கடந்தாண்டு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் ரயில்வே நிர்வாகம் மிக குறைவான நிதி கொடுத்ததால் கூடுதல் நிதி கேட்டு 841 பேர் ரயில்வே தீர்ப்பாயத்தில் மனு செய்துள்ளதாக ஆர்டிஐ தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பாலசூர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். 1,000 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு சரியான நிவாரண நிதி கிடைக்கப்படவில்லை.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். இழப்பீடு கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் பல வகையில் ஏமாற்றத்தை தருவது தொடர்ந்து வருகிறது. ஏறத்தாழ நீதிமன்றம் போலவே செயல்படும் இந்த தீர்ப்பாயத்தில் வழக்குகள் நடத்தப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில்வே சார்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை விட இங்கு, அதிகமாக வழங்கப்பட்டதால், பலரும் ரயில்வே தீர்ப்பாயத்தை நாடியுள்ளனர்.
உதாரணத்திற்கு, கர்ப்பிணி பெண்கள் இருவருக்கு ரயில்வே சார்பாக ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், ரயில்வே தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்து வழக்கு நடத்தியதன் முடிவில், ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் மற்றொருவருக்கு ரூ.80 ஆயிரம் வழங்கப்பட்டது. ஒடிசாவில் நடந்த விபத்து நடந்து சில மணி நேரத்திற்கு பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படுமென ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
Diese Geschichte stammt aus der October 28, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 28, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்
போக்குவரத்து போலீசார் வழங்கினர்
161 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
ராகுல் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெறும் வரை போராட்டம்
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது, அசாம் மாநிலம் குவஹாட்டியில் உள்ள பான் பஜார் காவல் நிலையத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்து, அப்பட்டமான ஜனநாயக அடக்குமுறையில் ஈடுபடும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்
மேற்கு வங்க அரசு மேல்முறையீடு
அறங்காவல் குழு தலைவருக்கு அமைச்சர், எம்எல்ஏ வாழ்த்து
சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் அறங்காவல் குழு தலைவருக்கு அமைச்சர் ஆர்.காந்தி, சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய மொபைல் செயலி தொடக்கம்
அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
வையாவூர் ஊராட்சியில் உள்ள மில் ரோடு சீரமைக்கப்படுமா?
கிராம மக்கள் எதிர்பார்ப்பு
பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா துறைகள் வளர்ச்சி பெறும்
மக்கள் பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்
போலி மதுபானம் விற்ற 4 பேர் கைது
பாட்டில், ஸ்டிக்கர் தயாரித்தது அம்பலம்
விண்ணப்பதாரர் உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்ய காலக்கெடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப் 4) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டது.