ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டியது. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, நள்ளிரவு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். வீடுகள், நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரைகளில் நண்பர்கள், உறவினர்களுடன் திரண்டதால் உற்சாகம் கரைபுரண்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் புத்தாண்டு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. பழைய 2024ம் ஆண்டுக்கு விடைகொடுத்து, புத்தாண்டை பொதுமக்கள் கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் என அனைத்து பொது இடங்களிலும் வாண வேடிக்கைகளுடன் கேக், இனிப்புகள் வழங்கி விடிய விடிய கொண்டாடி வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளுடன் நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகள், கேளிக்கை விடுதிகள், விருந்தினர் மாளிகைகள், பண்ணை வீடுகளில் மது விருந்துகளுடன், ஆட்டம் பாட்டத்துடன் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
புத்தாண்டை வரவேற்க தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை அனுமதி வழங்கிய கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் நேற்று இரவு 8 மணி முதலே குவிந்தனர். இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் மற்றும் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மேற்பார்வையில் மாநகர கமிஷனர்கள், 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் 38 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் நேற்று முதல் இன்று அதிகாலை வரை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
காவல்துறையின் சிறப்பான முன்னெச்சரிக்கை பணி காரணமாக பெரிய அளவில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுட்டனர். கடற்கரை பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் கடல் நீருக்கு அருகே செல்லாதபடி போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
Diese Geschichte stammt aus der January 01, 2025-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 01, 2025-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
குடியரசு தின அணிவகுப்பில் பிரலே ஏவுகணைக்கு இடம்
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் அணிவகுப்பு பெறும்.
குண்டும் குழியுமான சாலை விபத்துகள் அதிகரிப்பு
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே, பூண்டி ஒன்றியத்தில் போந்தவாக்கம் முதல் மேலக்கரமனூர், புதுச்சேரி, அவிச்சேரி, அனுமந்தாபுரம், அழகிரிபேட்டை ஆகிய 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
தப்பித்து ஓடியதில் கீழே விழுந்து காலில் காயம்
மரபணு மாற்றப்பட்ட கோதுமை சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறதா?
அதிகரிக்கும் கலப்படம் குழப்பத்தில் தவிக்கும் மக்கள் மருத்துவர் திடுக்கிடும் தகவல்
ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்
போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் ஓட்டம்
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதர் மண்டி காணப்படும் நல்லான்குளம்
சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை முடிந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னை திரும்பியதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார்
பாட்னா மாநாட்டில் அப்பாவு சாடல்
காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை
தாய் மாமாவுக்கு 3 ஆண்டு சிறை: கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு