ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாகவும் (செப். 18, 25, அக்.1), அரியானாவில் ஒரே கட்டமாகவும் (அக்.5) சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. காஷ்மீரில் கடந்த 2019ல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டப்பேரவை நடந்துள்ளது. மேலும், அங்கு 10 ஆண்டுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டதால் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அரியானாவில் கடந்த 10 ஆண்டாக பாஜ ஆட்சி நீடிக்கிறது. இம்முறை காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று அரியானாவில் ஆட்சியை கைப்பற்றும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.
இதனால், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இரு மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஜேகேஎன்பிபிஐ கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜ, மக்கள் ஜனநாயக கட்சிகள் (பிடிபி) தனித்து களமிறங்கின. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்றன. ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில், இக்கூட்டணி 49 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
தேசிய மாநாட்டு கட்சி 56 தொகுதிகளில் போட்டியிட்டு 42 இடங்களிலும், 39 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஒரே தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட், அத்தொகுதியை வசமாக்கியது. ஜேகேஎன்பிபிஐ கட்சி 4 தொகுதியில் போட்டியிட்டு நான்கிலும் தோற்றது. தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, பட்காம், கந்தர்பால் ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இவர் புதிய முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியானது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
Diese Geschichte stammt aus der October 09, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 09, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வாயு கசிவால் 2வது முறை மாணவிகள் மயக்கம் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நவீன இயந்திரம் மூலம் சோதனை
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 26ம் தேதி, விஷவாயு கசிவால் பல மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இஸ்ரேல் குண்டுமழை காசாவில் 30 பேர் பலி
பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நள்ளிரவில் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்தனர்.
விண்வெளியில் தினந்தோறும் 16 சூரிய உதயம், அஸ்தமனத்தை காணும் சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
ரஞ்சி கோப்பை 4வது சுற்று தொடக்கம் காலிறுதி முனைப்பில் தமிழ்நாடு
ரஞ்சி கோப்பை தொடரின் 4வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
துபாயில் அஜித்துக்கு விருந்து தந்த மாதவன்
துபாயில் அஜித்துக்கு தடபுடல் விருந்து கொடுத்திருக்கிறார் நடிகர் மாதவன்.அஜித்தும் மாதவனும் நல்ல நண்பர்கள்.
சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன் - நாக சைதன்யா உருக்கம்
நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது.
ஹாலிவுட் நடிகை செலினாவை ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி டார்ச்சர் செய்த வாலிபர் நெட்டிசன்கள் கடும் தாக்கு
செலினா கோம்ஸ் அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை. நடிப்பதோடு மட்டுமின்றி இவர் பிரபல பாப் பாடகியும் ஆவார்.
அமரன் வெற்றி கண்ணீர் சிந்திய விழாவில் - சிவகார்த்திகேயன்
கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான படம் ‘அமரன்’.
சந்திரபாபு நாயுடுவை பதவி விலக சொல்லுங்க யோகி ஆதித்யநாத் போல் ஆட்சி செய்ய பவன் கல்யாண் முதல்வராக வேண்டும் - முன்னாள் அமைச்சர் ரோஜா பேட்டி
ஆந்திர மாநிலத்தில் தவறுகளை தடுக்க முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யுங்கள்என முன்னாள் அமைச்சர் ரோஜா கூறினார்.
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தள்ளிவைப்பு
கர்நாடகாவில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது பிரசாரம் செய்த ராகுல் காந்தி ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.