சென்னையில் வீடுகளில் சமைத்து சாப்பிடுவது குறைந்து, ஓட்டல்களில் சென்று சாப்பிடுவது நாகரிகமாக மாறிவருகிறது. ஒருசிலர் நேரம், காலம் பார்க்காமல் உணவுகளை வெளுத்து வாங்குகின்றனர். உணவு பிரியர்களை வாடிக்கையாளர்களாக வளைத்து போடுவதற்காக பெரிய ஓட்டல்களில் விதவிதமான உணவு வகைகளுடன் மெனு கார்டு வைத்துள்ளனர். அதைப் பார்த்து ஓட்டல்களுக்கு படையெடுக்கும் உணவு பிரியர்களும் உள்ளனர். ஓட்டல்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறிய உணவகங்கள், சாலையோர உணவகங்களிலும் பலவித சைவ அல்லது அசைவ உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் அந்த உணவு சமைக்கும் இடம் சுகாதரமாக இருக்கிறதா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.
தமிழகத்தில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட அசைவ மற்றும் இறைச்சி கடைகளில் பதப்படுத்தி வைப்பதற்கான வசதி இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் சைவ உணவகங்களில் பழைய காய்கறிகளை பயன்படுத்தி சாம்பார் தயாரித்து விநியோகம் செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளது. ஆனால் பழைய சென்னை மாவட்டத்தில் 107 வார்டுகள் மட்டுமே இருந்தது. மற்ற வார்டுகள் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்து உள்ளது. எனவே இந்த பகுதிகளில் கிட்டத்தட்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள், உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனைத் தவிர சிறிய உணவகங்கள் இயங்கி வருகிறது. இதில் பல உணவகங்களின் உணவுக் கூடம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.
சில உணவகங்களில் முறையாக அனைத்தும் செய்தாலும், பாத்திரம் சுத்தமாக இருப்பதில்லை. இதனால் அந்த உணவு எளிதில் கெட்டுப்போகிறது. அத்துடன் வாங்கப்படும் இறைச்சி மற்றும் காய்கறிகள் சுகாதாரமற்ற குளிர்சாதன பெட்டியில் நீண்ட காலமாக வைத்து அதில் இருந்து உணவு தயாரித்து விற்பனை செய்கின்றனர். இவற்றை சாப்பிடுவதால் தான் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும் சில உணவகங்களில் வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சிகள் வரவழைக்கப்படுகிறது. அந்த இறைச்சியை, உணவுக் கூடத்தில் இருக்கும் துருப்பிடித்த உடைந்த குளிர்சாதன பெட்டியில் வைக்கின்றனர். இதனால் இறைச்சியின் மீது பாக்டீரியா பரவும் அபாயம் உள்ளது.
Diese Geschichte stammt aus der October 03, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 03, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி
காசா, உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலாக மனிதாபிமான உதவிகள் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜி20 மாநாட்டில் கூட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மணிப்பூர் தீவிரவாதிகள் மீது 7 நாளில் கடும் நடவடிக்கை
கடந்த ஒன்றரை ஆண்டாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் சமீபத்தில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 3 குழந்தைகள், 3 பெண்கள் என 6 பேர் கடத்திக் கொலை செய்யப்பட்டனர்.
பிரமிக்க வைக்கும் அற்புத ஆட்டக்காரர்
ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் நடந்து வரும் டேவிஸ் கோப்பை பைனல்ஸ் டென்னிஸ் போட்டிகளுடன் ஓய்வு பெறும் டென்னிஸ் உலகின் ஜாம்பவான் வீரர் ரபேல் நடாலுக்கு, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற பிரபல வீரர் ரோஜர் பெடரர் இதயத்தை உருக்கும் வகையில் பிரியாவிடை கடிதம் எழுதி உள்ளார்.
ஐயப்பனுக்கு மாலை அணிந்து தர்காவில் ராம் சரண் வழிபாடு
ஷங்கர் இயக்கி இருக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தில், ஊழல் அமைப்புகளுக்கு எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டுகின்ற ஐஏஎஸ் அதிகாரி வேடத்தில் ராம் சரண் நடிக்க, அவரது ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.
45 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்குவதற்கான அரசாணை
நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வெறுப்பு பிரசாரம் செய்ய ₹500 கோடி செலவு செய்த பாஜ
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு இன்று இறுதி கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
அன்பு, தைரியத்தின் எடுத்துக்காட்டு இந்திரா காந்தி
“அன்பு, தைரியம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டு இந்திரா காந்தி” என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டி உள்ளார்.
உஷாராக இல்லாவிட்டால் உதிரி கட்சிகள் மேலே வந்துடும் 2026 சட்ட மன்ற தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா? சாவா?
அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கள ஆய்வுக்கூட்டம் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
10 ஆண்டாக நடந்த வழக்கு விசாரணை சென்னை வக்கீல் காமராஜை கொன்ற பெண்ணுக்கு ஆயுள்
மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
எல்.ஐ.சி. இணையதளம் இந்தி மொழியில் மாற்றியமைப்பு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் இணையதளப் பக்கம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.