வயநாட்டில் பிரம்மாண்ட ரோட் ஷோ பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்
Dinakaran Chennai|October 24, 2024
ராகுல், சோனியா, மூத்த தலைவர்கள் பங்கேற்பு
வயநாட்டில் பிரம்மாண்ட ரோட் ஷோ பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

ஆயிரக்கணக்கான தொண்டர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட ரோட் ஷோவுக்குப் பின்னர் பிரியங்கா காந்தி நேற்று வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இது இவரது முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சத்யன் மொகேரியும், பாஜ கூட்டணி சார்பில் நவ்யா ஹரிதாசும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் இரவு வயநாடு வந்தார். அவருடன் சோனியா காந்தி, கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரைஹான் வத்ரா ஆகியோரும் வந்தனர். அன்று இரவு இவர்கள் வயநாடு மாவட்டம் பத்தேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். நேற்று காலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தனி விமானம் மூலம் கண்ணூர் வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாட்டுக்கு வந்தனர். நேற்று காலை 11 மணியளவில் கல்பெட்டா புதிய பஸ்நிலையம் அருகே இருந்து பிரமாண்ட ரோட் ஷோ புறப்பட்டது.

Diese Geschichte stammt aus der October 24, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der October 24, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
Dinakaran Chennai

லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ 50ஆயிரம் பேர் வெளியேற உத்தரவு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் காலை மீண்டும் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ ஒரு நாளுக்குள் மளமளவென பரவியது.

time-read
1 min  |
January 24, 2025
டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பேரில் ₹38 லட்சம் மோசடி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பக்கூடிய ஏஜென்ட்டாக செயல்பட்ட 2 பேர் சிக்கினர்
Dinakaran Chennai

டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பேரில் ₹38 லட்சம் மோசடி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பக்கூடிய ஏஜென்ட்டாக செயல்பட்ட 2 பேர் சிக்கினர்

ஆவடி அருகே டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பேரில் ஓய்வு பெற்ற பெண் விரிவுரையாளரிடம் ரூ38 லட்சம் மோசடி செய்த வழக்கில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் ஏஜென்ட்டாக செயல்பட்ட 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

time-read
1 min  |
January 24, 2025
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
Dinakaran Chennai

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் ஸ்ரீ பாசூரம்மன் மற்றும் ஸ்ரீ கங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்ததையடுத்து, நேற்றுமுன்தினம் காலை கும்பாபிஷேக விழா நடந்தது.

time-read
1 min  |
January 24, 2025
Dinakaran Chennai

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) 1 பணியிடம் மற்றும் திருவள்ளூர் காவல் எல்லைக்குட்பட்ட சிறப்பு சிறார் காவல் பிரிவுகளுக்கு பணியாற்றிட ஏதுவாக சமூக பணியாளர்களுக்கான 2 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) – 1 பணியிடத்திற்கு ரூ27,804 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

time-read
1 min  |
January 24, 2025
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக கொடியினை அமைச்சர்கள் ஏற்றி வைத்தனர்
Dinakaran Chennai

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக கொடியினை அமைச்சர்கள் ஏற்றி வைத்தனர்

சாலவாக்கம் ஒன்றியத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைச்சர்கள் ஆர்.காந்தி, சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு. பின்னர், திமுக கொடியினை ஏற்றி வைத்தனர், 500 பேருக்கு பிரியாணி வழங்கினர்.

time-read
1 min  |
January 24, 2025
Dinakaran Chennai

அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை பிரச்னை இந்திய கர்ப்பிணிகளுக்கு முன்கூட்டியே பிரசவம்

அறுவை சிகிச்சை மூலம் பிப்.19க்கு முன் குழந்தை பெற்றுக்கொள்ள அவசரம்

time-read
1 min  |
January 24, 2025
உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிகர் சைப் நடிக்கிறாரா? மகாராஷ்டிர அமைச்சர் கேள்வியால் சர்ச்சை
Dinakaran Chennai

உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிகர் சைப் நடிக்கிறாரா? மகாராஷ்டிர அமைச்சர் கேள்வியால் சர்ச்சை

கத்திக் குத்தில் காயமடைந்த நடிகர் சைப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியே நடந்து வந்ததை பார்க்கையில், அவர் உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா என்ற கேள்வி எழுவதாக அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 24, 2025
வீடுகளுக்கு உணவுபொருள் நேரடியாக விநியோகிக்கும் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரி வழக்கு டிஜிபி, டெலிவரி நிறுவனங்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
Dinakaran Chennai

வீடுகளுக்கு உணவுபொருள் நேரடியாக விநியோகிக்கும் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரி வழக்கு டிஜிபி, டெலிவரி நிறுவனங்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

உணவு மற்றும் மளிகை பொருட்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
January 24, 2025
டெல்லிக்கு ஷீலா தீட்சித் வளர்ச்சி மாடல் தேவை' - ராகுல்காந்தி வலியுறுத்தல்
Dinakaran Chennai

டெல்லிக்கு ஷீலா தீட்சித் வளர்ச்சி மாடல் தேவை' - ராகுல்காந்தி வலியுறுத்தல்

டெல்லி இப்போது முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் வளர்ச்சி மாடலை தான் விரும்புவதாக மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 24, 2025
Dinakaran Chennai

சென்னையில் இன்று தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் அறிவிப்பு

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
January 24, 2025