இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் திருப்பூர் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை அளித்து வருகிறது. 1930ல் தொடங்கிய திருப்பூர் ஜவுளி உற்பத்தி 1980ல் ரூ50 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்து கடந்த ஆண்டு ரூ35 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகத்தை எட்டியது. கடந்த சில ஆண்டுகளில் சாய ஆலைப்பிரச்னை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா பெருந்தொற்று, மூலப் பொருட்கள் தட்டுப்பாடு, கன்டெய்னர் தட்டுப்பாடு, சர்வதேச நாடுகளில் போர் சூழல், வங்கதேச நாட்டிற்கு அளித்த வரிச்சலுகை உள்ளிட்ட காரணங்களால் திருப்பூர் பின்னலாடை தொழில் மிகப்பெரும் சரிவை சந்தித்தது.
இருப்பினும் சர்வதேச சந்தையில் திருப்பூர் பின்னலாடை துணி வகைகளின் தரத்தின் காரணமாக இழந்த சந்தையை மீண்டும் பிடிப்பதில் ஏற்றுமதியாளர்கள் கவனம் செலுத்தினர். இதன் பயனாக கடந்த 3 ஆண்டுகள் இல்லாத அளவு 2024ம் ஆண்டு சர்வதேச சந்தையில் திருப்பூர் தொழில் துறையினர் மீண்டும் ஏற்றம் காண தொடங்கியுள்ளனர். வங்கதேசத்திற்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகையின் காரணமாக இந்தியாவிலிருந்து மூலப்பொருட்கள் பெற்று குறைந்த செலவில் துணிகள் உற்பத்தி செய்து குறைந்த விலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. இதனால், உள்நாட்டு சந்தையில் உற்பத்தி செய்யப்படும் துணிகளில் மதிப்பு மற்றும் வியாபாரம் குறைந்தது. நிலையில்லாத நூல் விலை காரணமாகவும் போட்டி நாடுகளுடன் போட்டியிட்டு சர்வதேச சந்தையில் ஆடைகளின் விலையை குறைக்க முடியாமல் தொழில்துறையினர் அவதி அடைந்தனர்.
இதற்கு தீர்வாக வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் சூழல் அமைதியான வர்த்தக உறவை விரும்பும் நாடுகளுக்கு இந்தியா தீர்வாக அமைந்தது. இதன் காரணமாக இந்திய ஜவுளித்துறை சர்வதேச அளவில் மீண்டும் வளர்ச்சி பெற துவங்கியது. அதே நேரத்தில் தட்டுப்பாடு இல்லாமல் பருத்தி உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு கிடைத்ததன் காரணமாக கடந்த 9 மாதங்களில் 55 ரூபாய் வரை நூல் விலை குறைந்து ஏற்றுமதியாளர்களுக்கு கை கொடுத்தது. பருத்தி ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் கவனம் பெற்று வந்த இந்தியா, செயற்கை நூலிழை ஆடைகளை உற்பத்தி செய்வதிலும் முனைப்பு காட்டியது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் உள்ள தட்பவெப்ப சூழல், விலை குறைவு, விரைவான உற்பத்தி காரணமாக உலக நாடுகளில் செயற்கை நூலிழை ஆடைகளின் பயன்பாடு அதிகரித்தது.
Diese Geschichte stammt aus der December 07, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 07, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப நிதித்துறை அனுமதி கோரப்பட்டுள்ளது
பேரவையில் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில்
புழல் பகுதி அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்
காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்
திமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் நாசர் வழங்கினார்
பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் கோஷ்டி மோதலால் பரபரப்பு
போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்
பெருவாயில் - ஏலியம்பேடு சாலையில் உடைந்து கிடக்கும் சென்டர் மீடியனால் விபத்து அபாயம்
வாகன ஓட்டிகள் கடும் அவதி
பெஞ்சல் புயல் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுது விவசாயிகள் பாத்திரத்தில் நாற்றுகளுக்கு தண்ணீர் இறைக்கும் அவலம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செவிலிமேடு அருகே 100 கோடியில் நடந்து வரும் பாலாற்று மேம்பால பணியினை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
கோயில் நகரம், பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோயிலை கண்டு ரசித்த ஒன்றிய தேர்தல் அதிகாரி
மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு ஒன்றிய தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் நேற்று மாலை வந்தார். அப்போது, கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகே செங்கல்பட்டு சப் – கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர்.
சாலையை கடக்க முயன்றபோது கலவை லாரி மோதியதில் தனியார் கம்பெனி பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்
நடந்து சென்றவருக்கு 2 கால்கள் முறிவு
கூடுவாஞ்சேரியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த பேருந்து நிழற்குடை
பயணிகள் அச்சம நடவடிக்கை எடுக்க கோரிக்கை