குறிப்பாக, அ.இ.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவன், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் அர்ஜுன் ரெட்டி, ஆகியோருக்கு எதிராக நடந்த அதிரடி சோதனைகள் தான் இதன் மையப்புள்ளி. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, சி.எம்.டி.ஏ.வுக்குள் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை உட்பட வெளிவராத பல தகவல்கள் கிடைத்தன.
ஜெயலலிதா தலைமையிலான 2017-2016 அ.இ.மு.க. ஆட்சி காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம். தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர், எடப்பாடியால் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டு ஓ.பி.எஸ். அணியில் இருந்துவருகிறார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி .எம்.டி.ஏ ) தான், சென்னையில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கான அனுமதியை கொடுக்கும் அதிகாரம் பெற்ற நிறுவனம்.
இத்துறைக்கு வைத்திலிங்கம் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், ஸ்ரீராம் ப்ராப்பர்ட் கரமங்கா ரஉயயா உஸ் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம் சுமார் 57 ஏக்கர் பரப்பளவில் 1,452 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டும் இடத்துக்கு 2013-ல் சி .எம்.டி.ஏ வுக்கு விண்ணப்பித்தது. ஆனால், இந்த விண்ணப்பம் 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் வைக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2016-ல் திடீரென்று இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கியது சி .எம்.டி.ஏ ! இதற்கான அனுமதியை வழங்க வைத்திலிங்கத்திற்கு 27.90 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டு என்கிற ஊழல் குற்றச்சாட்டுகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறை புகார் கொடுத்தது அறப்போர் இயக்கம். இதனை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், புகாரை உறுதி செய்திருந்தனர்.
இதன்பேரில், வைத்திலிங்கம் உள்பட 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில், இந்த ஊழல் முறைகேட்டில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்திருப்பதாகக் கூறி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
Diese Geschichte stammt aus der November 30-December 03,2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 30-December 03,2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இந்திய அறுவைச் சிகிச்சை சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.ஆடிய கேம்!
அறுவைச் சிகிச்சை சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.ஆடிய கேம்!சிகிச்சை நிபுணர்கள் சங்கத் தேர்தலில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதுகுறித்து தனிக்குழு அமைத்து குளறுபடிகள் குறித்து விசாரணை செய்யவேண்டும் எனவும், அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.
ப்ளான் B!
'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் முதல் பாகத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா' பாடல் போல் இந்தப் படத்திலும் 'கிஸ்ஸிக்' என்ற ஒரு பாடல் இடம்பெறுத்துள்ளது. இதில் தனது துள்ளல் நடனம் மூலம் கவனம் ஈர்த்த தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
கமிஷன் தகராறு! சிக்கும் மாஜி அமைச்சர்!
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமாக 6.9 ஏக்கர் காலியிடம் இருந்தது. இந்த இடத்தை விற்றுத்தருவதாக பிரபல ரியல் எஸ்டேட் வியாபாரிகள் களான சாமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் இருவரும் சுந்தர்ராஜனிடம் பேசுகின்றனர்.
கேரம் உலக சாம்பியன் காஸிமா! சாதித்த தமிழச்சி!
வட சென்னை பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில், கிரிக்கெட், கால்பந்து, குத்துச்சண்டை போட்டிகளைப் போலவே கேரம் போட்டிக்கும் தனி மவுசு உண்டு. தற்போது இந்த கேரம் விளையாட்டிலும், உலக அளவில் சாதனை படைத்து, தமிழ்நாட்டுக்கே பெருமை தேடித்தந்திருக்கிறார் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காஸிமா என்ற 17 வயது சிறுமி.
இலங்கைக்கு கஞ்சாகடத்தல்! பிடிபட்ட பா.ஜ.க.புள்ளி!
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கிழக்கு கடற்கரைப் பகுதி வழியாகக் கஞ்சா கடத்தப்படுவது குறித்து நக்கீரன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடற்கரையிலிருந்து பைபர் படகுகளில் இரவு நேரத்தில் கஞ்சா பண்டல்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதில் பா.ஜ.க. பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் தகவல் தனிப்பிரிவு போலீசார் மூலம் தஞ்சாவூர் எஸ்.பி. அசிஷ் ராவத்துக்கு அனுப்பப்படுகிறது.
பன்றிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்! -பதறும் விவசாயிகள்!
இதுவரை பன்றியால் பயிர்கள்தான் சேதமானது. இப்பொழுது தங்களது உயிர்களும், உடமைகளும் சேதமாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு மனு செய்துள்ளனர் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினர்.
புரோக்கர்கள் பிடியில் தாலுகா ஆபீஸ்!
பல மாவட்டங்களில் அளுங்கட்சிக்கு எதிராக சத்தமில்லாமல் வருவாய்த் துறையினர் செயல்பட்டு வருகிறார்கள். அதாவது, இ.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தாலும், மக்களிடம் அது சேர்வதில்லை. மக்கள் அந்த நிதி ஒதுக்கீடுக்காக வருவாய்த்துறையின் உயரதிகாரியைப் பார்த்து, \"மனு என்னாச்சு?\" என்றால், \"அவரப் பாத்தீங்களா? பார்த்துவிட்டு வாங்க.. வேலை ஆகும்\" என்கின்ற நிலை ஓவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் காணக் கிடைக்கிறது.
ஜக்கி ஒரு கொலையாளி! -சீறிய முத்தரசன்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், நக்கீரனின் துணிச்சலான ஆராய்ச்சியையும், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்பின் ஆர்ப்பாட்டத்தையும் விமர்சித்து கூறியதாக, \"ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் கொடூர சம்பவங்களை தோலுரித்து வரும் நக்கீரனின் துணிச்சலை பாராட்டுகிறேன்.
அமலாக்கத்துறையின் அடுத்த பாய்ச்சல்!
தமிழகத்தில் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிவருகிறது அமலாக்கத்துறை. கடந்த இரண்டு மாதங்களில் இத்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளின் அடிப்படையில் இந்தப் பாய்ச்சலுக்குத் திட்டமிடப்படுகிறது என்கிறார்கள்.
விஜய்யிடம் பா.ஜ.க. பேரம்!
தமிழகத்திற்கு வரும் ஆடுமலை, நடிகர் விஜய் பேரைச் சொல்லி அடுத்தகட்ட சீனை நடத்தத் தயாராகி வருகிறார். லண்டனுக்குப் போன ஆடுமலை, அவர் தமிழகத்தில் இல்லாத காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழக பா.ஜ.க.வை ஸ்கேன் செய்து பார்த்ததில் ஆடுமலையால் இங்கு ஒன்றுமே வளர்ச்சியில்லை என்ற முடிவுக்கு தேசிய பா.ஐ.க. வந்துள்ளது.