வீசிங் இருக்கு... மாறுதல் கேட்டால் ஸ்வீட் பாக்ஸ் கேட்குறாங்க. எனக்கு அந்தளவிற்கு வசதியில்லை. இப்ப மாறுதல் செய்யப்பட்டிருக்கும் 58 நபர்களில் 90 சதவிகிதம் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து வந்திருக்கின்றார்கள்" என பல இன்ஸ்பெக்டர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜுவாலிடம் ஸ்வீட் பாக்ஸ் மாறுதல் அரசியல் குறித்து பலவிதமாகக் கொட்டித் தீர்த்திருக்கின்றனர் கோவையில்!
சமீபத்தில் கோவை சரகத்துக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 58 இன்ஸ்பெக்டர்களை டி.ஜி.ஜி. சரவணசுந்தர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அந்த இடமாற்ற தல்கள்தான் தமிழகக் காவல்துறை மட்டத்தில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது. காவல்துறையைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஓரிடத்தில் பணியாற்றுபவர்கள், வழக்கமாக பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இவற்றில் 70 சதவிகித இடங்கள் போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க, சரியான காரணங்களின் அடிப்படையில், அவர்கள் ஏற்கெனவே கொடுத்த கோரிக்கைக் கடிதத்தில் கேட்டிருந்தபடி, அந்த இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். மீதமுள்ள 30 சதவிகித இடங்களுக்கு அதிகாரிகள் வழக்கம்போல் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து தங்களுக்கு வேண்டப்பட்ட இடங்களுக்கு பணியிட மாறுதல் பெறுவார்கள்.
இந்த நிலையில், மேற்கு மண்டலத்திலுள்ள சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 58 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் அனைத்து பணியிடங்களுக்கு ஸ்வீட் பாக்ஸ்கள் வாங்கிக்கொண்டு தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் சாதாரணமான காவல் நிலையங்களுக்கு ரூ.5 லட்சம் வரையும், மாநில எல்லையோரமாக அமைந்துள்ள மற்றும் வருமானம் கூடுதலாக வரக்கூடிய காவல் நிலையங்களுக்கு ரூ.20 லட்சம் வரையும் கொடுத்ததாக காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபோல் ஸ்வீட் பாக்ஸ்கள் வாங்கிக் கொண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், உண்மையிலேயே மருத்துவம், குழந்தைகள் படிப்பு உள்ளிட்ட சரியான காரணங்களுக்காக இடமாற்றத்தால் வேண்டி காத்திருந்தவர்களுக்கு, அதிகபட்சமாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
Diese Geschichte stammt aus der September 07 - 10, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 07 - 10, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இறுதிச்சுற்று! தப்பியோடிய கஸ்தூரிக்கு ஜாமீன் மறுப்பு!
நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர் வேஷத்தில் தப்பமுயன்ற ஓம்கார் பாலாஜி! -அதிரடி கைது!
இந்து மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் அர்ஜூன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி, ஈஷா அமைப்புக்கு எதிராக நக்கீரன் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் ஆசிரியரை தரக்குறைவாகப் பேசியிருந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார்.
அண்டப்புளுகன் ஐக்கி...
\"அன்று அழைக்காத ஐ.நா.சபையில் கலந்துகொண்டதாக 'டொக்கு' வாங்கியது நித்தியானந்தா டீம். இன்றோ சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய இமேஜை சரிசெய்யும் விதமாக பணம் கொடுத்து அஜர்பைஜானில் நடந்த காலநிலை மாநாட்டில் வாண்ட்டடாக வண்டி ஏறி...
அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை முன்னிறுத்தும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இறங்கியிருக்க, சில முக்கிய அதிகாரிகளோ, இங்கு தொழில் துவங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கோர்த்து காசு பார்க்கத் துவங்கியிருப்பதாகக் கசியும் தகவல்கள், கோட்டை வட்டாரத்தில் புயலைக் கிளப்பத் துவங்கியிருக்கின்றன.
தொடரும் தாதாயிசம்! மன்னார்குடி அவலம்!
மன்னார்குடியில் தேர்தல் பகையால் அ.தி.மு.க. நிர்வாகியை தி.மு.க. கவுன்சிலரின் கணவர் தனது ஆதரவாளர்களோடு சென்று வெட்டிய விவகாரம் பரபரப்பாகிக் கிடக்கிறது.
ஆரம்ப காலத்தில் என்னை நாடிவந்த பதவிகள்! - டைரக்டர்-ரைட்டர் வி.சி. குகநாதன்
பல படங்களையும், சில நாடகங்களையும் எழுதுவதோடு தயாரிப்பிலும் ஓய்வற்று உழைத்துக்கொண்டு, ஏவி.எம். கதை இலாகா விலும் நான் பணியாற்றி வந்த காலத்திலே என் வண்டியை நானே ஓட்டிப்போவதே வழக்கம். கம்பெனி கார்களை என் டிரைவர்கள் ஓட்டுவார்கள். எனது கம்பெனியில் 60 திரைப்படப் பணியாளர்களுக்கு 69, 70, 71, 72-ஆம் ஆண்டுகளில் மாதச் சம்பளம் கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தேன்.
மாணவிகளுக்கு மது! பாலியல் சீண்டல்! போக்சோவில் ஆசிரியர்!
\"சரக்கு அடிக்குறதில அவதான் எக்ஸ்பர்ட். அப்படியே சாப்பிடுவா அவ மட்டும் என்னவாம்?\" கிண்டலும் கேலியுமாக 9ஆம் வகுப்பு மாணவிகள் பேசிக்கொண்டது பள்ளி வளாகத்தைத் தாண்டி வெளியில் உலாவ, \"மாணவிகளுக்கு மதுவா?\" என உடன்குடி தாலுகாவே களேபரமானது. இதன் தொடர்ச்சியாகக் கட்டாய விடுப்பில் உடற்கல்வி அசிரியர் செல்ல, பெற்றோர்கள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளித் தாளாளரையும் கைது செய்துள்ளது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்துறை.
எடப்பாடியிடம் டீல் பேசும் பா.ஜ.க.!
ஹலோ தலைவரே, தேர்தலைக் குறிவைத்து தி.மு.க. அரசு விறுவிறுப்பாகத் திட்டங்களைத் தயாரித்து வருகிறதே?
டாக்டருக்கு கத்திக்குத்து! அரசுக்கு எதிராக மருத்துவர்கள்!
சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவுத்துறை தலைவர் டாக்டர் பாலாஜி ஜெகன்னாத் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஊழல் ஆதாரங்களை திரட்டும் விஜய்?
இலவசத் திட்டங்களையும் அறிவிப்புகளையும் மட்டுமே அவர் தனது தேர்தல் நேர டெக்னிக் காகப் பயன்படுத்தவிருக்கிறார் என்கிறார்கள்.