வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் தாக்குதலால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சூறாவளிக்காற்றுடன் வரலாறு காணாத மழை பெய்ததால் பல்வேறு கிராமங்கள், குடியிருப்புகள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தன. விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 51 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இருந்து மேற்கு திசை நோக்கி நகர்ந்தது. முன்னதாக பெஞ்சல் புயல் சூறாவளி காற்றுடன் நிலப்பரப்பை எட்டிய நிலையில் அது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு அருகில் கரையை கடப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதலில் முனைப்பகுதியும் அடுத்து மையப்பகுதியான கண் பகுதியும் இறுதியில் வால் பகுதியும் அடுத்தடுத்துக் கடந்தது.
புயலின் கண் பகுதி மையம் கொண்ட புதுச்சேரியில் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 60 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. அப்போது கனமழை கொட்டியதால் முன்னெச்சரிக்கையாக நகரம் முழுவதும் மின் விநியோகம் அடியோடு நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை 8.30 முதல் நேற்று அதிகாலை 5.30 மணி வரை 49 செ.மீ. அளவுக்கு மழை பதிவானது. வரலாறு காணாத இந்த மழையால் புதுச்சேரி ஒயிட்டவுன், அண்ணா நகர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கினர். நகர பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் மேல்தளத்தில் தஞ்சம் அடைந்தனர். வீடுகளில் தவித்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழு, ஆப்த மித்ரா குழுவினர் மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.
Diese Geschichte stammt aus der December 02, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 02, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்
போக்குவரத்து போலீசார் வழங்கினர்
161 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
ராகுல் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெறும் வரை போராட்டம்
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது, அசாம் மாநிலம் குவஹாட்டியில் உள்ள பான் பஜார் காவல் நிலையத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்து, அப்பட்டமான ஜனநாயக அடக்குமுறையில் ஈடுபடும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்
மேற்கு வங்க அரசு மேல்முறையீடு
அறங்காவல் குழு தலைவருக்கு அமைச்சர், எம்எல்ஏ வாழ்த்து
சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் அறங்காவல் குழு தலைவருக்கு அமைச்சர் ஆர்.காந்தி, சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய மொபைல் செயலி தொடக்கம்
அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
வையாவூர் ஊராட்சியில் உள்ள மில் ரோடு சீரமைக்கப்படுமா?
கிராம மக்கள் எதிர்பார்ப்பு
பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா துறைகள் வளர்ச்சி பெறும்
மக்கள் பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்
போலி மதுபானம் விற்ற 4 பேர் கைது
பாட்டில், ஸ்டிக்கர் தயாரித்தது அம்பலம்
விண்ணப்பதாரர் உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்ய காலக்கெடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப் 4) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டது.