‘பிளவுவாத அரசியல் நடத்தி நாட்டை பாழ்படுத்தும் பாஜதான் எங்களின் முதல் எதிரி’ என தவெக முதல் மாநாட்டில் நடிகர் விஜய் பேசி உள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை பதிவு செய்தார். பின்னர் தனது கட்சி கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்திய விஜய், கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் என்ற இடத்தில் அக்.27ம் தேதி (நேற்று) நடைபெறும் என அறிவித்தார். இதையடுத்து 85 ஏக்கரில் மாநாட்டு பணிகள் மும்முரமாக நடந்தது. நேற்று முன்தினமே மாநாட்டு திடலுக்கு நடிகர் விஜய் சென்றுவிட்டார்.
அங்கு மாநாட்டு இறுதிக்கட்ட பணிகள் மற்றும் ஏற்பாடுகளை ஆய்வு செய்து நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்குள்ள கேரவனில் தங்கினார். நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொண்டர்கள், ரசிகர்கள் மாநாட்டு திடலில் குவியத் தொடங்கினர். வெயில் அதிகமாக இருந்ததால் குறித்த மாலை 3 மணிக்கே மாநாடு தொடங்கியது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர். முதலில் கட்சியின் பாடல் ஒளிபரப்பப்பட்டது.
தொடர்ந்து பறை இசை, ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் மாலை 4 மணியளவில் கேரவனிலிருந்து மாநாட்டு திடலுக்கு வந்த விஜய் மேடையின் முன்புறம் சுமார் 800 மீட்டர் தூரம் அமைக்கப்பட்டிருந்த ரேம்பில் வந்து தொண்டர்களிடையே கையை அசைத்து காண்பித்தார். தொண்டர்கள் வீசிய கட்சித் துண்டை எடுத்து கழுத்தில் போட்டு கொண்டார். சில துண்டுகளை தொண்டர்கள் மத்தியில் வீசினார். பின்னர் மேடையில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகள், சுதந்திர போராட்ட தியாகிகள், மன்னர்கள் படங்களுக்கு மலர்களை வைத்து மரியாதை செலுத்தினார்.
Diese Geschichte stammt aus der October 28, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 28, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
பல்வேறு திட்ட பணிகளுக்கு எம்எல்எ அடிக்கல்
ஆர்.கே.பேட்டை, நவ: 14: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
எரும்பியில் நடந்த ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அதிமுக அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி ஆகியோர் பங்கு எடுத்து ஆலோசனைகளை வழங்கினர்.
திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம்
கட்டுமாளப் பளரிகளை காணொலி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்
மீசரகண்டாபுரதம் - சாணுர்மல்லவரம் இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
ஆர்.கே.பேட்டை, நவ.14: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மீசரகண்டாபுரம்-சாணுர் மல்லவரம் இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயில்களில் உண்டியல் கொள்ளை
சோழவரம் அருகே கோயிலின் உண்டியலை உடைத்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற 3 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
தண்ணீர் நிரம்பி காணப்படும் கொசஸ்தலை ஆற்று தடுப்பணைகள்
கொசஸ் தலை ஆற்றில், மழைநீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
2வது நாளாக லாரி ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள அதானி மற்றும் காமராஜர் துறைமுகங்களில் சரக்குகள் கையாள்வதில் கால தாமதம் ஏற்படுவதை கண்டித்து கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் 2வது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்றத்தூர் முருகன் கோயிலில் 72.95 கோடி மதிப்பில் திருமண மண்டபங்கள்
குன்றத்தூர் முருகன் கோயிலில் ₹2.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபங்களை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
முன்னாள் திமுக எம்எல்ஏ கோதண்டம் உடலுக்கு துணை முதல்வர் அஞ்சலி
உடல்நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ கோதண்டத்தின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மத்திய பல்கலையில் பயிலும் மாணவர்களிடமிருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.