அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையை சபிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு சென்னை மக்கள் ஆண்டு தோறும் மழை வெள்ளத்தால் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக சென்னையில் வந்து தங்கி ஆங்காங்கே ஆளுயர கட்டிடங்களை கட்டியுள்ளனர். அந்த அளவிற்கு இங்கு மக்கள் தொகை பெருத்துள்ளது. எவ்வளவுதான் வசதிகள் செய்து கொடுத்தாலும் இயற்கையின் முன்பு எதும் நிலைக்காது என்பதற்கு ஏற்ப அடிக்கடி சென்னைவாசிகளை ஆண்டிற்கு இருமுறையாவது இயற்கை எச்சரித்துக்கொண்டே உள்ளது. இவ்வளவு பெரிய சென்னையில் இவ்வளவு மக்கள் தொகை வாழும் இந்த மண்ணில் மொத்தமாக தண்ணீர் வெளியேற 4 வழிகளே உள்ளன. எண்ணூர் முகத்துவாரம், நேப்பியர் பிரிட்ஜ் முகத்துவாரம், அடையாறு முகத்துவாரம் மற்றும் ஒக்கியம் வழியாக கோவளம் முகத்துவாரம் என 4 வழிகளில் மட்டுமே மழைநீர் வெளியேறுகிறது.
ஒரே நேரத்தில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் இத்தவழியில் மட்டுமே நீர் செல்லவேண்டும். எனவே நீர் வெளியே செல்வதில் எப்போதுமே சென்னைக்கு சிக்கல் உள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் பெய்த கனமழையின் காரணமாக சென்னை மக்கள் பல்வேறு பாடங்களை கற்றுத் தேர்த்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழையின்போது தாழ்வான பகுதிகள் உள்ள மக்கள் வீடுகளுக்குள் மழைநீர் வருவதும், அவர்கள் முகாம்களில் தஞ்சம் அடைவதும், மழை விட்டவுடன் மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்து இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி வருகின்றது. இதனை கொஞ்சமாவது மாற்ற வேண்டும் என்ற நோக்கில் சென்னையில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டு அவை ஓரளவிற்கு கைகொடுத்து வருகின்றன.
Diese Geschichte stammt aus der October 17, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 17, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவால் மாணவர்கள் மயக்கம்
திருவொற்றியூர், திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் நேற்று விஷவாயு கசிந்ததால் சில மாணவிகள் மயக்கம் அடைத்தனர்.
புழல் கதிர்வேடு பகுதியில் 78.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு
புழல் கதிர்வேடு பகுதியில் மாநகராட்சி சார்பில் 78.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு திறந்து வைத்தார்.
பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் 72.65 கோடியில் திட்ட பணிகள்
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் 72.65 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
குண்டும், குழியுமான பென்னலூர் சாலை
பென்னலூர் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு
திருப்போரூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து வசதியின்றி அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊருக்கு சென்று சென்னை திரும்பிய மக்கள் பேருந்து வசதியின்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாறுபட்ட ரத்தப்பிரிவு இருந்தபோதிலும் நோயாளிக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை
36 வயதான நோயாளிக்கு மாறுபட்ட ரத்தப்பிரிவு, அதிகரித்த எதிர்புரத அளவுகள் இருந்தபோதிலும் சிறுநீரக மாற்று சிகிச்சையை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட 406.55 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அழிப்பு
தீபாவளி கொண்டாட்டித்தின்போது சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டு எரியூட்டி அழிக்கும் பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.
கொளத்தூரில் ரேஷன் கடைகளை திறந்து வைத்து பொருட்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் ரேஷன் கடைகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொருட்களை வழங்கியதுடன், மேலும் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.