உணவுப்பொருட்களில் துவங்கி, பெரிய இயந்திரங்கள் வரை எல்லா வகையான பொருட்களையும் கொண்டுசெல்ல லாரி தொழில் முக்கியமானதாக உள்ளது. இந்திய அளவில் 68 லட்சம் லாரிகள் இயங்குகிறது. இத்தொழிலில் 10 கோடிக்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் உள்ளன. இங்கு 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு காலத்தில் மிக லாபகரமான தொழிலாக இருந்த லாரித்தொழில், தற்போது கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் தொகை, ஜி.எஸ்.டி வரி, சுங்க கட்டணம், டீசல் விலை, விபத்து நஷ்டஈடு என பல வகையிலும் இத்தொழிலுக்கு தொடர் நெருக்கடி ஏற்படுகிறது. ஒரு பக்கம் சாலை போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்ய, இன்னொரு பக்கம் லாரி தொழில் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கி நிற்கிறது.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின்-தமிழ்நாடு தலைவர் தனராஜ் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு லாரிக்கு கிளீனராக வருபவர்கள் படிப்படியாக லாரியை ஓட்ட கற்றுக்கொண்டு டிரைவராக பணியாற்றுவார்கள். தற்போது கிளீனருக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லாரி டிரைவருக்கு போதிய வருமானம் இல்லாமல் மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். மற்ற தொழிலுக்கு வட மாநிலங்களில் இருந்து வருவார்கள். ஆனால், லாரி தொழிலுக்கு மட்டும் யாரும் வருவதில்லை. இதனால் லாரி இயக்குவதில் டிரைவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சில நேரங்களில் லாரிக்கு லோடு கிடைத்தாலும், டிரைவர் இல்லாததால் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. வரி மேல் வரி, அபராதம், டீசல், உதிரிபாகம் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி காரணமாக இத்தொழிலில் கடுமையான தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. லாரி தொழிலை சார்ந்துள்ள லாரி புக்கிங் ஆபீஸ், டயர் வல்கனைசிங், பெயிண்டிங், ஒர்க்ஷாப், பஞ்சர் தொழில் என எல்லா உபதொழில்களும் முடங்கிவிட்டன. மிக முக்கியமாக தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் 71 ஆயிரத்து 389 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der November 03, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 03, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
தமிழ்நாட்டை போல இந்தோனேஷியாவிலும் இலவச மதிய உணவு
தமிழ்நாட்டைப்போல இந்தோனேஷியாவிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் ஆட்சி அமைக்க வலதுசாரி கட்சி முயற்சி
ஆஸ்திரியாவில் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வலதுசாரி ஆதரவு ஹெர்பர்ட் கிக்ல் தலைமையிலான சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது.
பிரம்மபுத்திரா மீது உலகின் மிகப்பெரிய அணை இந்தியாவுக்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது
திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டுவதால் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்
அயர்லாந்து மகளிர் அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் மோதும் இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா தலைமை வகிப்பார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
ஆங்கிலம் பேசுவதில் இந்தியா முன்னிலை
பியர்சன் நிறுவனம் உலக நாடுகளின் ஆங்கிலப் புலமை குறித்து ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
கோல்டன் குளோப் விருதுகள் விழா இந்திய படம் வெளியேறியது
82வது கோல்டன் குளோப்ஸ் 2025 கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸில் நடைபெற்றது. 82வது கோல்டன் குளோப்ஸ் நிகழ்ச்சியை பிரபல நகைச்சுவை நடிகையான நிக்கி கிளேசர் தொகுத்து வழங்கினார்.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றிட வேண்டும் என ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
ஒரு பாலின ஈர்ப்பு பிரிவினருக்கான உரிமை பாதுகாப்பு கொள்கைக்கு ஒரு மாதத்தில் ஒப்புதல்
ஒரே பாலின ஈர்ப்பு பிரிவினருக்கான உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் வழங்குவதற்கு தமிழக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
சட்டமன்ற மரபுகளை மதிக்காமல், தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும்
சட்டமன்ற மரபுகளை மதிக்காமல் தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.