ராமாநாயுடு அவர்கள் என் கதை, வசனம், இயக்கத்தில் ஒரு பெரிய படம்பண்ண விரும்பினார். அதற்கான கதையை ரெடிபண்ணச் சொன்னார். பத்து நாட்களுக்குள் கதையைச் சொன்னேன்... ஓ.கே. ஆனது. ஷோபன்பாபு, ஸ்ரீதேவி, முரளிமோகன், ஜெயசித்ரா,
மோகன்பாபு, ஜமுனா, ஏ.சகுந்தலா, சத்யநாராயணா, அல்லூர் ராமலிங்கய்யா என ஏகப்பட்ட புகழ்பெற்ற நடிகர், நடிகையர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஊட்டி, சிக்மகளூர் என பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.
நல்ல கதை, சுவையான கதாபாத்திரங்கள், பெரிய கம்பெனி என்பதால் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தது.
ஒரு பாடல் காட்சி... காதல் பாட்டு. அதனை சாத்தனூர் அணைக்கட்டுப் பூங்காவில் எடுக்கத் திட்டமிட்டு தேதி பெறப்பட்டது.
'நெஞ்சில் ஓர் ஆலயம்' இந்தி பதிப்பான 'தில் ஏக் மந்திர்' படப்பிடிப்பில் குமார் -மீனாகுமாரியை ஸ்ரீதர் இயக்கும் காட்சியை படம் பிடிக்கும் வின்சென்ட்வாள்மீகி தெருவிலிருந்த சுரேஷ் புரொடக்ஷன்ஸ் ஆபீஸிலிருந்து கிளம்ப ஏற்பாடானது. நான் என் காரில் அலுவலகம் போனேன். அங்கே ஒரு Luxury பஸ் நின்றிருந்தது. நான் என் உதவியாளர்களுடன் என் காரில் செல்ல திட்டமிட்டிருந்தேன்.
அதைப்பார்த்த நாயுடு ஸார், என்னைக் கூப்பிட்டு “எல்லாரும் ஒரே பஸ்ல போகலாமே? நீ வண்டி ஓட்டி சிரமப்பட வேண்டாமே” என்றார். அது சரியாகப்படவே நாங்களும் பஸ்ஸில் ஏறினோம். சில நிமிடங்கள் கழித்து கம்பெனி கார் வந்தது. அதில் ஷோபன்பாபு, ஸ்ரீதேவி வந்தனர். அதில் ராமாநாயுடு ஸாரும் ஏறிக்கொள்ள... வண்டிகள் புறப்பட்டன. எல்லோரும் ஒரே பஸ்ஸில் போகலாம் என்றவர்... நடிக, நடிகையருடன் கிளம்பியது எனக்கு கவலையைத் தந்தது.
காலை டிபனுக்காக மதுராந்தகத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. காரில் வந்தவர்கள் மூவரும் தனியாக சாப்பிட்டனர். மதியம் ஒரு மணிக்கு மேல் சாத்தனூர் அணைக்கட்டு சென்றுவிட்டோம். அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு அனுப்பப்பட்டனர். சாமான் களை வைத்துவிட்டு கை, கால் அலம்பிவிட்டு ஒரு ஓட்டலில் மதிய உணவு சாப்பிடவேண்டும். மறுநாள் காலைதான் படப்பிடிப்பு.
சாப்பாடு முடிந்ததும் என் பழக்கப்படி, என் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கும் இடத்தைப் போய் பார்த்து வசதிகள் எப்படி, வேறு தேவைகள் இருக்கா எனக் கேட்பேன்.
Diese Geschichte stammt aus der December 28-31, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 28-31, 2024-Ausgabe von Nakkheeran.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.