CATEGORIES
Kategorien
அதிகரிக்கும் செலவுகளால் சிங்கப்பூரில் சுருங்கும் ஹோட்டல் அறைகள்
சிங்கப்பூரில் சுற்றுப்பயணிகளின் வருகை பெருகியபோதிலும் உயர்ந்துவரும் செலவுகளால் இங்குள்ள விருந்தோம்பல் துறை சில சவால்களைச் சந்தித்து வருகிறது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகம் சிங்கப்பூர் பெண்ணிடம் நடத்தப்படும் விசாரணை
பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூர் பெண் ஒருவர் விசாரிக்கப்பட்டு வருவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ஐஎஸ்டி) தெரிவித்து உள்ளது.
கள்ள சிகரெட்டுகளுக்கு அனுமதி வழங்கியதாக நம்பப்படும் பாதுகாப்பு அதிகாரி $5,000 லஞ்சம் பெற்றதாக சந்தேகம்
கள்ள சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்க மூத்த பாதுகாவல் அதிகாரி ஒருவர் குறைந்தது 4,750 வெள்ளியைக் கையூட்டாகப் பெற்றார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புத்தாண்டு நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்கள்
புத்தாண்டு நெருங்கி வருகிறது. அதனை வரவேற்கும் அதே வேளையின் சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்களும் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைபெறும் எனக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) தெரிவித்தது.
குழந்தைகளின் மனநலனை ஆராயும் புதிய ஆய்வு
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளின் மன ஆரோக்கியம், நரம்பியல் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய ஆழமான புரிதலைக் கண்டறிய ஒரு புதிய ஆய்வை மனநலக் கழகம் தேசியளவில் நடத்தவுள்ளது.
‘சமூகங்களுக்கிடையே புரிதலை ஒருங்கிணைக்கும் வலிமையான பாலம் மொழிபெயர்ப்பு'
சமூகங்களுக்கிடையே நிலவும் ஒருமித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள, அவற்றுக்கு இடையே உள்ள புரிதலை ஒருங்கிணைக்க மொழிபெயர்ப்பு வலிமைமிகு பாலமாகத் திகழ்கிறது என்று கூறியுள்ளார் திரு ச.வடிவழகன்.
2024ஆம் ஆண்டுக்கான முன்னுரைப்பை உயர்த்தியது சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி 3.5%
சிங்கப்பூர் இவ்வாண்டுக்கான வளர்ச்சி முன்னுரைப்பை ஏறத்தாழ 3.5 விழுக்காட்டுக்கு உயர்த்தி உள்ளது.
நெட்டன்யாகுவுக்குக் கைதாணை: உலகத் தலைவர்களின் கருத்துகள்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்குக் கைதாணை பிறப்பிக்க அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுக்கு இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.
மசெக மாநாட்டில் தலைமைத்துவ புதுப்பிப்பு
சிங்கப்பூரை ஆளும் மக்கள் செயல் கட்சி தனது உயர்மட்டக் குழுவை புதுப்பிக்கும் பணியில் இவ்வார இறுதியில் இறங்கவுள்ளது.
இணையப் பாதுகாப்புக்குப் புதிய சட்டம் முன்மொழிவு
இவற்றையொட்டி பொதுமக்களிடமிருந்து பின்னூட்டம் பெற, இரு அமைச்சுகளும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) பொதுக் கலந்தாலோசனை நிகழ்வு ஒன்றை அறிமுகப்படுத்தின.
ஆந்திராவில் 5 ஆண்டுகளில் அனைத்துக் குடும்பங்களுக்கும் வீட்டுமனை
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வீட்டுமனை இல்லாத அனைத்துக் குடும்பங்களுக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீட்டுமனை வழங்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி கூறியுள்ளார்.
வட காஸாவில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
வட காஸாவில் அதிகமானோர் இருந்த குறைந்தது ஐந்து வீடுகள் மீது இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) வெடிகுண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது.
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஜெயம் ரவி
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க இருக்கிறார்.
தனுஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொன்ன நயன்தாரா
நயன்தாரா ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளைப் பயன்படுத்திக் கொண்ட நிலையிலும் தனுஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொல்லி இருப்பது தற்பொழுது பேசுபொருளாகி இருக்கிறது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தல்
அதானி லஞ்ச ஊழல் விவகாரம்
ரூ.279 கோடி செலவில் பிரம்மாண்ட டைடல் பார்க்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அடுத்த புதன்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என குடும்பநல நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
பேருந்து - கார் மோதல்; மூவர் மருத்துவமனையில் அனுமதி
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில், ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சேவை வழங்கும் ஏசி7 பேருந்தும் ஒரு காரும் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தூய்மையான கழிவறையால் அனைவருக்கும் பயன்’
தேசிய சுற்றுப்புற வாரியம், பொதுச் சுகாதார மன்றத்தின் ஏற்பாட்டில் ‘தூய்மையான பொதுக் கழிவறைகள் இயக்கம் 2024’ வியாழக்கிழமை (நவம்பர் 21) தொடக்கம் கண்டது.
தென்கொரியாவில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன: ஹெங்
தென்கொரியாவில் துடிப்புமிக்க நிறுவனச்சூழல் நிலவுவதாகவும் வாய்ப்புகளும் வளங்களும் அங்கு கொட்டிக் கிடப்பதாகவும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.
அருட்கொடைகளை ஆதரிக்கும் புதிய திட்டத்தை நிறுவினார் அதிபர்
சிங்கப்பூர் மற்றும் ஆசியா முழுவதும் அர்த்தமுள்ள நன்கொடைகளை மேம்படுத்தும் இலக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ள ‘இம்பேக்ட்எஸ்ஜி’ (ImpactSG) திட்டத்தை நிறுவினார் அதிபர் தர்மன் சண்முகரத்தினம்.
‘கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை’
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தை உயிர்ப்பிப்பது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று மலேசியாவின் இரண்டாம் நிதி அமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்து உள்ளார்.
சுவையான, புதுவகை உணவை உருவாக்க ஊக்குவிக்கும் மானியம்
சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்த புதிய உணவு வகைகளை உருவாக்குவோரை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது சிங்கப்பூர்.
அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு
லஞ்சம் வழங்க முயன்றதாக உலகப் பெருஞ்செல்வந்தர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை
டிசம்பர் முதல் குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குப் பதிலாக மற்றொரு தெரிவு
மறைந்த முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு
மலேசியாவில் காலஞ்சென்ற முன்னாள் நிதி அமைச்சர் தயிம் ஸைனுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு களிலிருந்து அவர் விடுவிக்கப் பட்டார்.
இது ‘ககன மார்கன்’ கதை
ஒரு கதையை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்த்துவதில் படத்தொகுப்பின் (எடிட்டிங்) பங்கு முக்கியமானது. படத்தொகுப்பு பணி நடக்கும் மேசையில்தான் ஒரு படமே உருவாகிறது என்பார்கள்.
பெற்றோர் பிரிந்ததை உறுதி செய்த ஏ.ஆர்.ரகுமான் மகன்
தனது மனைவி சாய்ரா பானுவைப் பிரிந்துவிட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உறுதி செய்துள்ளார்.
‘இலக்கியவனம்’ நிகழ்ச்சியில் நாலடியாரின் பெருமை
தமிழ் ஆர்வலர்களின் நல்லாதரவோடு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நவம்பர் 16ஆம் தேதி, சிராங்கூன் சமூக மன்றத்தில் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனின் தலைமையில் 'இலக்கியவனம்' நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியுள்ளது.
அமெரிக்க மருத்துவக் காப்புறுதிச் சேவைகளின் தலைவராக டாக்டர் ஆஸ் தேர்வு: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற திரு டோனல்ட் டிரம்ப், அடுத்து அமையவிருக்கும் தமது நிர்வாகத்துக்கான துறைத் தலைவர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.