CATEGORIES
Kategorien
முதல்வருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்லவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
வங்கதேசம்: முன்னாள் அமைச்சர் கைது
வங்கதேசத்தின் முன்னாள் ஜவுளி மற்றும் சணல் துறை அமைச்சர் குலாம் தஸ்தகீர் காசி (76) சனிக்கிழமை இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
வங்கதேசம் வரலாற்று வெற்றி
பலம் வாய்ந்த பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே முதன்முதலாக டெஸ்ட் ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்.
மனிதர்களின் பேராசைக்கு இயற்கையின் எதிர்வினை
'வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, மனிதர்களின் பேராசை மற்றும் அக்கறையின் மைகு இயற்கையின் எதிர்வினை' என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் இல்லாத இந்தியா: அமித் ஷா உறுதி
2047-ஆம் ஆண்டுக்குள் போதைப் பொருள் இல்லாத இந்தியா உருவாக்க உறுதி பூண்டுள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
'வளர்ச்சியடைந்த இந்தியா' இலக்கை எட்ட அனைவருக்குமான நீதி மிக முக்கியம்
'வளர்ச்சியடைந்த இந்தியா கனவை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில், அனைவரும் அணுகக்கூடிய நீதிக்கான உத்தரவாதம் முக்கியம்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படுவதில்லை
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு தேவையான நிதி வழங்கப்படுவதில்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
விஜயகாந்த் சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது சிலையை அக் கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
2026-இல் பாஜக ஆட்சிக்கு வரும்
தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சிக்கு வரும் என பாஜக மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
‘நம்ம மெரீனா நம்ம பெருமை' விழிப்புணர்வு இயக்கம்
சென்னை மாநகராட்சி சாா்பில் மெரீனா கடற்கரையில் நடைபெற்ற ‘நம்ம மெரீனா நம்ம பெருமை’ விழிப்புணா்வு இயக்கத்தை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்ச உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
லாரி மோதி அடுத்தடுத்து 10 வாகனங்கள் விபத்தில் சிக்கின
ஒசூர், கோபச்சந்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் பாரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் அடுத்தடுத்து 10 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
மின் கம்பி மீது உரசி வைக்கோல் லாரி எரிந்து சேதம்
திருவள்ளூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட தீ மளமள பரவியதால் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.
லெபனான் மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்
ஹிஸ்புல்லாக்களின் ராக்கெட் தாக்குதல் காரணமாக லெபனான் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீவிர வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது: பிரதமர் மோடி
‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம்; அதில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிவிடக் கூடாது’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தமிழுக்கும் முருகனுக்கும் கிடைத்த வெற்றி
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, தமிழுக்கும் முருகனுக்கும் கிடைத்த வெற்றி என்று உயர்நீதிமன்ற நீதிபதி இரா. சுரேஷ்குமார் தெரிவித்தார்.
மூளுமா மூன்றாம் உலகப் போர்
‘இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அது மூன்றாவது உலகப் போருக்கு வித்திடும்!‘
பிஎஸ்ஜி, செல்டா விகோ வெற்றி
பிரான்ஸ் லீக் 1 கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி கிளப் அணி 6-0 என்ற கோல் கணக்கில் மான்ட்பெல்லியர் அணியை வீழ்த்தியது.
ஓய்வு பெற்றார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன்
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க பேட்டர் ஷிகர் தவன் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
நக்ஸல் எதிர்ப்பு நடவடிக்கைகள்: அமித் ஷா ஆலோசனை
நக்ஸல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 7 மாநில உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
போலந்து-உக்ரைன் பயணம் நிறைவு: தில்லி திரும்பினார் பிரதமர் மோடி
போலந்து, உக்ரைன் ஆகிய இரு நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தில்லி திரும்பினார்.
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
அமெரிக்க தலநகர்வாஷிங்டனில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை சந்தித்தார்.
'அரசு அமைப்புமுறைக்குள் இல்லாத 90% பேர்': ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ராகுல் வலியுறுத்தல்
'இந்தியாவின் மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் அரசு அமைப்புமுறையின் ஒரு பகுதியாக இல்லை; அவர்களை அமைப்புமுறைக்குள் கொண்டுவர ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்' என்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
ஆதிச்சநல்லூரில் உலகத்தர அருங்காட்சியக பணி விரைவில் தொடங்கும்
தூத்துக்குடி மாவட்ட ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் இதய வால்வுகள் தரமானவை
உள்நாட்டில் தயாரிக்கப்படும் இதய வால்வுகள் சா்வதேச தரத்தில் உள்ளதாக ஃபோா்டிஸ் எஸ்காா்ட்ஸ் இதய மருத்துவ மையத்தின் தலைவா் மருத்துவா் அசோக் சேத் தெரிவித்தாா்.
விளையாட்டு மைதானத்துக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை வேறு விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாது
சென்னையில் பள்ளி விளையாட்டு மைதானத்துக்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இலவசமாக வழங்கிய நிலத்தை வேறு காரியங்களுக்கு பயன்படுத்த முடியாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி திரும்பியது மறு பயன்பாட்டு ராக்கெட் : இந்தியாவில் முதல் முறை
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைபிரிட் ராக்கெட் ‘ரூமி - 1’ சனிக்கிழமை சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பட்டிபுலம் என்ற இடத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, அது செயற்கைகோள்களை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தி மீண்டும் பூமிக்கு திரும்பியது.
ஹரியாணா தேர்தலில் தனித்துப் போட்டி:காங்கிரஸ்
'ஹரியாணா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்தே களம் காணும். ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை' என்று அந்தக் கட்சி உறுதிபட தெரிவித்தது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் : ஊதியத்தில் 50% ஓய்வூதியம்
அரசு ஊழியா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்க வகைசெய்யும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு (யுபிஎஸ்) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கோயில்களில் தமிழ் முதன்மை பெற வேண்டும்
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்